Wednesday, January 22, 2020

Court Fee for Cancellation of a Document

Court fee for Cancellation of a Document

ஒரு எழுதப் படிக்கத் தெரியாத கிழவியிடமிருந்து கடன் கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றிக் கிரயம் வாங்கி விட்டார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குப் போடுகிறார். ஆனால் எதிர்பார்ட்டியோ, அதன் சொத்து மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் கிரயம் வாங்கிய பத்திரத்தில் ரூ.15,000 என்று சொல்லி உள்ளார். ஆனால் தற்போதைய மதிப்பான ரு.ஒரு லட்சத்துக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். கீழ்கோர்ட் அவரின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. கிரயம் வாங்கியதே ரூ.15,000 என்று இருக்கும்போது, அதற்குத்தான் கோர்ட் கட்டணம் செலுத்த முடியும் என்று கீழ்கோர்ட் சொல்லிவிட்டது.

அந்த கீழ்கோர்ட் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிவிஷன் மனுச் செய்கிறார்.  சிபிசி ஆர்டர் 14-ல் வழக்கில் உள்ள பிரச்சனை என்ன என்றும், எதைத் தீ்ர்வு காண வேண்டும் என்று கேள்விகளாக கோர்ட் முடிவு செய்யும். இதை வழக்கு விசாரனை ஆரம்பிக்கும் முன்னர் முடிவு செய்து கொள்ளும். அதற்கு ஏற்ப சாட்சிகளையும், சாட்சியங்களையும் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கு விசாரனையை நடத்துவார்கள்.

அப்படி கேள்விகளை முடிவு செய்யும்போது, சாட்சியங்களைக் கொண்டு விசாரிக்க வேண்டியவைகளை விசாரனைக்கு ஏற்கும். சட்டம் சார்ந்து முடிவு செய்யும் விஷயங்களை, வழக்கு விசாரனைக்கு முன்னரே முடிவு செய்யும். உதாரணமாக இந்த கோர்ட்டுக்கு எல்லை அதிகாரம் இல்லை என்று கூறினால், அதை வழக்கு விசாரனைக்கு முன்னரே கோர்ட் முடிவு செய்ய வேண்டும். சட்டமும், சாட்சியமும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டி இருந்தால், அதை விசாரனையில் தான் முடிவு செய்ய முடியும்.

எனவே சட்டசிக்கல் இருந்தால் வழக்கின் விசாரனைக்கு முன்னர் முடிவு செய்ய வேண்டும். சாட்சிய விசாரனையும், சட்ட விசாரனையும் கலந்து இருந்தால், சாட்சிகளை விசாரித்த பின்னர் கோர்ட் முடிவு செய்யலாம்.

எனவே கோர்ட் கட்டணம் குறைவாக கட்டி உள்ளார்களா என்பது சட்டம் சார்ந்த பிரச்சனை. அதை வழக்கு போட்டவரின் வாதுரையின் பேரிலேயே முடிவு செய்ய முடியும், அதற்கு சாட்சி விசாரனை, சாட்சியம் விசாரனை அவசியம் இல்லை. இதை வழக்கு விசாரனைக்கு முன்னரும் விசாரிக்கலாம், அல்லது விசாரனை முடித்தும் முடிவு எடுக்கலாம்.

கோர்ட் கட்டணச் சட்டம் என்பது உரிமை சார்ந்த சட்டம் (Substantial law). ஆனால் சிவில் நடைமுறைச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்த சட்டம் (Procedural law). எனவே கோர்ட் கட்டணப் பிரச்சனையை வழக்கு விசாரனைக்கு முன்னரே விசாரித்து முடிவு செய்து விட வேண்டும்.

கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய போடும் வழக்கில் கோர்ட் கட்டணம், வழக்குப் போடும் தேதியில் அந்த சொத்தின் மதிப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா? அல்லது பத்திரத்தில் உள்ள மதிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது கேள்வி.

In Padma Bivi Ammal v Mohammad Mohideen Rowthar, 1950 (2) MLJ 268 என்ற வழக்கில், இப்படிப்பட்ட சூழ்நிலையில், வழக்குப் போடும் நாளில் அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை மேற்கோள் காட்டி, 2002-ல் சென்னை ஐகோர்ட் VR Gopalakrishnan v Andiammal (25 Jan 2002) ஒரு தீர்ப்பும் வழங்கி உள்ளது.

Police Aid in Civil Cases:

Police Aid in Civil Cases:

"If the police authorities are under a legal duty to enforce the law and the Public or the citizens are entitled to seek directions under Article 226 of the Constitution for discharge of such duties by the Police Authorities we feel that the civil courts can also give appropriate directions under Section 151 Civil P. C. to render aid to the aggrieved parties for the due and proper implementation of the orders of Court. It cannot be said that in such a case the exercise of the inherent power under Section 151, Civil P. C. is devoid of jurisdiction. There is no express provision in the Code prohibiting the exercise of such a power and the Court can give appropriate directions at the instance of the aggrieved parties to the police authorities to render its aid for enforcement of the Court's order in a lawful manner."

