Thursday, April 28, 2016

மோகனாங்கி

திருக்கண்ணபுரம்

இங்கு விஷ்ணுதலம் உள்ளது; இங்குதான் காளமேகப் புலவர் இருந்தார்; அவர் ஒரு காதலியை வைத்திருந்தார்; அவள் பெயர் மோகனாங்கி; இவரோ விஷ்ணு பக்தன்; அவளோ சிவ பக்தை;

காளமேகம், இந்த பெண்ணைத் தேடி அவள் வீட்டுக்கு வருகிறார்; அவள், கதைவை திறக்க மறுக்கிறாள்; எவ்வளவு கெஞ்சியும் கேட்பதாக இல்லை; இவருக்கோ அவள்மீது தீராத காதல்;

கடைசியாக, அவள், "நீர், விஷ்ணுவை பாடி வணங்கி வருவதால், நான் கதவைத் திறக்க மாட்டேன்" என்று மறுத்து விடுகிறாள்;

இவருக்கோ தர்ம சங்கடம்; விஷ்ணுவை எப்படி மறப்பது? இவளை எப்படி மறப்பது? விஷ்ணுவையும் பாட வேண்டும்; இவளையும் சமாதானப்படுத்தி கதவைத் திறக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்;

இந்த முதல் அடியை எடுத்துப் பாடுகிறார்;
"கண்ணபுரமாலே கடவுளிலும் நீ அதிகம்...." என்று பாட ஆரம்பிக்கிறார்;

கண்ணபுரக் கடவுளைவிட நீ உயர்வானவள் என்று பாடியதைக் கேட்டவுடன் அவள் கதவைத் திறக்கிறாள்; இவரும் அவள் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்து உள்ளே போய் விட்டார்; அவர் பாடிய பாட்டை முடிக்க வேண்டுமல்லவா!

"உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள்; முன்னமே உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என்  பிறப்பு எண்ணப் போகாதே"

என்று மட்டம் தட்டிவிட்டாராம்;

No comments:

Post a Comment