பிரம்மச்சாரி பீஷ்மர் ஒரு பெண்ணால்
இறந்தார்
காசி ராஜனுக்கு மூன்று
புத்திரிகள்: 1) அம்பை, 2) அம்பிகை, 3) அம்பாலிகை.
அம்பை காசி ராஜனின் மூத்த புத்திரி. இவள் கன்னியாய்
இருக்கும்போது இவளது தந்தை இவளுக்கு சுயவரம் வைத்து, இவளை சாளுவ ராஜனுக்குக்
கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான்.
இது தெரியாமல், பீஷ்மன் பலவந்தமாக இவளையும் இவளுடைய இரண்டு
தங்கைகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும் (அவர்களின் விருப்பத்தைக்கூடக்
கேட்காமல்) வலிந்து கவர்ந்து கொண்டு வந்து, தனது தம்பியாகிய விசித்திரவீரியனுக்கு
திருமணம் செய்ய எத்தனித்தபோது, மூத்த பெண் அம்பை. ‘தான் ஏற்கனவே விவாக-தத்தம்
பண்ணப்பட்ட பெண்’ என்று சொல்லியதால், அவளுக்கு நிச்சயித்த சாளுவ மன்னனிடமே
திருப்பி அனுப்பி வைத்தார் பீஷ்மர். இவ்வளவு நடந்தபின், சாளுவ மன்னனும் அவளை ஏற்றுக்
கொள்ள மறுத்துவிட்டான்.
திரும்பியும் பீஷ்மரிடமே வந்து, ‘பீஷ்மரே! எனக்கு
நிச்சயித்த சாளுவ மன்னனும் என்னை ஏற்க மறுத்து விட்டார்; நீரே என்னை வலுவில்
கடத்தி வந்தீர், எனவே நீரே என்னை ஏற்க வேண்டும்’ என்றாள். தனது பிரமச்சாரிய விரதத்துக்கு
எதிராக அவளைத் மணம்முடிக்க முடியாது என்பதால், பீஷ்மரும் மறுத்து விட்டார்.
அவள் இவ்வாறு அலைகழிக்கப் பட்டதால் மனம் உடைந்து உயிர்துறந்து,
அடுத்த பிறவியில் ரூபதன் மகளாக ‘சிகிண்டி’ என்னும் பெயரோடு பிறந்து, தன்னை
அலைக்கழித்த பீஷ்மரை பழிவாங்க தீவிரமானாள். பீஷ்மரை பாரத யுத்தத்தில் கொன்றவள்
இவள்தான்.
அம்பிகையும், அம்பாலிகையும் காசி ராஜனின் மற்ற இரு புத்திரிகள்.
அம்பையின் தங்கைகள் ஆவர். இவர்கள் விசித்திரவீரியனை மணந்து மனைவியர் ஆனர்.
இவர்களில் அம்பிகை மூத்தவள். இவள் விசித்திரவீரியன் இறந்த பின், தேவரநியாயம்பற்றி,
மாமியார் சத்தியவதியினது அனுமதி கொண்டு, வியாசரைக் கூடி திருதராஷ்டிரன், பாண்டு
என்பவர்களை மகன்களாக பெற்றாள்.
No comments:
Post a Comment