Major Gen Somnath Jha (retd)
மேஜர் ஜெனரல் சோம்நாத் ஷா அவர்கள்
இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார்; இவர் இப்போது
ஒரு புது வேலையைத் துவக்கி உள்ளார்;
இந்தியா முழுவதும் சைக்கிளில் தனது
பயணத்தைத் தொடங்கி உள்ளார்; அதற்கு இவர் சொல்லும் காரணம் வித்தியாசமானது; இந்திய
ராணுவத்தில் இதுவரை மொத்தம் 21,000 வீரர்கள் வீரமரணம் (Martyr) அடைந்துள்ளனர்; இவர்களின்
நினைவாக இறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிட சைக்கிள் பயணம் வீதம் மொத்தம் 42,000
நிமிடங்கள் சைக்கிள் பயணம் செய்வதாக உத்தேசித்து தன் பயணத்தில் பாதியை
முடித்துள்ளார்; இன்னும் அவர் கடக்க வேண்டிய நிமிடங்கள் 11,500 பாக்கி உள்ளதாகச்
சொல்லியுள்ளார்;
இவர் கடைசியாக பணியில் இருந்த இடம்
ஹரியானாவில் உள்ள அம்பாலா கன்டோன்மெண்ட்; இங்கு கடந்த செப்டம்பரில் பணி ஓய்வு
பெற்றிருக்கிறார்; இவர் மொத்தம் 37 வருடங்களை ஆர்மி இராணுவப் பணியில் செலவு
செய்திருக்கிறார்;
இவர் சொல்கிறார், “நம் நண்பர்கள்
பலர் தங்கள் வாழ்வை இந்த நாட்டுக்காக அர்பணித்து உள்ளனர்; எனவே நான் பணி ஓய்வு
பெற்ற பின்னர், அவர்களின் நினைவாக இந்த சைக்கிள் பயணத்தைத் தொடர்கிறேன்; இறந்த
21,000 வீரர்கள் நினைவாக ஒருவருக்கு 2 நிமிடங்கள் வீதம் மொத்தம் 42,000 நிமிடங்கள்
எனது சைக்கிள் பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார்;
இதுவரை இவர் 24 மாநிலங்களில்
சைக்கிளில் சென்று உள்ளார்; இதுவரை எனது பயணம் மிகவும் நினைவுபூர்வமாக
இருந்திருக்கிறது; ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாட்டுப்பற்றுடன் இருப்பதை காண
மகிழ்வாக இருக்கிறது என்று கூறுகிறார்;
எனது விருப்பமெல்லாம், “இந்தியக்
குடிமகன், ஒவ்வொரு தீபாவளி அன்றும், வீரமரணமடைந்த ஒரு வீரனின் நினைவாக ஒரு விளக்கை
ஏற்றினால் போதும்; இது அவனைக் கௌரவப்படுத்தும்” என்பதே என்று உணர்வு பூர்வமாகக்
கூறுகிறார்;
No comments:
Post a Comment