Friday, July 17, 2020

நம்பிக்கைத் துரோகம்

நம்பிக்கை துரோகம் என்ற வழக்கு

Criminal Breach of Trust under Sec.409 of IPC

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டாலை என்று ஒரு நீதிபதி சென்னை ஐகோர்ட்டில் 1930களில் பதவியில் இருந்தார். இவர் சென்னை தண்டையார் பேட்டையில் வசித்தார். இவர் பெயரில் இப்போதும் சென்னை தண்டையார் பேட்டையில் “ஜஸ்டிஸ் பண்டாலை தெரு” என்று ஒரு தெரு பெயரிடப் பட்டுள்ளது. இன்றும் இருக்கிறது.

இவர் 1930-ல் ஒரு கிரிமினல் வழக்கில் தீர்ப்புக் கூறி உள்ளார். அதைப் பற்றி:

தென்னார்காடு மாவட்டம், சிறுகடம்பூர் என்ற ஊரில் முனுசாமி நைனார் என்ற ஒரு முன்சீப் (அந்தக் காலத்தில் குறிப்பிடும் Headman) என்பவர் இருந்தார். அங்குள்ள சிறு விவசாயிகளுக்கு பயிர் விளைவிக்க பொருள்கள் வாங்குவதற்காக கடன் கொடுக்கும் வழக்கம் இருந்தது. (முகலாய மன்னர்கள் காலத்திலிருந்து இருக்கிறது). அப்படிக் கடன் கொடுப்பதை தக்கவி கடன் (Takkavi Loan) என்று பெயர் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு கடனை ஒரு விவசாயி அரசாங்கத்திடம் வாங்கி இருந்தார். அவரின் பாக்கி ரூ.17/- இருந்திருக்கிறது. அந்த கடனை அவர் 10-4-1925-ல் கொண்டு வந்து, இந்த முன்சீப் முனுசாமி நைனாரிடம் கொடுத்திருக்கிறார். இந்த முன்சீப் தான் அப்படிப்பட்ட கடனை வசூல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் அதை காலதாமதமாக 20-7-1925-ல் அரசு கஜானாவில் செலுத்தி இருக்கிறார். அவர் செலுத்தும் போது, கடன் தொகை ரூ.17 உடன் சேர்த்து வட்டி ரூ.1 சேர்த்து மொத்தம் ரூ.18 செலுத்தி உள்ளார்.

அந்த விவசாயி, தான் ஏற்கனவே கடனை அந்த மூன்சீப் வசம் கொடுத்து விட்டதாகவும், அதை அவர் இரண்டு மாதங்கள் கையாடல் செய்து அவர் உபயோகித்துக் கொண்டு காலதாமதமாக அரசுக்கு செலுத்தி உள்ளார். எனவே அவர் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409ன்படி குற்றம் செய்திருக்கிறார். பிரிவு 409ன்படி ஒரு அரசு ஊழியர், அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் என்று வழக்கு வருகிறது.

இதை விசாரித்த திருக்கோயிலூர் மாஜிஸ்டிரேட், இது குற்றம்தான் என்று தீர்ப்புக் கூறி, அதற்குறிய தண்டனையாக அன்று மட்டும் கோர்ட்டிலேயே அமர்ந்து இருக்கும் ஒரு நாள் தண்டனையும், அபராதமாக ரூ.60ம், அதைக் கட்டத் தவறினால் 15 நாட்கள் சிறை தண்டனையும் கொடுத்தார். அதை எதிர்த்து அவர் செசன்ஸ் கோர்ட்டுக்கு அப்பீல் சென்றார். அங்கும் இதே தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் வந்தார். இங்கு நீதிபதி கிருஷ்ணன் பண்டாலை அவர்கள் தனது தீர்ப்பில் கீழ்கண்டவாறு கூறி உள்ளார்.

