இந்தியாவில் மொத்தம் 24 ஐகோர்ட்டுகள் உள்ளன; இதில் இருக்கவேண்டிய
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1079 ஆக இருக்க வேண்டும்; ஆனால் இப்போதோ, 621
நீதிபதிகள் மட்டும் தான் பணியில் உள்ளனர்; மீதி 458 நீதிபதிகள் இன்னும்
நியமிக்கப்பட வேண்டும்; அந்த இடங்கள் காலியாக உள்ளன;
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன், மூத்த நான்கு நீதிபதிகள்
கொண்ட அமைப்பை “கொலீஜியம்” என்பர்; இந்த அமைப்புதான், சுப்ரீம் கோர்ட்,
ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் அமைப்பு; அந்த அமைப்பு புதிய நீதிபதிகளை
பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது; ஆனால் அதை மத்திய அரசு, தேசத்தின்
நன்மை என்ற காரணத்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கே மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பி
உள்ளதாம்;
அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டுமே, 160 ஐகோர்ட் நீதிபதிகள் இருக்க வேண்டிய
இடத்தில், 81 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்;
சென்னை ஐகோர்ட்டில் 37 நீதிபதிகள் இடம் காலியாக உள்ளது; மொத்தம் 75
நீதிபதிகள் கொண்ட அமைப்பு சென்னை ஐகோர்ட்;
ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த நேஷனல் ஜூடிசியல் அப்பாய்ண்ட்மெண்ட்
கமிஷன் என்னும் என்.ஜே.ஏ.சி அமைப்பு சட்டத்தை சுப்ரீம்கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை;
அதில் அரசியல் தலையீடு இருப்பதுபோல உள்ளதாம்;
இந்த என்.ஜே.ஏ.சி. சட்டத்தை 2014 ஆகஸ்டு 13ல் மக்கள் சபையிலும், 2014
ஆகஸ்டு 14ல் மேல்சபையிலும் கொண்டு வந்து சட்டமாகியது; இது 99வது அரசியல் திருத்தச்
சட்டம் ஆனது; அதை ஜனாதிபதியும் 2013 டிசம்பர் 31ல் ஒப்புதல் கொடுத்து சட்டத்தை
நடைமுறை ஆக்கினார்; இது 2015 ஏப்ரல் 13லிருந்து நடைமுறைக்கு வரும் என்றது;
இந்த புதிய சட்டப்படி, இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி,
அதன் இரண்டு மூத்த நீதிபதிகள், சட்ட அமைச்சர், இரண்டு எமினென்ட் நபர்கள்
(முக்கியஸ்தர்கள்), இவர்கள் கொண்ட அமைப்பாக அது இருக்க வேண்டும்; இந்த
முக்கியஸ்தர்களை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, தலைமை நீதிபதியும், பிரதம
மந்திரியும், எதிர்கட்சி தலைவரும் கொண்ட குழுவே தேர்ந்தெடுக்க வேண்டும்;
ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளாமல், இந்த கொலீஜியம்
நடைமுறையே தொடரலாம் என்றும், புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று
சொல்லிவிட்டது;
ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும்போது, ஐகோர்ட் கொலியம் அமைப்பு, புதிய
நிதிபதிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசுக்கு அனுப்பும்; அது
அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அமைப்புக்கு அனுப்பும்; சுப்ரீம் கோர்ட் கொலிஜயம் அந்த
புதிய நீதிபதிகளின் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்புவர்; ஜனாதிபதிதான் புதிய
நீதிபதிகளை சட்டபூர்வமாக நியமிப்பார்;
**
No comments:
Post a Comment