Tuesday, October 27, 2020

சிதம்பரம் தில்லை நடராஜர்

 சிதம்பரம்


பஞ்ச லிங்கங்களுள் ஆகாச லிங்கமாக உள்ள இடம் சிதம்பரம். 


பிண்டமும், பிரமாண்டமும் சமம் என்கிறது. பிண்டம் என்னும் இந்த உடலில் இடப்பக்க நாடியாகிய இடைக்கும், வலப்பக்க நாடியாகிய பிங்கலைக்கும், நடுவில் உள்ள சுழுமுனை நாடியும், பிரமாண்டத்தில் உள்ள நடு இடமான தில்லை என்னும் சிதம்பரம். இங்கு சிவன் ஆனந்த தாண்டவம் புரியும் இடம். 


உடலில் இருக்கும் இருதயம் புண்டரீக வீடு. இருதயத்தில் உள்ளே இருக்கும் பிரம்மமாகிய சிவம் ஆகாயம்.  இதேபோலவே புறத்தில் உள்ள பிரபஞ்ச நிகழ்வும். 


சிதம்பரத்திலே ஞானசபையில் சிவனும் சிவகாமி அம்மையாரும் ஆனந்த தாண்டவம் செய்தனர். சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு வேத சிவ ஆகம விதிப்படி பூசை செய்பவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள் மட்டுமே. இவர்கள் ஆரம்பத்தில் மூவாயிரம் பேர் இருந்தனர். 


சிதம்பரம் என்பதன் பொருள் ஞான ஆகாசம். 

**


No comments:

Post a Comment