புகார்தாரரான அந்த கடன் பணத்தை கட்டிய சாட்சி, “ஏற்கனவே இந்த முன்சீப் இப்படி ஒரு தப்பைச் செய்து கிரிமினல் கோர்ட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அந்த வழக்கில் விடுதலை ஆகி விட்டார். அந்த வழக்கில் தண்டனை கொடுத்திருந்தால், இந்த பதவியில் அவர் இருந்திருக்க மாட்டார் என்றும்; இந்த தவறு மீண்டும் நடந்திருக்காது” என்றும் கூறி உள்ளதைப் பார்க்கும்போது, அந்த சாட்சி (புகார்தாரர்) இந்த முன்சிப் மீது எவ்வளவு குரோதம் வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

அந்த புகார்தாரரான சாட்சி, “தான் கடன் பாக்கியை மட்டும் தான் கொடுத்தேன். முன்சீப் தான் மேலும் ரூ.1 வட்டி சேர்த்து கட்டி உள்ளார். அவர் பணத்தைப் போட்டு வட்டி கட்டி உள்ளார். அவர் பணத்தை கையாடி விட்டதால்தான் வட்டியும் சேர்த்து அவரே கட்டி உள்ளார்” என்று சாட்சியம் கூறி உள்ளார்.

ஆனால், அரசு வக்கீலிடம் கேட்கும்போது, “இந்த கடன் பணத்தை வசூல் செய்த எவ்வளவு காலத்துக்குள் அரசு கஜானாவில் கட்டி விட வேண்டும் என்ற விதி ஏதும் உள்ளதா என்ற கேள்விக்கு, அரசு வக்கீல் அப்படி ஒன்றும் காலக்கெடு இல்லை” என்று கூறியுள்ளார்.

எனவே காலம் தாழ்த்திக் கட்டியது உண்மைதான் என்றாலும், அது கையாடல் செய்ததாக ஆகுமா என்ற கேள்வி வரும்போது, அவர் அதை தன் சொந்த செலவுகள் எதற்காகவாவது உபயோகித்துக் கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதற்கு சாட்சியமும் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே If authority were necessary for the proposition, that mere dealy in payment of money entrusted to a person, when there is no particular obligation to pay it at a certain date, does not amount to and does not furnish by itself a sufficient proof of misappropriation. என்று ஏற்கனவே கல்கத்தா ஐகோர்ட் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (Gunanada Dhone v. Lala Santi Prakash Nandy, AIR 1925 Cal 613).

எனவே இந்த வழக்கில், அவர் தவறு செய்யவில்லை என்றும், அரசு பணத்தை கையாடல் செய்து நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது என்றும், எனவே அவருக்கு கொடுத்த ஒருநாள் தண்டனையை ரத்து செய்தும், அவர் செலுத்திய அபராதப் பணம் ரூ.60ம் அவரிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும் தீர்ப்புக் கூறி இருந்தார்.

ஒரு வழக்கில் ஒருவரை சிக்க வைக்கும் கெட்ட எண்ணமானது 100 ஆண்டுகளுக்கு முன்னும் இதே மனநிலைதான் மக்களிடம் இருந்திருக்கிறது. வஞ்சகம் என்பது ஒரு கொடிய விஷம். எதிரியை உருவாக்கிக் கொண்டு, அவனை வஞ்சகத்தால் வீழ்த்துவது என்பது ஒரு வகை மன நோய்தான். தவறுகளைத் தட்டிக் கேட்கத்தான் வேண்டும். அதை வஞ்சகத்தால் செய்வது அதைவிடத் துரோகமானதே!

**

 


Sunday, July 12, 2020

இன்சால்வன்சி INSOLVENCY

இன்சால்வன்சி

வெங்கடரத்தினம் நாயுடு சென்னையில் தென்னக மராத்தா ரயில்வேயில் வேலை செய்தார். 1927-ல் இவரின் சொத்தின் பேரில் ரூ.8,000 அடமானக் கடன் வாங்கி இருந்தார். மேலும் இவர் கைக்கடனாக ரூ.3,900 மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஒருவர் இவரின் கடனுக்கு வழக்குப்போட்டு இவரின் சம்பளத்தை பிடித்து விட்டார். ரயில்வே நிர்வாகம் இவரை வேலையிலிருந்து தூக்கி விட்டது. அப்போது செட்டில்மெண்டாக இவரின் புராவிடண்ட் பண்ட் பணமான ரூ.3,000/-த்தை இவரிடமே கொடுத்து விட்டது. அதை, இவர் தன் மனைவியிடம் கொடுக்கிறார். அவர் அந்தப் பணத்தைக் கொண்டு, கணவர் அடமானம் வைத்த இவரின் நகைகளை ரூ.300 க்கு மீட்டி விடுகிறார்.

