Wednesday, January 22, 2020

Court Fee for Cancellation of a Document

Court fee for Cancellation of a Document

ஒரு எழுதப் படிக்கத் தெரியாத கிழவியிடமிருந்து கடன் கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றிக் கிரயம் வாங்கி விட்டார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குப் போடுகிறார். ஆனால் எதிர்பார்ட்டியோ, அதன் சொத்து மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் கிரயம் வாங்கிய பத்திரத்தில் ரூ.15,000 என்று சொல்லி உள்ளார். ஆனால் தற்போதைய மதிப்பான ரு.ஒரு லட்சத்துக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். கீழ்கோர்ட் அவரின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. கிரயம் வாங்கியதே ரூ.15,000 என்று இருக்கும்போது, அதற்குத்தான் கோர்ட் கட்டணம் செலுத்த முடியும் என்று கீழ்கோர்ட் சொல்லிவிட்டது.

அந்த கீழ்கோர்ட் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிவிஷன் மனுச் செய்கிறார்.  சிபிசி ஆர்டர் 14-ல் வழக்கில் உள்ள பிரச்சனை என்ன என்றும், எதைத் தீ்ர்வு காண வேண்டும் என்று கேள்விகளாக கோர்ட் முடிவு செய்யும். இதை வழக்கு விசாரனை ஆரம்பிக்கும் முன்னர் முடிவு செய்து கொள்ளும். அதற்கு ஏற்ப சாட்சிகளையும், சாட்சியங்களையும் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கு விசாரனையை நடத்துவார்கள்.

அப்படி கேள்விகளை முடிவு செய்யும்போது, சாட்சியங்களைக் கொண்டு விசாரிக்க வேண்டியவைகளை விசாரனைக்கு ஏற்கும். சட்டம் சார்ந்து முடிவு செய்யும் விஷயங்களை, வழக்கு விசாரனைக்கு முன்னரே முடிவு செய்யும். உதாரணமாக இந்த கோர்ட்டுக்கு எல்லை அதிகாரம் இல்லை என்று கூறினால், அதை வழக்கு விசாரனைக்கு முன்னரே கோர்ட் முடிவு செய்ய வேண்டும். சட்டமும், சாட்சியமும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டி இருந்தால், அதை விசாரனையில் தான் முடிவு செய்ய முடியும்.

எனவே சட்டசிக்கல் இருந்தால் வழக்கின் விசாரனைக்கு முன்னர் முடிவு செய்ய வேண்டும். சாட்சிய விசாரனையும், சட்ட விசாரனையும் கலந்து இருந்தால், சாட்சிகளை விசாரித்த பின்னர் கோர்ட் முடிவு செய்யலாம்.

எனவே கோர்ட் கட்டணம் குறைவாக கட்டி உள்ளார்களா என்பது சட்டம் சார்ந்த பிரச்சனை. அதை வழக்கு போட்டவரின் வாதுரையின் பேரிலேயே முடிவு செய்ய முடியும், அதற்கு சாட்சி விசாரனை, சாட்சியம் விசாரனை அவசியம் இல்லை. இதை வழக்கு விசாரனைக்கு முன்னரும் விசாரிக்கலாம், அல்லது விசாரனை முடித்தும் முடிவு எடுக்கலாம்.

கோர்ட் கட்டணச் சட்டம் என்பது உரிமை சார்ந்த சட்டம் (Substantial law). ஆனால் சிவில் நடைமுறைச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்த சட்டம் (Procedural law). எனவே கோர்ட் கட்டணப் பிரச்சனையை வழக்கு விசாரனைக்கு முன்னரே விசாரித்து முடிவு செய்து விட வேண்டும்.

கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய போடும் வழக்கில் கோர்ட் கட்டணம், வழக்குப் போடும் தேதியில் அந்த சொத்தின் மதிப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா? அல்லது பத்திரத்தில் உள்ள மதிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது கேள்வி.

In Padma Bivi Ammal v Mohammad Mohideen Rowthar, 1950 (2) MLJ 268 என்ற வழக்கில், இப்படிப்பட்ட சூழ்நிலையில், வழக்குப் போடும் நாளில் அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை மேற்கோள் காட்டி, 2002-ல் சென்னை ஐகோர்ட் VR Gopalakrishnan v Andiammal (25 Jan 2002) ஒரு தீர்ப்பும் வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment