விசா
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், அமெரிக்காவில்
இருந்து இந்தியாவுக்கும் வந்து போகிறவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியன் பேர்
இருக்குமாம்;
இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்கள்,
இந்தியாவில் ஆழ வேரூன்றி இருப்பவர்கள் சுமார் மூன்று மில்லியன்கள் இருக்கலாமாம்;
இவர்கள் போவதற்குறிய விசா நடைமுறைகள் சற்று சிரமமாக இருந்தது; அதை,
இப்போது எளிதாக்கி உள்ளனராம்; அமெரிக்காவில் குறிப்பிட்ட 40 விமான நிலையங்களில்
இது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனராம்; அமெரிக்காவில் இப்படி எளிய முறை விசா
வசதியை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஒன்பதாவது நாடாகச் சேர்ந்துள்ளது;
இதன்படி செக்யூரிட்டி கிளியரன்ஸ் நடைமுறை வெகு சீக்கிரம் முடிந்து
விடும் வாய்ப்பு உள்ளது; இதற்கான உடன்படிக்கையை (எம்.ஓ.யு) இரு நாட்டின்
அதிகாரிகளும் கையெழுத்துச் செய்துள்ளனராம்; இந்தியாவின் அமெரிக்க அம்பாசிடர் அருண்
கே. சிங் அவர்களும், யு.எஸ். கஸ்டம்ஸ் டெபுடி கமிஷனர் கெல்வின் கே. மெக்அலீனன்
இருவரும் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளனர்;
இனி அமெரிக்க விசா நடைமுறைகள் எளிதாகிவிடும் என்கிறார்கள்.
*
No comments:
Post a Comment