இந்த நிலையில் மறுமாதம் இவர் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத கடனாளி என்று கோர்ட்டில் மனுப்போட்டு இன்சால்வன்டு (Insovlent) ஆகிறார். அதில் நியமிக்கப்பட்ட அபீஷியல் அசைனி (Official Assignee) அலுவலர் அவர் வாங்கிய புராவிடன்ட் பணத்தை (மனைவிக்குக் கொடுத்த அந்தப் பணத்தை) அபீஷியல் அசைனி மனைவியிடமிருந்து திரும்பக் கேட்கிறார்.

ஒருவர் அவர் பட்ட கடன்களைக் கொடுக்க முடியாத நிலைக்குச் சென்றால் அவரை கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத கடனாளி (Insolvent) என்று கோர்ட் மூலம் உத்தரவு வாங்கி கொள்ளலாம். கடனைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதை அந்தக் காலத்தில் “மஞ்சள் நோட்டீஸ்” கொடுத்து விட்டார் என்று சொல்வார்கள். இப்போது சிலர், கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டே இந்த வேலையைச் செய்கிறார்கள். இதில் இவ்வாறு மனுப் போட்டு இன்சால்வன்ட் என்று சொல்வதற்காக கோர்ட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் எந்த சொத்தையும் விற்று இருக்கக் கூடாது. அப்படி விற்றிருந்தால், அவர் அதைத் திட்டமிட்டே செய்தார் என்று கருதி அந்த விற்பனை செல்லாது என அந்தச் சட்டம் சொல்கிறது.

இப்படி இன்சால்வன்டு என்று கோர்ட் அறிவித்து விட்டால், அவரின் கைவசம் இருக்கும் சொத்துக்களை பணத்தை Official Assignee என்ற கோர்ட் அதிகாரி கைவசம் கொண்டு வந்து, அவருக்கு வர வேண்டி பாக்கிகள் ஏதாவது இருந்தால் அதை வசூல் செய்தும், அவர் கொடுக்க வேண்டிய கடன்காரர்களுக்கு அதை பங்கீடு செய்து (குறைவாக இருந்தாலும்) கொடுத்து கணக்கைத் தீர்த்து விடுவார். அப்படிச் செய்து விட்டால், இனி அவர் யாருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்று Insolvency Act சொல்கிறது.

இந்த வழக்கில், புராவிடன்ட் பணமானது, அவருக்கு வரவேண்டிய பணமா அல்லது அதை கோர்ட் கேட்டு வாங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.  சிவில் சட்டப்படி, புராவிடன்ட் பணத்தை கோர்ட் அட்டாச்மெண்ட் செய்ய முடியாது. மேலும் பிரிவு 3, புராவிடன்ட் பண்ட் சட்டம் 1925-ன்படி அதை fficial Assignee கேட்டு வாங்க முடியாது என்று சொல்லி உள்ளது. எனவே அவர் கொடுக்கத் தேவையில்லை என்று வாதம் செய்கிறார்.

ஆனால் அந்தப் பணம், முதலாளியிடம் இருக்கும்வரை தான், அது புராவிடன்ட் பண்ட் பணம் ஆகும். தொழிலாளியின் கைக்கு வந்து விட்டால் அது சாதாரணப் பணம் போலத்தான். எனவே அதையும் கேட்க முடியும் என்று Official Assignee வாதம் செய்கிறார். 

ஆனால் வேறு ஒரு வழக்கில், தொழிலாளி இறந்து விடுகிறார். அவரின் புராவிடன்ட் பணத்தை அவரின் நாமினிக்கு கொடுக்கிறார்கள். அப்போது அதை Official Assignee கேட்க முடியாது என்று ஒரு தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.

மேலும் புராவிடன்ட் பணம் என்பது Compulsory Deposit. எனவே அதை எந்த கோர்ட்டும் அட்டாச்மெண்ட் செய்ய முடியாது. Gratuity பணமாக இருந்தால் கோர்ட் அதை கேட்கலாம் என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.

