சிற் குணத்தார் தெரிவு அரு நல் நிலை,
எற்கு உணர்த்த அரிது,
எண்ணிய மூன்றனுள், முற்குணத்தவரே முதலோர்,
அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ. 2
சிறந்த குணத்தவரின் நல்ல தன்மையை தெரிந்து கொள்வது எப்படி என்று என்னால் உணர்த்துவது கடினம். மூன்று குணங்களான, சத்துவம், ராஜசம், தாமசம், இவற்றில் முதலில் சொன்ன சத்துவ குணத்தவரே சிறந்தவர். அவருடன் கூடி அவரின் நற்குணங்கள் என்னும் கடலில் திளைத்து ஆடுவது நல்லது அன்றோ.
சத்துவம் - சாத்வீக குணம், புலன்களை அடக்கிய நிலை (வெண்மை).
ராஜசம் - ரஜோ குணம், விருப்பம் கருதிய செயல்களை மட்டும் செய்வது (சிவப்பு).
தாமசம் - தமோ குணம், எல்லா கெட்ட குணங்களும் இருப்பது (கருப்பு).
**
No comments:
Post a Comment