விலங்குகளுக்கும் அடிப்படை உரிமை
அடிப்படை உரிமை என்பது Fundamental Right; இதை
ஜனநாயகத்தை பின்பற்றும் எல்லா நாடுகளும் அந்த நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ளன;
தனிமனித உரிமைகள் இவைகள்; இது மனிதனுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா?
விலங்குகளுக்கும் இந்த உரிமை கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது;
பறவைகளுக்கும் அடிப்படை உரிமை உண்டு; அதை கூண்டில் அடைத்து வைக்க
மனிதனுக்கு உரிமை இல்லை; ஒரு வழக்கில், குஜராத் ஐகோர்ட் இத்தகைய தீர்ப்பை
பறவைகளுக்கு வழங்கி உள்ளது; அதை எதிர்த்து அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்தது. வெள்ளிக்கிழமை
விசாரனை நடந்த்து; அதில் சுப்ரீம் கோர்ட் தனது முடிவைப் பின்னர் சொல்வதாக
சொல்லியுள்ளது.
பறவைகளை கூண்டில் அடைத்துவைப்பது, இறக்கைகளை வெட்டிவிடுவது; இறக்கைகளை
செலோ டேப் கொண்டு ஒட்டி விடுவது, காலில் பெரிய வளையம் மாட்டி அவைகளை பறக்கவிடாமல்
செய்வது, இப்படிப்பட்ட கொடுமைகளை செய்கிறார்களாம்;
இறைவன் பறவைகளை இயற்கையாக பறந்த திரியவே படைத்துள்ளான்; அதை அடைத்து
வைப்பது எந்த வகையில் நியாயம்; அவைகள் உரிமைகள் பாதிக்கப்டுகின்றன என குஜராத்
ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்துள்ளது;
இயற்கை கொடுத்த வரத்தை யார் கட்டுப்படுத்தினாலும் அது உரிமை மீறலே!!
________________
No comments:
Post a Comment