**


Thursday, July 9, 2020

Profit a Prendre புராபிட் எ பிரன்டர்

Profit a Prendre புராபிட் எ பிரன்டர்:

புராபிட் எ பிரன்டர் (Profit a Prendre) என்பது ஒரு பிரென்ஞ் சட்டச் சொல். பலனை எடுத்துக் கொள் என்று இதன் பொருள். அதாவது ஒரு நிலத்தில் கிடைக்கும் பலனை மட்டும் அந்த நிலத்தில் நுழைந்து எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும். ஒரு நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது. அதில் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வளர்ந்த மரங்களை (Timber) வெட்டி எடுத்துக் கொள்ள மற்றொருவருக்கு அந்த நிலத்தின் சொந்தக்காரர் அனுமதி கொடுத்து இருந்தால், அவர் இந்த நிலத்தில் நுழைந்து அந்த மரங்களை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அதற்காக மட்டுமே அவர் நிலத்தில் நுழைய முடியும். மற்றபடி நிலத்தில் அவர் உரிமை கொண்டாட முடியாது. அந்த நிலத்தில் உரிமை இருக்கிறது என்பதால் அங்கேயே நான் இருப்பேன் என்றும் சொல்ல முடியாது.

இதற்கு மாறாக, ஒரு சொத்தை ஒருவர் அதில் ஏதாவது தொழில் செய்ய அல்லது குடியிருக்க குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் என்றால், அந்த நிலத்தை அவர் (வாடகைதாரர்) தன் கைவசம் வைத்து அனுபவிக்க அவருக்கு அனுமதியுண்டு. அதாவது அந்த சொத்து  அவர் கைவசம் இருக்கும். சொத்தின் அவர் குடியிருக்கும் உரிமை உள்ளது.

ஆனால், புராபிட் அ பிரன்டர் என்பது நிலத்தில் நுழையும் உரிமை மட்டும் உள்ளது. மற்றபடி அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமை கிடையாது. வாடகைக்கும், இந்த புராபிட் அ பிரன்டருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். புராபிட் அ பிரன்டர் என்பது புராபிட் என்னும் வருமானத்தை அடைந்துகொள் என்ற பொருளில் சொல்லும் பிரென்ஞ் சட்ட வார்த்தை.

ஒரு குளத்தில் ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது அல்லது அந்த குளமும் அதில் உள்ள நீர் இருக்கும் நிலமும் ஒரு அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குளத்தில் உள்ள மீன்களை மட்டும் (அவை வளர்ந்தவுடன்) பிடித்துக் கொள்ளும் உரிமையை அரசாங்கம் ஒருவருக்கு கொடுக்கிறது. அவர், அங்கு மீன்களை வளர்க்கலாம். அதற்கு இரை போடலாம். அதற்காக இந்த் குளத்தில் அவர் இறங்கி வேலை செய்யலாம். மீன்கள் வளர்ந்தவுடன் அவைகள் பிடித்துக் கொள்ளலாம். மற்றபடி அங்கு இருக்கும் நீரிலோ, அந்த அடி மண்ணிலோ, அந்தக் குளம் இருக்கும் நிலத்திலோ அவருக்கு உரிமை ஏதும் இல்லை. இப்படி விளைச்சலை எடுத்துக்  கொள்வது, அல்லது அதன் பலனை மட்டும் எடுத்துக் கொள்வதை புராபிட் அ பிரன்டர் என்று சொல்கிறது சட்டம்.

அந்தக் காலத்தில், ஆறுகளில் படகு, மோட்டர் படகு இவைகளை விட்டு, அதில் ஆட்களை கட்டணம் வாங்கிக் கொண்டு விடும் தொழில் செய்வர். இந்த உரிமையை அரசாங்கத்திடமிருந்து பெறுவர். ஒரு வருடமோ அல்லது பல வருடங்களுக்கோ இதைப் பெறுவர். அப்படி அந்த ஆற்றை உபயோகப் படுத்தும் போது, அவர் அந்த ஆற்றில் வேறு எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதில் உள்ள பலனை மட்டும் அனுபவிக்க முடியும்.

இதில், வாடகை, குத்தகை போன்ற நிலத்தை, கட்டிடத்தை எடுத்து அதை உபயோக்கிக்கும் போது, அந்த நிலத்தை, கட்டிடத்தை அனுபவிக்கும் உரிமையை வாடகைதாரர் பெறுகிறார். அதுவரை நிலத்தின் சொந்தக்காரர் இந்த நிலத்தில் நுழைய முடியாது.

ஆனால் புராபிட் எ பிரன்டர் முறையில் பலனைப் பெறுபவர் நிலத்தில் எந்த தங்கும் உரிமையும், அனுபவிக்கும் உரிமையும் கொண்டாட முடியாது.

