“பென்காசி தாக்குதலும் கிலாரி கிளிண்டனும்”
லிபியா நாட்டில் உள்ளது பென்காசி நகரம்; இங்கு அமெரிக்கத் தூதரகம்
உள்ளது; அதில் அந்த லிபியா நாட்டுக்குத் தூதுவராக அமெரிக்க தூதுவர் (தூதர்)
கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் பதவியில் இருந்தார்;
2012ம் வருடம் செப்டம்பர் 11; திடீரென்று லிபியாவில் உள்ள அமெரிக்க
தூதரகத்தை அங்குள்ள சில பயங்கரவாதிகள் தாக்கினர்; அப்போது அங்கிருந்த அமெரிக்க
தூதரக கட்டிடத்தில் இருந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், மற்றும்
அமெரிக்க உயர் அதிகாரியான சீன் ஸ்மித் உள்ளிட்ட நான்கு அமெரிக்கர்கள் இந்த
தாக்குதலில் பரிதாபமாக உயிர் இழந்தனர்;
பொதுவாக அமெரிக்க தூதரகங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அந்த
அமெரிக்கநாடு செய்திருக்கும்; ஆனால் இங்கு ஏதோ பாதுகாப்பு குறைபாடு இருந்ததால்தான்
இவ்வாறு அமெரிக்க தூதரே தாக்குதலில் உயிர் இழக்க நேரிட்டது என அமெரிக்க மக்கள்,
அமெரிக்க அரசாங்கத்தின் மீதே கோபத்தில் இருந்தனர்; அப்போது வெளியுறவுத்துறை
அமைச்சராக இருந்தவர் கிலாரி கிளிண்டன்; இவர் மீதும் அமெரிக்க மக்கள் கோபத்தில்
இருந்தனர்;
லிபியா நாட்டில் கடாபி ஆட்சி; அங்கு கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி
செய்கிறார்கள் என்பதும் தெரியும்; அப்படிப்பட்ட சூழலில், ஏன் அமெரிக்க அரசும்,
வெளியுறவுத்துறை அமைச்சரான கிலாரி கிளிண்டனும் அந்த பென்காசி நகரத்திலுள்ள
அமெரிக்க தூதரகத்துக்கு போதிய பாதுகாப்பை முன்கூட்டியே ஏற்படுத்தவில்லை என்ற
கேள்வி அமெரிக்க மக்களிடம் இன்னும் இருந்து வருகிறது; இந்த கிலாரி அம்மையார்
ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்; (அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கும் கட்சிதான் இது); இதில்
அமெரிக்க எதிர்கட்சி குடியரசு கட்சி; இந்த எதிர்க்கட்சி கிலாரி கிளிண்டன்
அம்மையார் மீது குற்றச்சாட்டை அடுக்கியது;
இந்த பென்காசியில் உள்ள அமெரிக்கு தூதரகத்தில், அங்குள்ள
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கிலாரி அம்மையாருக்கு தெரிந்தும், அதை
வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்றும் பெரிய குற்றச்சாட்டு அவர்மீது இன்றும்
இருந்து வருகிறது.
இப்போது, கிலாரி அம்மையார், ஜனநாயக கட்சியில் அமெரிக்க அதிபர்
தேர்தலுக்கு நிற்க உள்ளார்; அமெரிக்காவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தால்,
அதை அமெரிக்க பார்லிமெண்ட் கமிட்டி விசாரனை செய்யும் என்பது மரபு; எனவே அந்த
கமிட்டியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, இந்த கிலாரி அம்மையாரை சரமாரி கேள்விகளைக்
கேட்டு பென்காசி படுகொலை சம்மந்தமாக விசாரனை செய்தது; கிலாரி அம்மையாரும்
23.10.2015ல் இந்த குழுவின் முன்னர் ஆஜராகி அதற்கு சளைக்காமல் பதில் அளித்தார்; “இந்த
பயங்கர நிகழ்வு எனக்கு முன்கூட்டியே தெரியாது; நான் எதையும் மறைக்கவும் இல்லை;
அரசியல் காரணமாக எதிர்கட்சி என்மீது பழி போடுகிறது; இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை
ஏதும் இல்லை” என்று தன்னிடம் இருந்த ஆதாரங்களுடன் மறுத்தார்;
கிலாரி அம்மையார் கட்சியைச் சேர்ந்தவர்களான ஜனநாயக கட்சியைச்
சேர்ந்தவர்கள், இந்த அம்மையாரின் துணிச்சலான ஆதாரத்துடன் கூடிய பதிலை
புகழ்ந்துள்ளனர். விசாரனைக்குழு என்ன செய்யப் போகிறதென்று தெரியவில்லை!
நடிகர் கவுண்டமணி சொன்னதுபோல, அரசியலில் இதெல்லாம் சகஜமாகத்தான்
இருக்கும்போல!
**
No comments:
Post a Comment