வினைப் பயனை
வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய
நூலகத்தும் இல்லை - நினைப்பது எனக்
கண்ணுறுவது
அல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறுவார்க்கு
இல்லை விதி.
வினைப்பயனை
வெல்வதற்கு = தாம் செய்த வினைப்பயனை வெல்வதற்கு;
வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை = வேதம் முதலிய அனைத்து நூல்களிலும் வழி இல்லை;
நினைப்பது என
கண்ணுறுவது அல்லால் = தாம் நினைப்பதைத்தான் காண்கிறோம் அல்லாது;
கவலைப்படேல்
நெஞ்சே = கவலைப் படாதே மனமே;
மெய்
விண்ணுறுவர்க்கு இல்லை விதி = மெய்யாகிய முக்தி நெறி நிற்பவர்க்கு விதி என்பதே
இல்லை;
No comments:
Post a Comment