மேலும், இந்த புராபின் எ பிரன்டர் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றம் செய்ய முடியும். அந்த உரிமை மாற்றத்தை பதிவுப் பத்திரம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதே போலவே காடுகளில் உள்ள மரங்களை வெட்டிக் கொள்வது, மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடு மேய்த்துக் கொள்ளும் உரிமை, மாந்தோட்டத்தில் மாம்பழங்களை மட்டும் பறித்துக் கொள்ளும் உரிமை, போன்றவைகளும்  அடங்கும்.

**


Sunday, July 5, 2020

இது கலிகாலம்

இது கலிகாலம்

கலியுகம் பிறந்ததிலிருந்தே இந்த உலகம் தில்லு-முல்லுடன் தான் பிறந்து வந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

எடை அளவான lb என்றால் புவுண்ட் (Pound). அந்த lb யை லத்தீன் மொழியில் libra என்பர். லிப்ரா என்றால் தராசு. ரோமானிய கலாச்சாரத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் பவுண்ட் என்றே எடை அளவையே பழக்கத்தில் வைத்திருந்தனர். கணக்கி்ல் 2.2 பவுண்ட் என்பது சுமார் ஒரு கிலோ எடை கொண்டது.

1882-ம் வருடத்தில், திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பாம்பே ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் அனுப்புவதற்காக திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய ரயில்வே புக்கிங் கிளாக்கை அணுகுகிறார். இவர் 128 பவுண்ட் (128 lbs) எடையுள்ள வெள்ளிக் கட்டிகளை பார்சல் அனுப்ப வருகிறார்.  அப்போது அதன் மதிப்பு ரூ.4,300/-.  அதாவது 128 பவுண்ட் அல்லது 58 கிலோ எடை கொண்ட வெள்ளியின் அப்போதைய விலை ரூ. 4,300/- என்றால், ஒரு கிலோ வெள்ளி ரூ.74 இருக்க வேண்டும். இது ஒரு சுமார் மதிப்புத்தான். ஏனென்றால், இந்த வெள்ளி கட்டி பார்சலை அனுப்பும் போது அதன் உண்மையான விலையைச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே புக்கிங் கிளார்க் இந்த பார்சலை வாங்கிக் கொண்டு, 128 பவுண்ட் எடை எனச் சரிபார்த்து, அதை ஏற்றுக் கொண்டார்.

பார்சல் பாம்பே ரயில்வே நிலையத்தை வந்து அடைகிறது. அதை வாங்கிக் கொள்ள ஒருவர் வருகிறார். அங்குள்ள ரயில்வே கிளார்க் அந்த பார்சலை எடை போட்டுப் பார்க்கிறார். எடை 78 பவுண்ட் தான் உள்ளது. 78 பவுண்ட் என்றால் கிலோக் கணக்கில் சுமார் 35 கிலோ. உடனடியாக பாம்பே ரயில்வே கிளார்க், திருச்சிராப்பள்ளி ரயில்வே கிளார்க்குக்கு ஒரு தந்தி அடித்து விபரம் தெரிவிக்கிறார். ஆனால் அவரோ அந்தப் பார்சல் 128 பவுண்ட் தான் என்று சொல்லி விட்டார்.

இந்த பார்சலை திருச்சிராப்பள்ளியில் அனுப்பும்போது, அது வெள்ளிக் கட்டிகள் கொண்டது என்றோ, அதன் மதிப்பு எவ்வளவு என்றோ கூறி இருந்தால், அதிக மதிப்புடைய பொருள்களுக்கு அதிக சரக்குக் கட்டணம் வசூலித்து அதை அதே அக்கறையுடன் கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள். ஆனால் இதை சாதாரண புக்கிங்கில் பதிவு செய்ததால், குறைவான சரக்குக் கட்டணத்துடன் வந்து சேர்ந்து விட்டது.

எனவே பம்பாய் ரயில்வே கிளார்க், அதற்குறிய அதிக கட்டணத்தைக் கேட்கிறார். வந்தவர் அப்போது பணம் கொண்டு வராததால், வீட்டுக்குப் போய் கொடுத்து விடுகிறேன் என்கிறார். அந்த பார்சலுடன், ரயில்வே ஊழியர் ஒருவரும் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவர் பார்சலை பிரித்துப் பார்க்கிறார்.

