Who is the
guardian for minor?
மைனருக்கு யார்
கார்டியன்?
பண்டிதர் முல்லா
எழுதிய முகமதிய சட்டம் என்ற சட்ட விளக்கத்தில் “முகமதிய சட்டப்படி, ஒரு மைனர் ஆண் குழந்தைக்கு
அவனின் ஏழு வயது வரை அவனின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian” ஆக
இருக்க வேண்டும். அது பெண் குழந்தையாக இருந்தால், அவளின் பருவ வயது வரை (அவள் பெரியவளாக
வயதுக்கு வரும் வரை – attained puberty) அவளின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian”
ஆக இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்த
தாய், அவளின் கணவனை (அதாவது அந்தக் குழந்தையின் தந்தையை) விவாகரத்துச் செய்து விட்டாலும்,
தாய் “பாதுகாலவர்-Custodian” ஆக இருப்பது அந்தந்த வயதுவரை
தொடர வேண்டும்.
ஆனால், அந்த
தாய், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவள் “பாதுகாலவர்-Custodian” ஆகத் தொடர முடியாது.
“பாதுகாலவர்-Custodian” என்பதை முகமதிய சட்டத்தில் ஹிசனட் – Hizanant என்று
சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மைனர் குழந்தைக்கு,
அவன் அல்லது அவளின் முகமதிய தந்தைதான் கார்டியன் என்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.
அந்த மைனருக்கு
சொந்தமில்லாத வேறு ஒருவரை தாயோ, சித்தியோ, தாய் வழிஉறவில் உள்ளவர்களோ, திருமணம் செய்திருந்தால்,
அவர்கள் அந்த மைனர் குழந்தைக்கு பாதுகாவலராக இருக்க முடியாது என முகமதிய சட்டம் குறிப்பிட்டுச்
சொல்லவில்லை.
தாய்க்குப்பின்,
யார் அந்த மைனருக்கு பாதுகாவலர் என்ற கேள்வி எழும்போது, யார் அந்த மைனருக்கு நெருக்கமான
உறவினர் என்று பார்க்க வேண்டும். ஒரு கல்கத்தா ஐகோர்ட் வழக்கில், தாயுடன் பிறந்த சித்தி,
வேறு ஒருவரைத் திருமணம் செய்துள்ள நிலையில் அவர் அந்த மைனருக்கு நெருங்கிய உறவினர்
என் எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பினர். அந்த பெண், உறவு அல்லாத வேறு
ஒருவரைத் திருமணம் செய்திருந்தால், அவர் எப்படி மைனருக்கு நன்மை உள்ளவராக, அன்பு உள்ளவராக
இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியது. சித்தி உறவு நெருங்கிய உறவுதான். அவள் தகுதி
இல்லாதவள் என்று மறுக்க முடியாதுதான். ஆனால் குழந்தையின் நன்மையை பார்க்க வேண்டும்
என்று சொல்கிறது.
The
Guardians and Wards Act 1890 என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்த சட்டம்.
அது இன்னும் அமலில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் எல்லா மதத்தைச் சார்ந்த மைனர்களுக்கும்
பொருந்தும், அதில் உள்ள பிரிவு 17 இப்படிச் சொல்கிறது. “பாதுகாவலரோ, கார்டியனோ, யாரை
நியமித்தாலும், அது மைனரின் நன்மைக்காக இருக்குமா என்பதை கோர்ட் கவனத்தில் கொண்டு நியமிக்க
வேண்டும்” என்று சொல்கிறது. அவர் ஒரு வெளி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறது.
முகமதிய சட்டமும் யாரையும் கார்டியனாகவோ, பாதுகாவலனாக இருக்கவோ தகுதி இல்லாதவர் என்று
குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இந்த வழக்கில்,
தந்தை பொறுப்பில்லாமல் இருக்கிறார். தாய், கொடுமை தாங்காமல் வீட்டை விட்டும், கணவனை
விட்டும் வெளியேறி விட்டார். பின்னர் வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். அப்படிபட்ட
சூழ்நிலையில், தாய், அந்த குழந்தையை போதிய அன்பு செலுத்துவர் என்று கருத இடமில்லை.
தந்தை, பொறுப்பற்றவர் என்றாலும் அவர் பாதுகாவலராக தொடரலாம். தந்தை வேறு ஒருத்தியைத்
திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அந்த மனைவி மூலம் குழந்தை இல்லை.
எனவே, தற்போது
குழந்தைக்கு 7 வயதுதான், தந்தையிடமே இருக்கலாம். தந்தையின் தாய் (தந்தைவழிப்பாட்டி)
குடும்பத்தில் இருக்கிறார். அவர் அந்த குழந்தையைப் பார்த்துக் கொள்வார்.
கார்டியன் சட்டடப்படி,
இதுவே குழந்தைக்கு நன்மை பயக்கும் என்பதால் இதையே முடிவாக கோர்ட் அறிவித்து விட்டது.
**
No comments:
Post a Comment