(Andhra Pradesh High Court AIR 1971 AP 53)

Police owe a legal duty to the public:

Police owe a legal duty to the public:

That the police authorities owe a legal duty to the public to enforce the law is clear from a decision of the Court of Appeal, reported in R. v. Metropolitan Police Commr. (1968) 1 All ER 763, where Lord Denning, M. R. observed at page 769 as follows:

"hold it to be the duty of the Commissioner of police, as it is of every chief constable to enforce e the law of the land...............but in all these things he is not the servant of anyone, save of the law itself. The responsibility for law enforcement lies on him. He is answerable to the law and to the law alone".

Friday, January 17, 2020

Who is the guardian for minor? மைனருக்கு யார் கார்டியன்?


Who is the guardian for minor?
மைனருக்கு யார் கார்டியன்?
பண்டிதர் முல்லா எழுதிய முகமதிய சட்டம் என்ற சட்ட விளக்கத்தில் “முகமதிய சட்டப்படி, ஒரு மைனர் ஆண் குழந்தைக்கு அவனின் ஏழு வயது வரை அவனின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian” ஆக இருக்க வேண்டும். அது பெண் குழந்தையாக இருந்தால், அவளின் பருவ வயது வரை (அவள் பெரியவளாக வயதுக்கு வரும் வரை – attained puberty) அவளின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian” ஆக இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்த தாய், அவளின் கணவனை (அதாவது அந்தக் குழந்தையின் தந்தையை) விவாகரத்துச் செய்து விட்டாலும், தாய் “பாதுகாலவர்-Custodian” ஆக இருப்பது அந்தந்த வயதுவரை தொடர வேண்டும்.
ஆனால், அந்த தாய், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவள் “பாதுகாலவர்-Custodian” ஆகத் தொடர முடியாது.
“பாதுகாலவர்-Custodian” என்பதை முகமதிய சட்டத்தில் ஹிசனட் – Hizanant என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மைனர் குழந்தைக்கு, அவன் அல்லது அவளின் முகமதிய தந்தைதான் கார்டியன் என்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.
அந்த மைனருக்கு சொந்தமில்லாத வேறு ஒருவரை தாயோ, சித்தியோ, தாய் வழிஉறவில் உள்ளவர்களோ, திருமணம் செய்திருந்தால், அவர்கள் அந்த மைனர் குழந்தைக்கு பாதுகாவலராக இருக்க முடியாது என முகமதிய சட்டம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
தாய்க்குப்பின், யார் அந்த மைனருக்கு பாதுகாவலர் என்ற கேள்வி எழும்போது, யார் அந்த மைனருக்கு நெருக்கமான உறவினர் என்று பார்க்க வேண்டும். ஒரு கல்கத்தா ஐகோர்ட் வழக்கில், தாயுடன் பிறந்த சித்தி, வேறு ஒருவரைத் திருமணம் செய்துள்ள நிலையில் அவர் அந்த மைனருக்கு நெருங்கிய உறவினர் என் எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பினர். அந்த பெண், உறவு அல்லாத வேறு ஒருவரைத் திருமணம் செய்திருந்தால், அவர் எப்படி மைனருக்கு நன்மை உள்ளவராக, அன்பு உள்ளவராக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியது. சித்தி உறவு நெருங்கிய உறவுதான். அவள் தகுதி இல்லாதவள் என்று மறுக்க முடியாதுதான். ஆனால் குழந்தையின் நன்மையை பார்க்க வேண்டும் என்று சொல்கிறது.


The Guardians and Wards Act 1890 என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்த சட்டம். அது இன்னும் அமலில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் எல்லா மதத்தைச் சார்ந்த மைனர்களுக்கும் பொருந்தும், அதில் உள்ள பிரிவு 17 இப்படிச் சொல்கிறது. “பாதுகாவலரோ, கார்டியனோ, யாரை நியமித்தாலும், அது மைனரின் நன்மைக்காக இருக்குமா என்பதை கோர்ட் கவனத்தில் கொண்டு நியமிக்க வேண்டும்” என்று சொல்கிறது. அவர் ஒரு வெளி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறது. முகமதிய சட்டமும் யாரையும் கார்டியனாகவோ, பாதுகாவலனாக இருக்கவோ தகுதி இல்லாதவர் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இந்த வழக்கில், தந்தை பொறுப்பில்லாமல் இருக்கிறார். தாய், கொடுமை தாங்காமல் வீட்டை விட்டும், கணவனை விட்டும் வெளியேறி விட்டார். பின்னர் வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். அப்படிபட்ட சூழ்நிலையில், தாய், அந்த குழந்தையை போதிய அன்பு செலுத்துவர் என்று கருத இடமில்லை. தந்தை, பொறுப்பற்றவர் என்றாலும் அவர் பாதுகாவலராக தொடரலாம். தந்தை வேறு ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அந்த மனைவி மூலம் குழந்தை இல்லை.
எனவே, தற்போது குழந்தைக்கு 7 வயதுதான், தந்தையிடமே இருக்கலாம். தந்தையின் தாய் (தந்தைவழிப்பாட்டி) குடும்பத்தில் இருக்கிறார். அவர் அந்த குழந்தையைப் பார்த்துக் கொள்வார்.
கார்டியன் சட்டடப்படி, இதுவே குழந்தைக்கு நன்மை பயக்கும் என்பதால் இதையே முடிவாக கோர்ட் அறிவித்து விட்டது.
**