அந்த பார்சலில் 128 பவுண்ட் எடையில் ஏழு வெள்ளிக் கட்டிகள் இருக்க வேண்டும்.  (ஒவ்வொரு கட்டியும் எட்டுக் கிலோ). ஆனால் உள்ளே இருந்ததோ இரண்டு வெள்ளிக் கட்டிகள் மட்டுமே, மீதி உள்ள இடத்தில் கற்களை வைத்துள்ளார்கள். இதை ரயில்வே ஊழியரும் பார்த்து இருக்கிறார்.  

எனவே அப்போது இருந்த South Indian Railway Company (தென்னிந்திய ரயில்வே கம்பெனி) மீது வழக்குப் போடுகிறார். பார்சலில் காணாமல் போன பொருளுக்கு நஷ்ட ஈடு கேட்கிறார். இந்த ரயில்வே கம்பெனியின் பொறுப்பின்மையால் தான் இந்த இழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

ரயில்வே கம்பெனியோ, இந்த பார்சல் வெள்ளிக் கட்டிகள் கொண்டது என்றோ, அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்றோ, இந்த பார்சலை அனுப்பியவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்கு அதிக கட்டணம் வாங்கி இருப்போம். சரக்கையும் பத்திரமாகப் பார்த்துச் சேர்த்திருப்போம். இங்கு, சாதாரணக் கட்டணம் மட்டுமே செலுத்தப்பட்டதால், அதற்குறிய சாதாரண நஷ்ட ஈடுதான் கொடுக்க முடியும். வெள்ளியின் விலை கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டது.

ரயில்வேயில் பார்சல் அனுப்பும்போது, சாதாரண பார்சல் என்றால், அதற்கு விலை சொல்லத் தேவையில்லை. எடைக்கு கட்டணம் கட்டினால் போதும், ஆனால், வழியில் அந்தப் பொருள் திருடு போய் விட்டால், அதற்காக ஒரு சாதாரண தொகை மட்டுமே பொறுப்பு என்று அந்த பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் நஷ்ட ஈடாகக் கொடுக்கும்.

அப்போதைய ரயில்வே சட்டமான Act XVIII of 1854-ல் மேலே சொன்னபடிதான் சட்டமும் உள்ளது.

கோர்ட்டில் வாதம் என்னவென்றால்: இந்த பொருள் களவு போய் விட்டது என்பதல்ல. ரயில்வே ஊழியர்களே திட்டமிட்டு திருடி எடுத்துக் கொண்டார்கள் என்றும், அதன் ஊழியர்கள் செய்த குற்றத்துக்கு ரயில்வே கம்பெனி தான் பொறுப்பு என்றும், அதனால் நஷ்ட ஈட்டை ரயில்வே கம்பெனி “முதலாளி” என்ற வகையில் கொடுக்க வேண்டும். ஆனால் ரயில்வே கம்பெனியோ, அதை மறுத்து, இங்கு ரயில்வே சரக்கு கொண்டு போய் சேர்ப்பதால், Carrier சரக்கு ஊர்தி என்றே கணக்கில் கொள்ள வேண்டும் என்று வாதம் செய்கிறது.

இங்கிலாந்தில் கேரியர் சட்டம் 1854 என்பது தான், இந்தியாவில் இந்தியன் கேரியர் சட்டம் III of 1865 என்று உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள சில பிரிவுகள் மட்டும் இங்கு மாற்றத்துடன் உள்ளது.

மற்ற கேரியர்கள் (லாரி, கப்பல், விமானம்) வேறு விதமான சரக்கு அனுப்பும் முறைகள். ஆனால் ரயில்வே சரக்கு கேரியர்கள் வேறு முறையில் அனுப்புவர். இங்கு ஒரு சரக்கு பல இடங்களில் மாறி மாறிச் செல்லும்.

The Indian Carriers Act 1865 presumes the general liability of common carriers of the safe conveyance and due delivery of goods delivered to them to be carried for hire. இதன்படி இந்த கேரியர்கள் கொண்டு செல்லும் பொருள் சேதம் ஆகி விட்டால், ஒரு குறைந்த அளவுக்குத் தான் அதன் நஷ்டத்தைக் கொடுக்க முடியும் என்று இந்த சட்டம் வரைமுறை வைத்துள்ளது. அது கேரியர்களுக்கு ஒரு பாதுகாப்பு ஆகும்.

