Indigenous
In-di-je-nes இன்டிஜீனெஸ்
Existing naturally; living in a
particular region.
Native; inborn; innate;
aboriginal;
அந்த மண்ணிலேயே வாழ்ந்து இருப்பது;
புதிதாக வேறு இடத்தில் இருந்து வராதது; பூர்வீக குடிகள்; பூர்வீக வாழ்வு; பூர்வீக
பழக்க வழக்கம், கலாச்சாரம்;
மண்ணின் மக்கள்; பழங்குடிமக்கள்; மண்ணின்
மணம்; மண்ணின் பழக்கவழக்கம்; மண்ணின் கலாச்சாரம்; மண்ணின் வாழ்க்கைமுறை;
நம் மண்ணிலேயே வாழும் மக்களை
இன்டிஜீனெஸ் மக்கள் என்பர்; வேறு இடத்துக்குச் சென்று வாழ்பவர்களை வந்தோடிகள்
என்பர்; நம் மண்ணிலேயே வளரும் மரம், செடி, கொடி வகைகளையும் இவ்வாறே சொல்வர்;
நம் மண்ணிலேயே பிறந்து வாழ்ந்து
வளர்பவர்கள் ஒரு உரிமையான, சுதந்திரமான வாழ்வு வாழ்வதாக தோன்றும்; வேற்று இடத்தில்
சென்று வாழ்பவர்கள், அங்குள்ள இன்டிஜீனெஸ் மக்களுடன், அவர்களின் பழக்க
வழக்கத்துடன் ஒட்டி வாழ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவர்; அதை மீறிய பழக்க வழக்கம்
இருந்தால், இன்டிஜீனெஸ் மக்களின் கோபத்துக்கு ஆளாகவும் நேரிடும்;
மண்ணின் மைந்தர்களுக்கு ஒருவித
பயமில்லாத, உரிமை நிறைந்த, மனநிறைவான வாழ்வு உண்டு என்பது உண்மையே!
பிழைக்கப் போன இடத்தில், வாயைப்
பொத்திக் கொண்டு வாழவேண்டிய கட்டாயமும் உண்டு; சுதந்திரம் என்பது நாம் பிறந்த மண்ணில்
வாழ்வதுதானோ? மற்றதெல்லாம் ஒரளவு சட்டம் கொடுத்த சலுகையாகத்தான் இருக்க முடியுமோ?
தெலுங்கானாவைச் சேர்ந்த சீனிவாசன்
என்ற இளம் என்ஜினியர் அமெரிக்காவில் வேலை செய்தார்; இவர் தன் நண்பருடன் கன்சாஸ்
மாநிலத்தில் உள்ள ஒலாத் நகரில் உள்ள ஒரு பாரில் இருந்திருக்கிறார்; அப்போது 51
வயதுள்ள அமெரிக்கன் கோபமாக கத்திக் கொண்டு, “எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கடா”
என்று துப்பாக்கியால் சுட்டு அதனால் என்ஜினியர் சீனிவாசன் இறந்துவிட்டார்; அவரின்
உடல் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது; அவர் அங்கு H1B விசாவில் சென்றவர்; அவரின் மனைவி
துணையாக Dependent விசாவில் சென்றவர்; அவர் இப்போது இந்தியா வந்துவிட்டார்; மீண்டும் அவரின் மனைவி
அமெரிக்க திரும்பிச் செல்வதில் பிரச்சனை உள்ளதாம்;
எனவே தெலுங்கான சங்கம் (இந்தியாவை
விட்டு வெளியில் வாழ்வோர் சங்கம்) இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; “நீங்கள்
வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வாழ்ந்தால், அங்கு உங்களின் நண்பர்களுடன்
பேசும்போது தாய்மொழியில் பேசாதீர்கள்; ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; அப்போதுதான்
நீங்கள் அங்குள்ள இன்டிஜீனெஸ் மக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க முடியும்”
என்று அறிவுரை வழங்கி உள்ளது; மேலும், “அங்குள்ள மக்கள் உங்களிடம் கோபமாகப்
பேசினாலும், நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் பின்வாங்குங்கள்” என்றும் கூறிஉள்ளது;
இந்திய அரசும், இந்த நிகழ்வுக்காக
தன் கண்டனத்தை (demarche) அமெரிக்க அரசுக்குத் தெரிவித்துள்ளது;
தன் மண்ணிலேயே வாழ்வது இயல்பான
வாழ்க்கை; பிறர் மண்ணில் வாழ்வது அல்லது பிழைப்பது என்றென்றும் செயற்கை வாழ்வே!
தன்னையும், தன் மண்ணையும் சுற்றியே
வாழ்வை அமைத்துக் கொள்வதே சாலச் சிறந்தது!
**
No comments:
Post a Comment