1944-ல் இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி


Chettiar’s Property case in 1944
இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி:
RM.AR.AR.RM.அருணாசலம் செட்டியார் என்பவர் தேவகோட்டையில் உள்ள நாட்டுக் கோட்டை செட்டியார்களில் மிகப் பெரிய பணக்காரர். இவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு, 1938-ல் இறந்து விடுகிறார். இந்த உயிலை சப்கோர்ட்டில் புரேபேட் ஆர்டர் பெறுகிறார்கள்.
புரபேட் (Probate) என்பது, உயில் எழுதியது உண்மைதான் என்று அதில் உள்ள சாட்சிகளைக் கொண்டு நிரூபித்து பெறப்படும் நிரூபணச் சான்றிதழ்.
அந்த காலத்தில், 1938-ல் இறந்த அருணாசலம் செட்டியாரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.40 லட்சத்தை தாண்டும். இந்தியாவில் இல்லாமல், பர்மா (அப்போது பிரிட்டீஸ் நிர்வாகத்தில் உள்ளது), மலாய், சிலோன், கொச்சின் (அப்போது பிரன்ஸ் நாட்டின் நிர்வாகத்தில் உள்ளது) மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அவருக்கு சொத்துக்கள் உண்டு. இது இல்லாமல், ஏகப்பட்ட சாரிட்டிகள், என்டோவ்மெண்டுகள் உண்டு. இவைகளின் மதிப்பே ஒரு 24 லட்சத்தைத் தாண்டும்.
அருணாசலம் செட்டியாருக்கு மூத்த மனைவி மூலம் ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மனைவி இல்லாமல் மேலும் இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனும் இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவியின் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இரண்டாம் மனைவியும் மூன்றாம் மனைவியும் இருக்கிறார்கள். இரண்டாம் மனைவிக்கு குழந்தை ஏதும் இல்லை. மூன்றாம் மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே.  மூத்த மனைவியின் மகன், உமையாள் ஆச்சி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். (பின்னர் மகன் இறந்து விட்டார்). அவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை.
அருணாசலம் செட்டியார் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக, அவரின் மருமகளான உமையாள் ஆச்சி Administration Suit என்ற வழக்குப் போடுகிறார்.
அருணாசலம் செட்டியார் எழுதி வைத்த உயிலை நிறைவேற்றுபவராக (Executor) தனது மைத்துனர் சுந்தரேசன் செட்டியாரையும் தனது மருமகன் அருணாசலம் செட்டியாரையும் நியமித்திருந்தார்.
அந்த உயிலில், தனது இரண்டு மனைவிகளுக்கும் ஆண் குழந்தை இல்லாததால், அவரவர் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தார். அதேபோல், தன் மருமகளும் (இறந்த மகனின் மனைவி) ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கி இருந்தார்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பழைய இந்து சாஸ்திரப்படி, ஒரு இந்து ஆணுக்கு, தன் இறப்புக்குப் பின்னர், தனக்கு செய்யவேண்டிய கர்ம காரியங்களைச் செய்தவதற்காக ஒரு மகன் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்போதுதான், அந்த இறந்த இந்து ஆண் சொர்க்கத்துக்கு போக முடியும் அல்லது ஆன்மா இறைவனடி சேரும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படி ஒரு மகன் இல்லாதபோது, அல்லது பிறக்காதபோது, தன் பங்காளிகளின் மக்களின் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை, அப்படி தத்து எடுப்பதற்கு முன்னரே அவர் இறந்து விட்டால், தன் மனைவிக்கு அந்த உரிமையை வழங்கலாம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
இந்தப் பின்னனியில்தான், அருணாசலம் செட்டியாரும் அவரின் உயிலில் அப்படி எழுதி இருக்கிறார். அப்படி தத்து எடுக்கும் போது, உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றாளர்களான மைத்துனன் சுந்தரேசன் செட்டியாரையும், மருமகன் அருணாசலம் செட்டியாரையும் கலந்து ஒப்புதல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உயிலில் எழுதி இருக்கிறார்.
