ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்
அதிகமான ஊர்களில் இந்த பழக்கமான “ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல்” இன்னும் உள்ளது; இதை ஒரு தண்டனையாக
கொடுக்கப்படுகிறது; தன் பஞ்சாயத்து தீர்ப்பை மதிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த
தீர்ப்பை அந்த பஞ்சாயத்தின் தலைவர் வழங்குவார்; ஏமாந்தவர்கள், துணை ஆட்கள்
இல்லாதவர்கள் இவர்களை மட்டும் இப்படி பழிவாங்கிவிடுவர்; ஆள், அம்பாரம்
இருப்பவர்களை இந்த பஞ்சாயத்து ஒன்றும் செய்துவிடாது; அவர்களுக்கு இந்த ப்ஞ்சாயத்து
வாலை ஆட்டிக் காண்பிக்கும்;
இது ஒருவகையில் கொடுமைதான்; சில குடும்பங்கள் இந்த தண்டனையை அனுபவிக்க
முடியாமல் மடிந்தும் இருக்கிறது; ஊரிலேயே வாழவும் முடியாமல் போய் உள்ளது;
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, மகாராஷ்டிர அரசு ஒரு புதிய
சட்டத்தை கொண்டுவரப் போகிறது; அந்த சட்டப்படி, இப்படிப்பட்ட பஞ்சாயத்து
தீர்ப்புகள் “சட்டப்படி செல்லாது” என்றும் அந்த தீர்ப்பை கொடுப்பது “தண்டனைக்குறிய
குற்றம் ஆகும்” என்று ஒரு சட்டத்தை கொண்டுவருகிறது; அதன்படி, எந்த பஞ்சாயத்தாவது
இப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் தீர்ப்பை கொடுத்தால், அதில் சம்மந்தப்பட்ட
பஞ்சாயத்து தலைவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், ஏழு வருட் சிறை தண்டனையும்
உண்டு;
இந்த சட்டத்துக்குப் பெயர் Maharastra Prohibition of Social Boycott Act, 2015. இந்த சட்ட வரைவை (Draft) அரசு
வெப்-சைட்டிலும் வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது;
தமிழக அரசும் அதை பார்த்து ஒரு புதிய சோசியல் பாய்காட் தடை சட்டத்தை
கொண்டுவரலாம்; ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை; இல்லை என்றே நினைக்கிறேன்;
_______________
No comments:
Post a Comment