மொபைல் போன் பேச்சும் ஒரு ஆதாரமே!
மொபைல் போன் பேச்சை மொபைலிலேயே டேப் செய்து வைத்திருந்ததை ஒரு சட்ட
ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு
வழக்கில் எழுந்தது; ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்த
பிரச்சனை ஏற்பட்டது;
குற்றவாளிக்கும் அந்த சிறுமி வீட்டாருக்கும் ஏற்கனவே சொத்துப்
பிரச்சனை இருந்து வந்தது; அதனால், அந்த குற்றவாளிமீது இந்த பொய் வழக்கை
போட்டிருப்பதாக குற்றவாளி சொல்கிறார்; அதற்கு ஆதாரமாக மொபைல் போனில் பேசிய பேச்சை டேப்
செய்யப்பட்டு அந்த சீடியை ஆதாரமாக கொடுக்கிறார் குற்றவாளி; அதை கீழ்கோர்ட்டுகள்
ஏற்றுக் கொள்ளவில்லை.
சுப்ரீம் கோர்ட், இந்த சீடி ஆதாரத்தை ஏற்றுக் கொண்டது; அது உண்மையான
ஆட்கள் பேசிய குரல்தானா என்று மட்டும் பரிசோதித்துக் கொண்டால் போதும்; அதை ஒரு
ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் இந்த வாரம்
தீர்ப்பளித்துள்ளது;
குற்றவாளி, இந்த டேப்பை கோர்ட்டுக்கு கொடுத்து, அவர் இந்த வழக்கில்
நிரபராதி என்று வாதாடுகிறார்;
எனவே இனி டேப் செய்யப்பட்ட சீடிக்களை ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம்
என முடிவாகி உள்ளது; இதையே கீழ்கோர்ட்டுகளும் பின்பற்றலாம்;
No comments:
Post a Comment