அதன்படி, மூவரும் (இரண்டு மனைவிகளும், ஒரு மருமகளும்) ஆளுக்கு ஒரு மகனாக தத்து எடுத்துக் கொள்கிறார்கள். தத்து மகன்கள் மேஜர் வயதை அடைகிறார்கள். அவர்கள் மூவரும், உயிலில் நியமிக்கப்பட்ட நிறைவேற்றாளர்களுடன் சேர்ந்து சொத்துக்களையும், டிரஸ்டுகளையும் நிர்வகித்து வருகிறார்கள்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பொதுவாக, தத்து எடுப்பது என்பது இந்து சாஸ்திர சட்டத்தி்ல் மட்டுமே உள்ளது. கிறிஸ்தவர், முஸ்லீம் ஆகியோர் தத்து எடுக்க முடியாது. அவர்களின் மதநூல்களான பைபிள், குரான் இவைகளில் அவ்வாறு சொல்லப்படவில்லை. ஏனென்றால், அங்கு மறுபிறப்பு, கர்மா, ஆன்மா போன்ற தத்துவங்களுக்கு இடமில்லை. எனவே இந்து சாஸ்திரத்தின்படி, இறந்தவரின் ஆன்மா முக்தி அடைய வேண்டுமானால், அவரின் மகன் இந்தப் பூவுலகில், தன் மூதாதையருக்கு (ஏழு தலைமுறை மூதாதையருக்கு) பிண்டம் கொடுத்து கர்மம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மகன் இல்லாதவர் தத்து எடுத்து அந்த சாஸ்திரத்தை செய்ய வேண்டும். தத்து எடுக்காமல் காலம் சென்றவரின் விதவை-மனைவி  தன் கணவனுக்காக அவ்வாறு தத்து எடுக்கலாம். அல்லது அந்த இந்து ஆணே  உயிருடன் இருக்கும்போதே ஒரு உயில் மூலம் அந்த அதிகாரத்தை தன் மனைவிக்கு அளிக்கலாம் என்பது பழைய இந்து சாஸ்திர சட்டம்.  ஆண் குழந்தையை மட்டுமே  அவ்வாறு தத்து எடுக்க முடியும். ஒரு பெண் குழந்தையை அவ்வாறு தத்து எடுக்க முடியாது. மேலும், அந்த ஆண் குழந்தையும் 14 வயதுக்குள் இருக்க வேண்டும். தத்த ஹோமம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி, உறவினர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக, அந்த குழந்தையின் இயற்கை பெற்றோர்கள் (Biological parents), வளர்ப்பு பெற்றோர்களிடம் (Adoptive parents) இந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த தத்து (Adoption) சாஸ்திரப்படி செல்லுபடியாகும்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
இந்த சாஸ்திர தத்து விதிகளுக்கு மாறாக தத்து எடுத்திருந்தால் அந்த தத்து செல்லாது. அப்படி எடுக்கப்பட்ட மகன், அந்த சொத்தில் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனாலும், ஒரு சில சமுதாயங்களில் (ஜாதிகளில்) இந்த சாஸ்திர விதிகளுக்கு மாறாக, காலம் காலமாக தொடர்ந்து வேறு ஏதாவது ஒரு “வழக்கம்” & “பழக்கம்” (Custom & Usage) தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்தால், அதில் இந்த சாஸ்திர சட்டம் மூக்கை நுழைக்காது. இந்த தேவகோட்டைப் பகுதியில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டிகளிடம் (இவர்களை நாட்டார் என்றும் சொல்வர்) ஒரு வகைப் பழக்க-வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதன்படி, இவர்கள், தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றால், தன் தாயாதிகளின் மகனை தத்து எடுத்துக் கொள்வார்கள். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அந்த மகனுக்கு 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த தத்து மகனுக்குத் திருமணம் கூட ஆகி இருக்கலாம். அப்படி ஒரு பழக்க-வழக்கம் கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே இது இந்து சாஸ்திர விதிகளின்  விதிவிலக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அருணாசலம் அவர்களின் உயிலில் டிரஸ்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அவரின் சொத்துக்களை யார் யார் அடைய வேண்டும் தனித்துச்சொல்லவில்லை. ஏனென்றால்,, அப்போது அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. மனைவிகளுக்கும் மருமகளுக்கும் தத்து மகன்களை எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே, அவரின் மருமகள் (இறந்த மகனின் மனைவி) இந்த சிவில் வழக்கைப் போடுகிறார். எதிர் பார்ட்டிகளாக, இரண்டு மாமியார்களையும், இரண்டு உயில் நிறைவேற்றாளர்களையும் சேர்த்திருக்கிறார்.
இந்த வழக்கில், மாமனார் எழுதி வைத்த உயிலே சட்டப்படி செல்லாது என்று சொல்கிறார். இந்த உயிலை அவர் எழுதும்போது, அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது அவர் கூற்று. (Not in a sound state of mind). அந்த உயிலை எழுதி, அவர் கையெழுத்தை போட வைத்தது, அவரின் உறவினர்களான, அவரின் மைத்துனரும், மருமகனுமான இந்த உயிலில் நிறைவேற்றாளர்களாக இருப்பவர்களே என்கிறார்.
