Saturday, April 30, 2016

Macrocosm and Microcosm

Macrocosm and Microcosm

அண்ட-பிண்டங்கள் ஒரே தன்மை உடையன என்பது தத்துவ சாஸ்திரிகளின் கொள்கை; சோதிட சாஸ்திரங்களில் விஷேசமாய் சூரிய சித்தாந்தத்தில் அண்டத்தில் உள்ள நவக்கிரகங்களும் பிண்டத்தில் உள்ள உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன; அதாவது அண்டத்தில் உள்ள வான சோதிகளின் குணங்களை பிண்டத்திலுள்ள பல அங்கங்களும் வைத்திருக்கின்றன;

சூரியன் ஆத்மா என்றும் சந்திரன் தேகம், மனம் என்றும், சொல்லப்பட்டிருக்கிறது;

ஜென்ம லக்கனத்திற்கு ஐந்தாவது இராசி, புத்திரன், மனம் முதலியவைகளைக் காட்டும்; ஐந்தில் இருப்பவன் என்ன கிரகமோ அந்தக் கிரகத்தைக் கொண்டு, சாதகருடைய மனச் சுபாவத்தைச் சோதிடர்கள் சொல்லுவார்கள்;

மனதைக் குறிக்கும் சந்திரனுடன் பூமிகாரகன் செவ்வாய் கூடியிருப்பதால் பிருதிவியின் குணமாகிய லௌகிக விசயத்தில் மனம் செல்லும்; ஆகையினால்தான் மனதைப் பற்றிய நோய் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்;

Lunatic என்றால் லத்தீன் மொழியில் Luna என்பது Moon; லூனாடிக் என்பதை விசரன் என்று சொல்கிறார்கள்; அனுபவத்தில், விசரர்களுக்கு Full Moon பௌர்ணமி காலத்து விசர் அதிகப்படுவதை பார்த்திருக்கலாம்; சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு இல்லாவிடில், இவ்விதம் வருவதற்கு வாய்ப்பில்லை; மேலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடல் வற்று-பெருக்கும் என்பதையும் காண்கிறோம்;

சந்திரனை ஒட்டியே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் விவாகப் பொருத்தம் பார்ப்பார்கள்; சந்திரன் நிற்கும் நிலையையும் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் நிலையையும் பெண்-ஆண் இவர்களுக்கு ஒத்துப் பார்க்கும்போது, இருவருடைய மனமும் ஒரே வகையானதாயும், அவர்கள் ஒரே மனத்தினராயும், லௌகிகத்தில் ஒற்றுமையாய் வாழ்வார்கள் என்று சோதிடர்கள் சொல்வார்கள்;
நன்றி: "சித்தகுமாரன்" நூலிலிருந்து
**

No comments:

Post a Comment