Tuesday, October 27, 2020

சஞ்சீவி மலை எங்கு உள்ளது

 சஞ்சீவி மலை எங்கு உள்ளது


சப்த தீவுகள் என்னும் ஏழு தீவுகளில் ஒன்று தான் சான்மலி தீவு. இந்த தீவு, சுரா சமுத்திரம் என்னும் கடலுக்கு நடுவில் உள்ளதாம். அங்கு முள் மரங்களான இலவ மரங்கள் அதிகம் இருக்குமாம். அதனால்தான் அந்த தீவுக்கு சான்மலி தீவு என்று பெயர் ஏற்பட்டதாம். 


குமுதம், உன்னதம், பலாஹம், துரோணம், கங்கம், மகிஷம், ககுத்துமான் என ஏழு மலைகள் அங்கு உள்ளனவாம். அங்குள்ள நதிகளுக்குப் பெயர்கள் யோனி, தோயை, விதிருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, விமோசினி, நிவர்த்தி என்னும் ஏழு நதிகள் உள்ளனவாம். 


இங்கு வசிப்பவர்கள் நிறத்தால் நான்கு பிரிவினர் என்பர். அவர்களை, கபிலர், அருணர், பீதர், கிருஷ்ணர் என்று நான்கு வகைப் படுத்தி உள்ளார். அவர்கள் வாயுவை கடவுளாக வழிபடுபவர்கள். 


அது இப்போதுள்ள ஆஸ்திரேலியா தீவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அனுமன் இந்த தீவுக்கு வந்துதான், சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று புராணம் சொல்கிறது. 


யமனின் தூதர்கள் இங்கு இருப்பார்கள் என்றும், பாவம் செய்தவர்களை இங்கு கொண்டு வந்து, இந்த முள் காடுகளில் புகுத்தி கொடுமைப்படுத்துவது நடக்கும் என்றும் ஒரு கதை உண்டு. 

**


No comments:

Post a Comment