மேலும், மருமகளின் வாதம் என்னவென்றால்: மாமனாரின் உயிலில் அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் என்று எழுதப் படாத நிலையில், அந்த சொத்துக்களைப் பொறுத்து, அவர் உயில் எழுதாமல் இறந்து விட்டதாகவே கருத வேண்டும் என்பதே. (Testator died intestate in respect of the bulk of the estate).
மேலும், மருகளுக்குக் கொடுத்த சீதனமும், அவளின் மாமியாரின் சீதனமும், ஏற்கனவே மாமனார் டெப்பாசிட்டுகளாக வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவைகளும் தனக்கே வர வேண்டும் என்றும் கேட்கிறார்.
மேலும் மருமகள் சொல்கிறார்: மாமனார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர், தன்னை அழைத்து, “ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொள்” என்று சொன்னதாகச் சொல்கிறார். அப்படி இருக்கும்போது, உயிலில், Executors சம்மதத்தின் பேரிலேயே தத்து எடுக்க வேண்டும் என்று எப்படி எழுதி இருப்பார். அப்படியே எழுதி இருந்தாலும் அது ஒரு உத்தரவு ஆகாது. அது ஒரு  யோசனையே என்கிறார்.
இப்படியான சூழ்நிலையில், தன் சுய அறிவுடன் எழுதப்படாத அந்த உயில் செல்லாமல் போனால், மூத்த விதவை மனைவியே (மகன் இல்லாதபோது), 1937-ம் வருடத்திய இந்து பெண்கள் சொத்துரிமை சட்டப்படி, இறந்த கணவரின் முழு சொத்துக்கும் உரிமையாளராகி நிர்வகித்து வர வேண்டும் என்பது மூத்த மனைவியின் வாதம்.
ஆனால் உயில் நிறைவேற்றாளர்கள் பதில் என்னவென்றால்: இந்த உயில் அவரின் சுய சிந்தனையுடனேயே எழுதி அவர் கையெழுத்துப் போட்டுள்ளார் என்றும், எனவே அவர்கள் அந்த உயில்படி சொத்துக்களை நிர்வாகம் செய்ய அதிகாரம் உள்ளவர்கள் என்றும், அதன் வரும்படியை மட்டும் வளர்ப்பு மகன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உயிலில் கண்டுள்ளது என்றும், சொல்கிறார்கள்.
இதில், உயில் எழுதிய அருணாசலம் செட்டியாரின் மூன்றாவது மகளை (மூத்த மனைவி மூலம் பிறந்தவள்) உயில் நிறைவேற்றாளராக உள்ள தன் மருமகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
சப்கோர்ட் தீர்ப்பு: இந்த உயில் கட்டாயத்தின் பேரில் ஏற்பட்ட்டது இல்லை என்றும், எனவே புரபேட் உத்தரவு வழங்கி தீர்ப்புக் கொடுத்து விட்டது.
ஆனாலும், அருணாசலத்தின் மற்ற சொத்துக்களைப் பொறுத்து அவர் உயிலில் குறிப்பிட்டுச் சொல்லாததால், அவைகளைப் பொறுத்து உயில் எழுதிவைக்காமல் இறந்ததாகக் கருதி. அவைகளுக்கு நிர்வாக உரிமையை மருமகளுக்கு உத்தரவிடுகிறது கோர்ட்.
ஆனால், மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் இல்லாமல் இருப்பதால், அவரின் இரண்டாவது மனைவி (இப்போது உயிருடன் இருக்கும் தலைமை மனைவி Senior widow) க்கு 1937 பெண்கள் சொத்துரிமை சட்டப்படி உரிமை உண்டு என்று கீழ்கோர்ட் தீர்ப்புச் சொல்கிறது.
இந்த உத்திரவை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு வழக்கு வருகிறது.
1937 பெண்கள் சொத்துரிமை சட்டம்:
 1937-க்கு முன்னர் பெண்களுக்கு இந்து கூட்டுரிமை சொத்தில் பங்கு கிடையாது. (பெண்கள், தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது புதிய சொத்துக்களை வாங்கிக் கொள்ளலாம்). இந்து கூட்டுரிமை சொத்து என்றால், ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வைத்திருந்தால் (வாங்கி இருந்தாலும், பூர்வீகமாக கிடைத்து இருந்தாலும்), அதில் அவருக்கும், அவரின் மகனுக்கும், அவரின் பேரனுக்கும், அவரின் கொள்ளுப் பேரனுக்கும் “அவர்களின் பிறப்பால்” பங்குரிமை பெறுவர். இதுவே இந்து கூட்டுரிமை சொத்து எனப்படுவது. இதை கோபார்சனரி சொத்து (Coparcenary property) என்பர். இப்போது இதை மூதாதையர் சொத்து (Ancestral Property) என்றும், பூர்வீகச் சொத்து என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு (அந்த குடும்பத்தில் உள்ள மனைவிகளுக்கும், மருமகள்களுக்கும் அந்த சொத்தில் பங்கு கேட்கும் உரிமை கிடையாது; ஆனால் அவர்களின் வாழ்நாள்வரை அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய அந்த கோபார்சனர்கள் என்னும் ஆண்களின் கடமை. மகள்களைப் பற்றி இங்கு சொல்ல வேண்டுமானால், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வரை அந்த ஆண்களின் கடமை. அதற்குப் பின்னர் அவள் வேறு வீட்டு மருமகள். இந்த வீட்டுக்குச் சம்மந்தமில்லாதவள்).
