“First Past The Post”
குதிரை ரேஸில் ஓடிவரும்
குதிரைகளில் எது முதலில் கடைசி கோட்டில் தன் மூக்கை நீட்டுகிறதோ அதுவே வென்றதாக
அர்த்தம்; இதைத்தான் “first past the post” என்கிறார்கள்;
இதைத்தான் மக்களாட்சியில்
தேர்தலில் நின்று வென்றவர்களுக்கும் பொதுவான விதியாக வைத்துள்ளனர்; ஒரு தேர்தலில்
பலர் போட்டியிட்டாலும், அதில் யார் எல்லோரையும் விட அதிக வாக்குகள்
பெற்றுள்ளார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்;
இங்கு வெற்றிக்கு இவ்வளவு
வாக்குகள் வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது; சில நாடுகளில் 50% க்கு மேல் வாக்குகள்
பெற்ற ஒருவரே வெற்றி பெற்றவர் என்ற விதி உள்ளது; பாதிக்கு மேல் உள்ள மக்களின்
நம்பிக்கையைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார்;
இந்தியாவில், first past the post முறையே அமலில் உள்ளது; இங்கு 30% 40% வாக்குகள்
பெற்றாலே வெற்றி பெற முடியும். தேர்தல் விதிமுறைகளுக்கு இது இலகுவாக இருப்பதால் பல
நாடுகள் இந்த முறையிலேயே வெற்றியை நிர்ணயிக்கின்றன;
இந்த first past the post (FPTP) முறையில் பல வேட்பாளர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே நாம்
வாக்களிக்க முடியும்; இந்த முறையில்தான் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா
போன்ற காலனி நாடுகளில் தேர்தல் நடக்கின்றன;
அமெரிக்க பொதுதேர்தல் இந்த FPTP முறையில்தான் நடக்கின்றன; ஆனால்
ஒருசில மாநிலங்களில் மாநிலத் தேர்தலில் இரட்டை ஓட்டு முறையும் உள்ளது; முதல் ஓட்டு
ஒருவருக்கும், இரண்டாவது ஓட்டு ஒருவருக்கும் போட வேண்டும்; வேட்பாளர் முதல்
ஓட்டுகளில் வெற்றி பெற முடியாவிட்டால், இரண்டாவது ஓட்டுக்களில் எண்ணிக்கையில்
கணக்கை எடுத்து வெற்றியை அறிவிப்பர்; இதில் இரண்டாவது ஓட்டுக்களைப் பெற்றவர்கூட
வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உண்டு;
இந்த FPTP முறையை ‘ஒற்றைப் பெருவாரி முறை’
என்பர்; ஒரே ஓட்டுத்தான் போட முடியும்; அதில் அதிக ஓட்டுக்களை பெற்றவர்
வெற்றிபெறுவார் என்பது இதன் பொருள்;
இந்த FPTP முறையில் தேர்தல் நடத்த எளிமையானது
என்பதால் இந்தியாவில் இதைப் பின்பற்றுகிறோம்; படிக்காவதர் அதிகம் இருப்பதால் இது
சௌகரிகமாக இருக்கிறதாம்; இரட்டை ஓட்டு முறையில், இரண்டு ஓட்டுப் போட வேண்டும்
என்பதால், இது எளிதாக இல்லை என்றும், ஓட்டு எண்ணிக்கையும் காலதாமதம் ஆகும் எனக்
கூறுகின்றனர்; குறிப்பிட்ட சதவிகித ஓட்டுகளைப் பெறவேண்டும் என்ற கட்டாய முறையில்,
யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமலும் போய்விடக் கூடும் என்பதால், அதுவும் சிரமமான
முறை;
No comments:
Post a Comment