சென்னை வெள்ளம்
சென்னை
என்றாலே இனி பயப்படும்படி செய்துவிட்டது இந்த கனமழை; யாருமே எதிர்பார்க்கவில்லை
இப்படி வெள்ளம் வரும்என்று; ஏதோ மழை பெய்யும்; அல்லது புயல் அடிக்கும்; டிராபிக்
இருக்கும்; பால் கிடைக்காது; பேப்பர் கிடைக்காது; ஒன்றிரண்டு ட்ரெயின் ஓடாது; பள்ளி,
கல்லூரி விடுமுறை அறிவிப்பு; அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான்; இதை
எல்லாவற்றையும் டீவியில் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் முடங்கி இருப்போம்; இதெல்லாம்
விளையாட்டாவே நமக்கு தெரிந்தது; இதுதான் பழைய சென்னை வாழ்க்கை;
இனி
சென்னை இப்படி இருக்காது; ஒன்று சென்னை இருக்கும், அல்லது இல்லாமலும் போகும்;
இதுதான் இன்றைய நிலை; சென்னையைச் சுற்றி இவ்வளவு ஏரிகள் இருக்கும் என்றே தெரியவேயில்லை;
அவைகள் இவ்வளவு தண்ணீரை கக்கும் என்றும் தெரியவில்லை; சென்னை மக்களை துவைத்து
பிழிந்து காயப்போட்டு விட்டது;
பொதுவாக,
கடலில் உள்ள நீரானது, சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே போய் மழையாகப் பெய்கிறது
என்றுதான் விஞ்ஞானம் நமக்குச் சொல்லிக் கொடுத்தது; அப்படியென்றால், இவ்வளவு
மழைநீரையும் மேகம் எங்கு ஒளித்து வைத்திருந்தது; மேகங்கள் ஏதோ சதி
செய்திருக்கிறது;
சென்னையின்
முப்பது வருட வளர்ச்சியை மூன்றே நாளில் குலைத்துவிட்டது; அவமானம்!! எல்லோருக்கும் அவர்கள்மீதே
வெறுப்பு; காரணம் தெரியவில்லை; எதுவும் இல்லை என்ற கோபம் இல்லை; எது இருந்தும்
இல்லாமல்போன சோகம்; கோபம் இன்னும் தணியவே மாட்டேன் என்கிறது;
**
No comments:
Post a Comment