Sunday, April 24, 2016

திருசெந்தூர் முருகன்

17-ஆம் நூற்றாண்டு; மதுரையிலிருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம்! டச்சு நாட்டுக் கடற்கொள்ளைக்காரர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் திருச்செந்தூர்க் கோயிலில் புகுந்து கற்சிலைகளை எல்லாம் உடைத்தனர்

தெற்கு முகம் நோக்கி வீற்றிருந்த பஞ்சலோகங்களால் உருவாக்கப்பட்ட ஆறுமுகப் பெருமானின் விக்கிரத்தை தங்கமென நினைத்து அதனைத் தூக்கித் தங்களின் கப்பலுக்குக் கொண்டு சென்றனர்; நாயக்க மன்னர்களிடமோ வலிமை மிகுந்த கடைப்படை இல்லை; கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் கழிந்திருக்கும்; திடீரென்று பெரும் புயல் அடித்தது; இடியும் மழையும் சேர்ந்து கொண்டது; கொள்ளையர்கள் பயந்துவிட்டனர்; முருகன் சிலைகளை கயிற்றில் கட்டி கடலில் இறக்கி விட்டுவிட்டனர்; புயல் நின்றது; கோயிலில் ஆறுமுகன் சிலையைக் காணாது பக்தர்கள் தவித்தனர்;

வேறு ஒரு நாள்; வடமலையப்ப பிள்ளை என்ற முருக பக்தரின் கனவில் கார்த்திகேயன் தோன்றி, தன் கடலுக்குள் இருக்கும் விபரத்தை தெரிவித்தார்; அங்கு ஒரு எலுமிச்சை பழம் நீரில் மிதந்து கொண்டிருக்கும்; அதுவே நான் கடலுக்குள் இருக்கும் இடம் என்று அடையாளம் காட்டினாராம்! அடையாளங்களைக் கொண்டு, முருகனை மீட்டு எடுத்து வந்தனராம்;

இது நடந்தது: கி.பி. 1653ம் ஆண்டு தை மாதம் 29-ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று கடலில் இருந்து எடுக்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன; கடலுக்குள் சிலை கிடந்ததால், அதை மீன்கள் கொத்தியதாம்; எனவே முருகன் சிலையில் மீன்கள் கொத்திய தடங்கள் இன்னும் இருக்கின்றன;

(நன்றி: வை.அநவரதவிநாயகமூர்த்தி அருளிய "நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை" என்ற நூலிலிருந்து)


No comments:

Post a Comment