இப்படி இருந்த வந்த பெண்களின் நிலையை சற்று உயர்த்த நினைத்த பிரிட்டீஸ் அரசு  (ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில்தான், இங்கிலாந்தில் பெண்களுக்கு சொத்துரிமை வந்து விட்டது), 1937-ல் இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் கொண்டு வருகிறது.
குறிப்பு: இந்து பெண்களுக்குத்தான் இந்த நிலை. கிறிஸ்தவப் பெண்களுக்கு கணவர் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று ஏற்கனவே 1925-ல் சட்டம் வந்து விட்டது. முஸ்லீம் பெண்களுக்கு தந்தை, தாய் சொத்தில் மகனுக்கு முழுப் பங்கு என்றும் மகளுக்கு பாதி பங்கு என்றும், கணவர் சொத்தில் குழந்தைகள் இருந்தால் எட்டில் ஒரு பங்கு என்றும், குழந்தைகள் இல்லை என்றால் நான்கில் ஒரு பங்கு என்றும் ஷரியத் சட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது. எனவே இந்து பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு இல்லை. எனவே ஒரு இந்து பெண், அவள் கணவன் உயிருடன் இருக்கும்வரை அவன் தயவில் வாழ்கிறாள். கணவன் இறந்தபின், கணவனின் தாயாதிகள் தயவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். எனவே கணவன் இறந்தபின்னர், அவருக்குச் சேர வேண்டிய பங்கு முழுவதும் அவளின் பங்காக அனுபவிக்கலாம். ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாது. வாழ்நாள் சுதந்திரம் மட்டுமே உண்டு. கிரயம் செய்ய முடியாது. எனவே இது அவளின் ஜீவனாம்ச உரிமை மட்டுமே. இதுதான் 1937-ல் பெண்களுக்குக் கொடுத்த சொத்துரிமை. பின்னர் 1956-ல் வந்த இந்து வாரிசுரிமை சட்டத்தில் விதவை மனைவிக்கு அவளின் கணவனுக்குக் கிடைக்கும் “கூட்டுக் குடும்பச் சொத்தில்” கிடைக்கும் பங்கில் மற்ற வாரிசுகளுடன் ஒரு பங்கு மட்டும் கிடைக்கும்படி மாற்றினார்கள். (கணவரின் “தனிச் சொத்தில்” மனைவிக்கு மற்ற வாரிசுகளுடன் சேர்த்து ஒரு பங்கு கிடைக்கும் என்பது வேறொரு தனிச் சட்டம்).
இங்கு அருணாசலம் செட்டியாரின் வழக்கில் தீர்ப்பு:
இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் 1937 பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. அது மொத்த பிரிட்டீஸ் இந்திய நிலப்பகுதிக்கும் செல்லும். இந்தச் சட்டத்தை, பிரிட்டீஸ் பலுசிஸ்தான், சோன்தல் பர்கானாஸ் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் பர்மாவுக்கு விரிவு படுத்தவில்லை. ஏனென்றால், இந்த சட்டத்தில் கவர்னர்-ஜெனரல் கையெழுத்து இட்ட தேதி 14 ஏப்ரல் 1937. ஆனால் பிரிட்டீஸ் இந்திய நிலப்பரப்பில் இருந்து 1 ஏப்ரல் 1937லிலேயே அது பிரிக்கப்பட்டு விட்டது. 1940-ல் இந்தச் சட்டத்துக்கு ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் அது பர்மா பகுதியை பிரிட்டீஸ் இந்தியப் பகுதி என்று சொல்லவில்லை.
எனவே இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மட்டும் இந்த கோர்ட் அதிகார எல்லைகுக்கு உட்பட்டது. இதில் விவசாய நிலத்துக்கு இந்த 1937 சட்டம் பொருந்தாது.
எனவே, அருணாசலம் என்ற தகப்பனும், அவரின் இறந்த மகனும் கோபார்சனர்கள். எனவே இருவருக்கும் பாதி பாதி பங்கு உள்ளது. அந்த இறந்த மகனுக்கு கிடைத்த பாதி சொத்து அவனின் மனைவியான விதவைக்கு (இங்கு வழக்குப் போட்டவள்) கிடைக்கும். இது 1937 பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்படி கிடைப்பதால், விவசாய நிலத்தில் அவள் பங்கு பெற முடியாது. மற்ற சொத்துக்களில் பங்கு பெறலாம். பர்மாவில் உள்ள சொத்தில் 1937 சட்டப்படி அவளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், 1937 பெண்கள் சொத்துரிமை சட்டம் பிரட்டீஸ் இந்திய எல்லைக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அப்போது, பர்மா பிரிட்டீஸ் இந்தியப் பகுதியாக இல்லை. வேறு நாட்டில் உள்ள சொத்துகளில் அந்த நாட்டு சட்டப்படியே கிடைக்கும்.
அருணாசலம் செட்டியாரின் கூட்டுரிமைபங்கு அவரின் விதவைகளுக்குப் போய் சேரும். டிரஸ்ட் சொத்துக்களில் கடைசி டிரஸ்டி அவரே ஆவார். அடுத்த டிரஸ்டிகள் இல்லாத நிலையில், (இங்கிலாந்து சட்டப்படியே இந்தியாவிலும் இருப்பதால்), அவரின் வாரிசுகளே அடைந்து கொள்ளலாம்.
**


