கஜேந்திர மோட்சம்
இருஷபன்
பௌத்திரனின் (பேரனின்) பெயர் இந்திரத்துயுமனன். இவன் பரதனின் புத்திரன். இவன் தாய் சுமதி.
இவன் ஒருநாள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது அங்கே
அகத்தியர் வந்ததை கவனிக்காமல் அவருக்கு உபசாரம் செய்யாமல் இருந்ததால், அகத்தியர்
கோபம் கொண்டு இவனை யானையாக ஆகுமாறு சபித்துவிட்டார்.
அதனால் இவன் யானையாகி சுற்றித் திரியும்போது, தண்ணீர்
தாகத்தால் ஆற்றில் இறங்கி தண்ணீர் குடிக்கும்போது, அதிலிருந்த முதலையானது அந்த
யானையைப் பிடித்திழுக்க, அந்த யானையானது ‘ஆதிமூலமே’ என கூவியழைக்க நாராயணன் வந்து
தனது சக்கராயுதத்தால் முதலைக் கொன்று யானை உருவத்திலிருந்த இந்திரத்துயுமனை
உருமாற்றி காப்பாற்றினார். இந்தக் கதை ‘கஜேந்திர மோட்சம்’ எனப்படும்.
No comments:
Post a Comment