மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான்றிருநீறே.
மந்திரமாவது நீறு = மனதில் தியானிப்பவரைக் காப்பதும்;
வானவர் மேலது = தேவர்களைக் காப்பதும்;
சுந்தரமாவது = அழகிய மேனியைக் காப்பதும்;
துதிக்கப்படுவது = எப்போதும் வணங்கக்கூடியதும்;
தந்திரமாவது = முக்திக்கு உபயோகமாக இருப்பதும்;
சமயத்திலுள்ளது = ஏற்ற தருணத்தில் உதவியாக உள்ளதும்;
செந் துவர்வாய் உமை பங்கன் = சிவப்பு பவளம் (துவர்) போன்ற
வாய் கொண்ட உமையின் கணவனான சிவனே;
திருவாலவாயான் திருநீறே = திரு ஆலவாயில் (மதுரையில்)
குடிகொண்டனின் திருநீறே.
பாண்டியமன்னன் (வம்ச சேகரபாண்டியன்) மதுரை நகரத்தை உருவாக்க
வேண்டி அவனுக்கு எல்லைகளைக் காட்டி அருளும்படி சோமசுந்தரக் கடவுளை வேண்டினான்.
அவரும் தான் அணிந்திருந்த பாம்பினால் எல்லை காட்டி அருளினார். அதலால், பாம்பினால்
எல்லை காட்டியதை திரு ஆலவாய் (பாம்பு) என்று மதுரையை அழைப்பர்.
No comments:
Post a Comment