சிற்பக்கலை வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு


சிற்பக்கலை  வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு
இந்தியாவில் உள்ள கோயில்களின் கட்டிடக்கலையை பராமரிக்கவும், சிற்பங்களை உருவாக்கவும், சீரமைக்கவும், தேவை ஏற்பட்டு, 1957-ல் மாமல்லபுரத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கபட்டது. The Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram. இங்கு கோயில் பராமரிப்பு, சிற்ப வேலைப்பாடு முதலிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மொத்தம் 58 துறைகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இது சென்னை பல்கலைகழத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. Bachelor of Fine Arts Degree என்பது 1981 முதல் தொடங்கபட்டுள்ளது. இது நான்கு வருட படிப்பாகும். பின்னர் 8 வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இதற்கு தகுதி எட்டாவது தேர்வு அல்லது தோல்வி இருந்தால் போதும் என்று இருந்தது. பின்னர் 1981-ல் இதை Bachelor of Fine Arts in Traditional Architecture and Traditional Sculputure என்று மாற்றி, அதற்குத் தகுதியாக +2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கொண்டு வந்து, நான்கு வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான் இப்படிப்பட்ட கல்லூரி உள்ளது. 40 மாணவர்கள் வருடாவருடம் வெளிவருகிறார்கள். இது ஆரம்பிக்கப்பட்ட 1957-லிலிருந்து இதுவரை சுமார் 1800 மாணவர்கள் வெளிவந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு ஸ்தபதிகள் தேவைப்பட்டாலும், HR&CE துறை மூலம் இவர்களைத் தேர்வு செய்வதில்லை. மாறாக வெளி ஆட்களிடம் ஒப்பந்தம் மூலமே தேவைப்படும் வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஸ்தபதிகளை அரசாங்கம் நியமனம் செய்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 38,615 இந்து கோயில்கள், ஜெயின் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் அரசின் HR & CE துறையின் கீழ்தான் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.  இங்குள்ள பல கோயில்கள் 100 வருடங்களுக்கும் மேலானவை. சில கோயில்கள் 1000 வருடங்களுக்கும் மேலானவை.
எனவே இந்த கோயில்களுக்கு அந்த பட்டப்படிப்பு படித்த ஸ்தபதிகளை நியமித்தால் என்ன என்று ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுப் போட்டார்.  தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில்களும் Joint Commissioner and Deputy Commissioner of the HR&CE துறையின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு இருக்கும் Engineers கோயில் கட்டிடத் துறை வல்லுநர்கள் அல்ல. அவர்களுடன் ஸ்தபதிகளையும் நியமிக்கலாமே என்று கேட்கிறார். அவர்களுக்கு கோயில் கட்டிட நுணுக்கம், சிலை வடிவமைப்பு நுணுக்கம் தெரியும் என்கிறார்.
ஆனால் அரசு தரப்பில், ஸ்தபதிகளை ஒப்பந்தம் மூலமே நியமித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. அரசு, கல்லூரிகளை உருவாக்கலாம், ஆனால் அவர்களுக்கு வேலைகளையும் உருவாக்க முடியாது என்கிறது.
தமிழ்நாட்டில் 50,000 கோயில்களுக்கு மேல் உள்ளன. அதில் சுமார் 38,000 கோயில்களுக்கு மேல் அரசின் நிர்வாகத்தில் உள்ளது. அதில் சில கோயில்கள் சுமார் 2,000 வருடங்களைத் தாண்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோயில்களில் கர்ப்பகிரகத்தில் உள்ள விக்கிரகங்கள் மட்டுமே சிலைகள் என்று கருத முடியாது. கடவுள் சிலைகளும் இருக்கின்றன. (The temples not only consist of deities in the form of idols, but also sculptures in the form of idols with marvelous architecture).
தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களை Archaeological temples ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 & Act 1991 இவைகளின் நோக்கமே, “பழமையான இந்து கோயில்களை புரணமைப்பு செய்வதற்காக... என்ற நோக்கில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இடையில் கோயில் கமிட்டிகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டு இப்போது Commissioner, Joint Commr., Dy Commr., Asst. Commr. என்ற வரிசையில் நிர்வாகம் நடக்கிறது.
இந்த வழக்கில், ஸ்தபதிகளையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகச் சட்டத்தை கொண்டுவரும்படி அரசுக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
**


