சிவனின் குமாரர்களில் ஒருவர் இந்த வீரபத்திரர்.
சிவனையும், உமாதேவியாரையும்,
தக்ஷன் அவமதித்ததன் காரணமாக சிவன் கோபித்துக் கொண்டு தனது நெற்றிக்
கண்ணை விழிக்க, அதிலிருந்து தோன்றியவர்தான் இந்த
வீரபத்திரர். தோன்றியவுடனே இந்த வீரபத்திரர், தக்ஷனைக்
கொன்றார். உடனே தேவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனை கெஞ்சி அவர்கள் செய்த பிழையை
மன்னிக்கும்படி கேட்க, சிவனும் மனமிரங்கி, தக்ஷனுக்கு உயிர் கொடுத்தார். ஆனால் தக்ஷனின் தலையை ஒரு ஆட்டுத்தலையாக
ஆக்கி விட்டார்.
இந்த வீரபத்திரனுக்கு
ஆயிரம் தலைகளும், இரண்டாயிரம் கைகளும், மூவாயிரம் கண்களும்
உண்டு.
No comments:
Post a Comment