உலகத்திலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு
பாரீஸில் உள்ள Chateau Louis XIV இந்த மேன்சன் தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு; இதன் விலை $301 மில்லியன்; (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம், அதாவது முப்பது கோடியே பத்து லட்சம் டாலர்; அதாவது ஒரு டாலர் 65 ரூபாய், அதாவது 1800 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி உள்ளார்); ஒரு சொத்து 1,800 கோடிக்கு விற்பனை செய்தது உலக சாதனையாம்; இதை வாங்கியவர் அவர் பெயரைச் சொல்லவில்லை (Anonymous); ஒருவேளை கண்-வைத்து விடுவார்கள் என்று பெயரை ரகசியமாக வைத்துக் கொண்டிருப்பாரோ?
இதற்கு முன் மிக அதிகமாக விற்கப்பட்ட சொத்து 2011ல் லண்டனில் உள்ள penthouse பென்ட்ஹவுஸ்; இது 221 மில்லியன் டாலருக்கு விலை போனதாம்;
No comments:
Post a Comment