Protracted Litigation வழக்கை இழுத்தடிக்கும் மனுக்கள்


 Protracted Litigation
வழக்குப் போடுபவர், தனது சட்ட உரிமையை நிலைநாட்டவே கோர்ட்டை நாடுகிறார். அப்படி வழக்குப் போட்டுவிட்டு, வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருக்க கூடாது. வழக்கு நடத்த தயாராக இருக்க வேண்டும். வழக்கை வேண்டுமென்றே நடத்தால் விட்டுவிடுவது, பின்னர் ஒரு மனுவைப் போட்டு மறுவிசாரனைக்கு கேட்பது, அந்த மனுவையும் காலதாமதமாகப் போடுவது, அந்த கால தாமதத்தை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுவது, அதற்கும் ஏதாவது பொய்யான காரணங்களைக் கூறுவது, இவை எல்லாமே வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமே.
உண்மையிலேயே சில நியாயமான காரணங்களால், வழக்கு நடத்த முடியாமல் விட்டிருப்பார். அப்போது அவ்வாறான மனுவை போட்டு, மறுவிசாரனை கேட்கலாம். ஆனால் அதற்கு நம்பத்தகுந்த காரணமும், ஏற்றுக் கொள்ளகூடிய காரணமும் வேண்டும்.
The litigants cannot be abused for the purpose of prolongation and protection. Litigants are approaching the Court for establishing their legal rights. While doing so, they are expected to be vigilant and proper in disposal of the cases. The Court cannot encourage prolongation of litigation at the instance of the parties.
பொதுவாக, மனுக்களை கால தாமதமாகப் போட்டால், அதற்கு தகந்த, நம்பும்படியான, நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணத்தைச் சொல்ல வேண்டும். கால தாமதத்தை மன்னிப்பது என்பது விசாரனை கோட்டின் தனிப்பட்ட விருப்ப முடிவாகும். அந்த “விருப்ப முடிவில்” அப்பீல் கோர்ட் ஏதும் தலையிட முடியாது.  ஆனால் வேறு சட்ட சிக்கல் இருந்தால் மட்டுமே அப்பீல் கோர்ட் தலையிட முடியும். மற்றும் அந்த விருப்ப முடிவை விசாரனை கோர்ட் தன்னிச்சையாக காரண காரியங்களை கவனிக்காமல் எடுத்திருந்தால் அப்படிப்பட்ட முடிவில் அப்பீல் கோர்ட் தலையிடலாம்.
காலதாமதத்தை மன்னிக்கும் போது, கீழ்கோர்ட் கொஞ்சம் சலுகையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு, வழக்குக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல், வழக்கின் பார்ட்டிகளுக்கு கஷ்டம் கொடுப்பதாக இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொய்யான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட் Rukmini v. Rajendran (2003) 1 LW 585 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லியுள்ளது.
வேறு ஒரு வழக்கான பாங்க் வழக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வழக்கில் (1990-1 LLN 457) Justice M.Srinivasan அவர்களின் தீர்ப்பில், “கால தாமதத்தை மன்னிப்பதால், எதிர் பார்ட்டிக்கு ஒரு நஷ்ட ஒன்றும் இல்லை என்று பொதுவாகச் சொல்லி விட முடியாது. காலம் கடந்து தாக்கல் செய்யும் மனுவை, எதிர்பார்ட்டி புதிதாக சந்திக்கும்போது, மிகுந்த சிரமத்துக்கும் ஆளாவார்” என்று கூறப்படுள்ளது.
“If a litigant chooses to approach the Court long agter the time prescribed under the relevant provisions of the law, he cannot say that ‘no prejudice would be caused to the other side’ by the delay being condoned. The other side would have in all probability destroyed the records thinking that the records would not be relevant as there was no further proceedings in the matter. Hence, to view a matter of condonation of delay the respondent in that application will be fallacious.”
கால தாமதத்தை மன்னிப்பதற்காக Limitation Act Sec.5 இருக்கிறது. அதில், Sufficient cause சரியான காரணம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல வழக்கின் தீர்ப்புகளில் “காலதாம மன்னிப்பு மனுக்களை கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஏனென்றால், அந்த மனு தள்ளுபடியானால், அவரின் “வழக்குப்போடும் உரிமையே” போய்விடும் என்பதால். எனவே கோர்ட்டுகள் கொஞ்சம் காலத்துக்கு ஏற்ற சூழலையும் கவனிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.The Court is to adopt a pragmatic approach to condone the delay when there is no negligence, inaction, or want of bona fide on the part of the applicant. உண்மையில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றால், அவரிடம் கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுகலாம்.
**