Wednesday, December 18, 2013

அநூரு (அருணன்): (Aborted child)

அநூரு (அருணன்): (Aborted child)

கசிப பிரசாபதிக்கு விநதையிடத்து பிறந்த புத்திரன். கருடன் இவன் தம்பி. இவனைப் பற்றிய ஒரு கதையும் உண்டு.

விநதை, தனது சக்களத்தி கந்துருவைக்கு முதலிலேயே புத்திரன் பிறந்துவிட்டான் என கோபம் கொண்டு, தனது அண்டம் பரிபக்குவமடைய நாளாயிற்றே என்று அந்த அண்டத்தை (வளராத கருவை) உடைத்துவிட, அதன் காரணமாக அநூரு தொடை முதலிய கீழ் அங்கங்கள் இல்லாமல் பிறந்தான்.


தனது அங்ககீனத்துக்கு தனது தாயே காரணம் எனத் தெரிந்து, கத்தருவைக்கு (அவளின் சக்களத்திக்கு) அடிமை ஆகும்படி சபித்து விட்டு, சூரியனிடத்தில் சாரதியானான். இவனுக்கு அருணன் என்றொரு பெயரும் உண்டு.

No comments:

Post a Comment