ஆனால் ரயில்வே கேரியர், “ரயில்வே சட்டம் 1854” ன்படி ஒரு சாதாரண சரக்கு என்று புக்கிங் செய்யப்பட்டால் அதற்கு சாதாரண நஷ்ட ஈடுதான் கொடுக்க முடியும், அதே நேரம், அந்த சரக்கின் விலை விபரம் குறிப்பிட்டு, அதற்கும் சேர்த்து அதிக கட்டணம் செலுத்தி இருந்தால், அந்த பொருள் சேதம் அடைந்து விட்டால், அதன் விலையை நஷ்ட ஈடாக கொடுக்க முடியும் என்று சொல்லி உள்ளது.

இந்த வழக்கில் அந்த வெள்ளிக் கட்டிகளின் விலைக்கு சரக்குக் கட்டணம் செலுத்தவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் வெள்ளி விலையை நஷ்ட ஈடாக கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு நடந்துள்ளதால், வெள்ளி விலையை நஷ்ட ஈடாக ரயில்வே கொடுக்கத் தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட் 1882-ல் தீர்ப்புக் கூறி விட்டது.

Muthayalu Venkatachala Chetti v. South Indian Railway Company (1882 ILR 5 Mad 208)

 ஏழு வெள்ளிக் கட்டிகளில் இரண்டு தான் பம்பாய் போய்ச் சேர்ந்திருக்கிறது. உண்மையில் ஏழு கட்டிகள்தான் அனுப்பினார்களா? அல்லது இரண்டு கட்டிகள்தான் அனுப்பினார்களா? அல்லது ரயில்வே ஊழியர் யாராவது திறமையாகத் திருடி விட்டார்களா? அல்லது அப்போதே இப்படிப்பட்ட திருட்டு கும்பல் ஊடுறுவி உள்ளதா? என்ற பல கேள்விகள் எழுகிறது.

ஐகோர்ட், நஷ்டத்துக்கு யார் பொறுப்பு என்ற அளவில் தீர்ப்புக் கொடுத்து விட்டது. ஆனால், இதில் எது உண்மை என்று கடைசிவரை தெரியாமலேயே போய் விட்டது. கலிகாலம் என்பது சரிதானே!

**


Wednesday, July 1, 2020

Corporation by Prescription

Corporation by Prescription

Akhara Panchaiti (of Sri Sat Guru Nanak Nirwan Panch) gave loan to a borrower in the year 1889. The said Akhara Panchaiti filed suit for sale of the mortgaged property.

The trial Court dismissed the suit on the ground that it is not a corporation and it has no legal status to file such a suit. The District Court, in its appeal, confirmed the Trial Court judgment.

Hence the Akhara Panchaiti filed the Second Appeal before the Allahabad High Court.

They claimed that the Akhara Panchaiti was a corporation by prescription and entitled to sue in its corporate name.

Akhara Panchaiti is an association formed by the followers of Guru Nanak, who flourished in the 15th Centurary. Certain of his followers are stationary. They carry on money dealings and acquire immovable property and distribute food and clothing to other followers of Guru Nanka who wander over the country, or they otherwise dispose of their income in charity.

Such an association might be a an association under the Civil Law, but is not a Corporation under the English Law.

Corporations, by the Civil Law seem to have been created by the mere act and voluntary association of their members, provided such convention was not contrary to law, for then it was illicitum collegium (illegal association). It does not appear that the Prince’s consent was necessary to be actually given the foundation of them.  

In England, however, ‘the Sovereign’s consent is absolutely necessary to the erection of any corporation, either impliedly or expressly given. Such consent is presumed in the case of ‘corporations by prescription’, that is corporations ‘which have existed as corporations from a time whereof the memory of man runneth not to the contrary, and therefore are looked upon in law to be well created.

For though the members thereof can show no legal character of incorporation, yet in cases of such high antiquity the law presumes there once was one, and that by the variety of accidents which a length of time may produce the charter is lot or destroyed.

The corporation contemplated by the Code of Civil Procedure Code is a corporation as known in English law, that is, a corporation created with the express consent of the Sovereign or of such antiquity that the consent of the Sovereign may be presumed.

In this case, it is not proved that the Akhara Panchaiti was founded with the sanction of the ruling authority. Further the antiquity of the association is not make it a corporation by prescription.

**

 


ஒரு உயில் - பல புரபேட் ஆர்டர்கள்

உயில் எக்சிகியூட்டர்

உயில் புரபேட் சட்டம் 1881 (The Probate and Administration Act 1881) அமலில் இருந்து வந்த காலம். ஒரு இந்து பெண் 20.12.1895-ல் ஒரு உயிலை எழுதி வைக்கிறார். அதில், பிரநாத் என்பவரையும் ஜடுநாத் என்பவரையும் எக்சிகியூட்டர்களாக (Executors) அதாவது உயிலில் சொல்லப் பட்டுள்ளவைகளை நிறைவேற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக நியமித்துள்ளார்.

