நினைவுகளும்
கூடவே....
இந்தியாவைவிட கனடா நாடு சுமார் மூன்று மடங்கு நிலப்பரப்பில் பெரியது;
இந்தியா 32 லட்சம் சதுர கி.மீ; கனடா 1 கோடி சதுர கி.மீ. கனடாவில் இப்போதுதான் தேர்தல்
நடந்த முடிந்து அங்கு லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்து ஆட்சி மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது; அதன் புதிய பிரதமராக Justin Trudeau ஜஸ்டின்
ட்ரூடவ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்; இவருக்கு 42 வயதுதான் ஆகிறது; திருமணம்
ஆகி மூன்று குழந்தைகளும் உள்ளன; கடைசி குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு இயல்பாக திரிகிறார்;
இவர் கனடாவின் 23வது பிரதமராம்;
நேற்று இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும் பார்லிமெண்ட் கட்டிடத்துக்குள்
சென்றுள்ளனர்; கட்டிடத்தில் யாருமே இல்லை; கட்டிடத்தின் ஒவ்வொரு பிரமாண்ட அறையும்
சுற்றிச் சுற்றி வருகின்றனர்; ஒரு ஹாலில் வந்தவுடன் அங்கு நின்று, தன் இரண்டு
விபரம் தெரிந்த குழந்தைகளிடமும் ஒரு போட்டோவைக் காட்டி (portrait)
கேட்கிறார்; “இவர் யாரென்று தெரிகிறதா?” அங்கு இவ்வாறு பல போட்டோ பிரேம்கள் உள்ளன;
எல்லாமே முன்னாள் பிரதம மந்திரிகளின் போட்டோக்களாம்; மகனும், மகளும் பதில்
சொல்கிறார்கள், “தாத்தா! நம்ம தாத்தா பியர் Pierre” என்று.
ஆம், உங்களின் தாத்தாதான் என்று, இப்போது புதிதாய் பிரதமரான ஜஸ்டின்
ட்ரூடவ் தன் குழந்தைகளிடம் ஆமோதிக்கிறார்;
“இன்று அவர், (தாத்தா) நம்மைப் பற்றி பெருமையாக நினைத்துக்
கொண்டிருப்பார்; நாமும் அவரைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருப்போம்”
சரிதானே?
அவ்வாறு சொல்லியபடி, அந்த போட்டோவை கொஞ்ச நேரம் தழுவிக் கொண்டிருந்துவிட்டு,
“சரி போகலாமா?” என்று அங்கிருந்து நகருகிறார்கள்.
இவரின் தகப்பனார், கனடாவில் 1968 முதல் 1984 வருடங்கள்வரை பிரதமராக பதவி
வகித்தவர்;
நினைவுகளில் சில....
நினைவுகளில் சில....
**
No comments:
Post a Comment