இன்சால்வன்சி
வெங்கடரத்தினம் நாயுடு சென்னையில் தென்னக மராத்தா ரயில்வேயில் வேலை செய்தார். 1927-ல் இவரின் சொத்தின் பேரில் ரூ.8,000 அடமானக் கடன் வாங்கி இருந்தார். மேலும் இவர் கைக்கடனாக ரூ.3,900 மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஒருவர் இவரின் கடனுக்கு வழக்குப்போட்டு இவரின் சம்பளத்தை பிடித்து விட்டார். ரயில்வே நிர்வாகம் இவரை வேலையிலிருந்து தூக்கி விட்டது. அப்போது செட்டில்மெண்டாக இவரின் புராவிடண்ட் பண்ட் பணமான ரூ.3,000/-த்தை இவரிடமே கொடுத்து விட்டது. அதை, இவர் தன் மனைவியிடம் கொடுக்கிறார். அவர் அந்தப் பணத்தைக் கொண்டு, கணவர் அடமானம் வைத்த இவரின் நகைகளை ரூ.300 க்கு மீட்டி விடுகிறார்.
இந்த நிலையில் மறுமாதம் இவர் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத கடனாளி என்று கோர்ட்டில் மனுப்போட்டு இன்சால்வன்டு (Insovlent) ஆகிறார். அதில் நியமிக்கப்பட்ட அபீஷியல் அசைனி (Official Assignee) அலுவலர் அவர் வாங்கிய புராவிடன்ட் பணத்தை (மனைவிக்குக் கொடுத்த அந்தப் பணத்தை) அபீஷியல் அசைனி மனைவியிடமிருந்து திரும்பக் கேட்கிறார்.
ஒருவர் அவர் பட்ட கடன்களைக் கொடுக்க முடியாத நிலைக்குச் சென்றால் அவரை கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத கடனாளி (Insolvent) என்று கோர்ட் மூலம் உத்தரவு வாங்கி கொள்ளலாம். கடனைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதை அந்தக் காலத்தில் “மஞ்சள் நோட்டீஸ்” கொடுத்து விட்டார் என்று சொல்வார்கள். இப்போது சிலர், கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டே இந்த வேலையைச் செய்கிறார்கள். இதில் இவ்வாறு மனுப் போட்டு இன்சால்வன்ட் என்று சொல்வதற்காக கோர்ட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் எந்த சொத்தையும் விற்று இருக்கக் கூடாது. அப்படி விற்றிருந்தால், அவர் அதைத் திட்டமிட்டே செய்தார் என்று கருதி அந்த விற்பனை செல்லாது என அந்தச் சட்டம் சொல்கிறது.
இப்படி இன்சால்வன்டு என்று கோர்ட் அறிவித்து விட்டால், அவரின் கைவசம் இருக்கும் சொத்துக்களை பணத்தை Official Assignee என்ற கோர்ட் அதிகாரி கைவசம் கொண்டு வந்து, அவருக்கு வர வேண்டி பாக்கிகள் ஏதாவது இருந்தால் அதை வசூல் செய்தும், அவர் கொடுக்க வேண்டிய கடன்காரர்களுக்கு அதை பங்கீடு செய்து (குறைவாக இருந்தாலும்) கொடுத்து கணக்கைத் தீர்த்து விடுவார். அப்படிச் செய்து விட்டால், இனி அவர் யாருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்று Insolvency Act சொல்கிறது.
இந்த வழக்கில், புராவிடன்ட் பணமானது, அவருக்கு வரவேண்டிய பணமா அல்லது அதை கோர்ட் கேட்டு வாங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சிவில் சட்டப்படி, புராவிடன்ட் பணத்தை கோர்ட் அட்டாச்மெண்ட் செய்ய முடியாது. மேலும் பிரிவு 3, புராவிடன்ட் பண்ட் சட்டம் 1925-ன்படி அதை fficial Assignee கேட்டு வாங்க முடியாது என்று சொல்லி உள்ளது. எனவே அவர் கொடுக்கத் தேவையில்லை என்று வாதம் செய்கிறார்.
ஆனால் அந்தப் பணம், முதலாளியிடம் இருக்கும்வரை தான், அது புராவிடன்ட் பண்ட் பணம் ஆகும். தொழிலாளியின் கைக்கு வந்து விட்டால் அது சாதாரணப் பணம் போலத்தான். எனவே அதையும் கேட்க முடியும் என்று Official Assignee வாதம் செய்கிறார்.
ஆனால் வேறு ஒரு வழக்கில், தொழிலாளி இறந்து விடுகிறார். அவரின் புராவிடன்ட் பணத்தை அவரின் நாமினிக்கு கொடுக்கிறார்கள். அப்போது அதை Official Assignee கேட்க முடியாது என்று ஒரு தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.
மேலும் புராவிடன்ட் பணம் என்பது Compulsory Deposit. எனவே அதை எந்த கோர்ட்டும் அட்டாச்மெண்ட் செய்ய முடியாது. Gratuity பணமாக இருந்தால் கோர்ட் அதை கேட்கலாம் என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.
**
No comments:
Post a Comment