இந்த உயிலை புரபேட் செய்வதற்காக, ஒரு Executor ஜடுநாத் மாவட்ட கோர்ட்டில் மனுச் செய்து 9.5.1896-ல் புரபேட் உத்தரவு பெற்று விட்டார்.

பின்னர், இன்னொரு Executor ஆன பிரநாத் என்பவர் அதே உயிலை, புரபேட் செய்ய வேண்டி, அவரும் மாவட்ட கோர்ட்டுக்கு 17.3.1897-ல் (முதல் புரபேட் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து) மனுச் செய்கிறார்.

மாவட்ட நீதிபதி, இந்த மனுவை நிராகரிக்கிறார். இந்த உயிலில் Executors ஆக உள்ளவர் ஏற்கனவே புரபேட் உத்திரவு பெற்று விட்டார் என்றும், எனவே அந்த உயிலை மறுபடியும் புரபேட் செய்ய முடியாது என்றும் கூறி மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து, பிரநாத், அலகாபாத் ஐகோர்ட்டில் 1898-ல் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட் தனது தீர்ப்பில்: புரபேட் சட்டப்படி, பல Executors நியமிக்கப்பட்ட உயிலை, அந்த அந்த Executor தனித்தனியாக புரபேட் உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளது. எல்லோரும் கூட்டாகவும் புரபேட் ஆர்டர் பெறலாம், அல்லது அவரவர் தனித்தனியாகவும் பெறலாம் என்று அந்தச் சட்டத்தில் உள்ளது. எனவே இரண்டாவது Executor புரபேட் மனுவை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை என்று தீர்ப்பு கூறி விட்டது.

**


மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் நான் மார்கழி

சிவனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சைவர்கள், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவனின் திருநடனத்தைத் சிதம்பரத்தில் காண்பர். இந்த தினத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னர் உள்ள நாட்களில் திருமணம் ஆகாத பெண்கள் தமக்கு சிவபக்தி நிறைந்த கணவர் வேண்டும் என்று விரதம் இருந்து வழிபடுவர். இந்த விரதமே “திருவெம்பாவை நோன்பு” என்பர். 21 இனிய பாடல்களை மாணிக்கவாச்சகர் உருவாக்கி உள்ளார். “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ? என்று தொடங்குகிறார்.

திருமாலை (விஷ்ணுவை) வழிபடும் வைணவரும் இந்த மார்கழி மாதத்தில், ஆண்டாள் கண்ணனை எண்ணிப் பாடிய திருப்பள்ளி எழுச்சியை, திருமணமாகாத பெண்கள் திருமாலைப் போற்றிப் பாடுவர்.

கண்ணன், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் சொன்னதாக வியாச முனிவர் கூறியுள்ளார். மார்கழி மாதத்தில் அமாவாசைக்குப் பின்பு வரும் 11-வது நாளான வைகுண்ட ஏகாதசி நாளை, திருமால் இருக்கும் வைகுண்டம் எனப்படும் இடத்தின் வாசல் கதவுகள் திறந்து அவரின்  பக்தர்கள் அடையும் நாளாகக் கருதப்படும் என வைணவ புராணமான பாகவதம் சொல்கிறது.

ஆரிய மதக் கோட்பாட்டின்படி, இந்த மார்கழி மாதத்தில்தான், தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து, விடியற்காலை அல்லது வைகறை ஆரம்பிக்கிறதாம்.

மகாபாரதக் கதையில், போரில், பீஷ்மர் இறக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார். தேவர்களின் இரவு நேரத்தில் அது நடந்து விடக் கூடாது என்ற கருதிய பீஷ்மர், தன் தவ வலிமையால் அதைத் தடுக்க விரும்பினார். அர்ச்சுனனை அம்புப் படுக்கை அமைக்க வைத்து, அதில் பீஷ்மர் படுத்துக் கொண்டார். அதிலேயே காலம் தள்ளிக் கொண்டு வந்து, தேவர்களின் வைகறையில் (மார்கழியில்) அவர் இறந்தார் என்கிறது மகாபாரதக் கதை.

**