நண்டு சிப்பி
வேய் கதலி நாசமுறும் காலத்தில்
கொண்டகரு
அழிக்கும் கொள்கை போல் - ஒண் தொடி
போதம் தனம் கல்வி
பொன்ற வரும் காலம் அயல்
மாதர் மேல்
வைப்பார் மனம்.
நண்டு = நண்டு;
சிப்பி = சிப்பி;
வேய் = மூங்கில்;
கதலி = வாழை;
நாசமுறும்
காலத்தில் = அழியும் நேரத்தில்;
கொண்ட கரு
அழிக்கும் = அவைகளின் கருவான முறையே நண்டு தன் குஞ்சையும், சிப்பி தன் முத்தையும், மூங்கில் தன்
அரிசியையும், வாழை தனது குலையையும் இழந்துவிடும்;
கொள்கைபோல் =
அதுபோல;
ஒண்தொடி = வளையல்
அணிந்தவளே!
போதம் தனம் கல்வி
பொன்ற வரும் காலம் = வித்தை, செல்வம், அறிவு இவைகள் அழியும் காலத்திலே;
அயல் மாதர் மேல்
வைப்பார் மனம் = பிற பெண்கள் இடத்திலே ஆசை கொள்வார்கள்.
No comments:
Post a Comment