Wednesday, December 18, 2013

மகாபாரத்தில் சொத்துரிமைக் குழப்பம்:

மகாபாரத்தில் சொத்துரிமைக் குழப்பம்:

தவறிய தர்மத்தை நிலைநாட்டவே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வந்தானாம். ஆனால், முதன்முதலிலே தவறியவிட்ட தர்மத்தை, தட்டிக் கேட்க ஆரம்பத்திலேயே அவன் ஏன் வரவில்லை?
பாரதக்கதை:
‘ஹஸ்தினாபுரம் என்ற நாட்டை, மன்னன் சாந்தனு என்பவர் ஆண்டுவந்து, அவருக்கு பின்னர், மன்னன் சித்திரங்கடா ஆண்டுவந்து, அவருக்கு பின்னர், மன்னன் விசித்திர வீரியன் ஆண்டுவந்தார்.

மன்னன் விசித்திரவீரியனுக்கு இரண்டு மகன்கள். (1) திருதராஷ்டிரா (2) பாண்டு. மூத்த மகன் திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது என்பதால், அரச வழக்கப்படி இளைய மகன் பாண்டு முடிசூடுகிறார்.

ஆனாலும், பாண்டு செய்த தவறால் ஏற்பட்ட சாபத்தால், அவரின் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்கு செல்கிறார். பாண்டுவின் 2 மனைவிகளின் பெயர்கள் (1) குந்தி (2) மாத்ரி. காட்டில் பாண்டுவுக்கு ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. பாண்டு அங்கு இறந்து விடுகிறார்.

எனவே முனிவர்கள் இந்த 5 குழந்தைகளையும் (பாண்டவர்கள் என்று பொதுப்பெயர்) ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்கு கூட்டிக் கொண்டு வருகிறார்கள். அப்போது மூத்த பையன் ‘யுதிர்ஷ்டனுக்கு’ 16 வயது (major). பதவி வகிக்க தகுதி உள்ளவன். அவர்கள் ஹஸ்தினாபுரம் வந்து பீஷ்மரை சந்திக்கின்றனர்.

இதற்கிடையில், ஹஸ்தினாபுரத்தை ஆண்டு கொண்டிருக்கும் கண் தெரியாத திருதராஷ்டிர மன்னனின்  குழந்தைகள் ‘கௌரவர்கள்’ என்று அழைக்கப் படுபவர்கள், இந்த பாண்டுவின் குழந்தைகள் மீது வெறுப்பை காட்டுகின்றனர். எனவே பீஷ்மர் தலையிட்டு நியாயமாக நாட்டை பிரித்து, ஹஸ்திராபுரத்தை தலைநகராகக் கொண்டு கௌரவர்களுக்கும், இந்திரபிரஸ்தாவை தலைநகராக கொண்டு பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறார்.

சத்திரியர்கள் என்னும் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களை சூதாட அழைத்தால் அவர்களும் மறுக்காமல் விளையாட ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே கௌரவர்கள் அழைத்த சூது விளையாட்டை ஏற்று விளையாடி பாண்டவர்கள் தோற்றனர். அதனால், அவர்களின் நாட்டை இழந்தனர். அதை திரும்ப பெற வேண்டுமானால், அவர்கள் 12 வருடங்கள் காட்டிலும், 1 வருடம் உள்நாட்டில் மறைந்தும் வாழ வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். அதனால், 5 பாண்டவர்களும் அவர்களின் மனைவி திரவ்பதியுடன் காட்டுக்கு சென்றனர்.

பாண்டவர்கள் திரும்பி வந்து நாட்டை கேட்டபோது, கௌரவர்கள் கொடுக்க மறுத்ததால், பாரத போர் ஏற்பட்டது. அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்று, அதன் பின் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு, பின்னர் அவர்களின் வாரீசான பேரன் ‘பரீசித்’ மன்னிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, முடிவில் பாண்டவர்களும் காட்டுக்கு சென்றனர்.

குழப்பம்:
மூத்தமகன் திருதராஷ்டிரனுக்கு கண்தெரியாத காரணத்தால் அரச பதவியை அவர் தம்பி பாண்டுவுக்கு கொடுத்தார்களாம். பின்னர் பாண்டு காட்டுக்குப் போனவுடன் அதே அரசபதவியானது கண்தெரியாத திருதராஷ்டிரனுக்கு கொடுக்கப்படுகிறது. இதுமட்டும் எப்படி சாத்தியமாயிற்று? மூத்தவன் இருக்க இளையவன் பாண்டுவுக்கு பதவியைக் கொடுத்தபோதே, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இதை ஏன் அநியாயம் என்று கருதி அப்போதே களத்தில் குதிக்கவில்லை?

ஏதாவது ஒருவகையில் உடல் ஊனம் இருந்தால் அரச பதவி என்ன, சொத்துரிமையே கிடைக்காது. ஊமை, குருடு, தீராநோய், அங்க்கீனர் இவர்களுக்கு சொத்துரிமை இல்லை என்பது மகாபாரத காலத்திலிருந்து (கிட்டத்தட்ட கலியுக ஆரம்பம்) நாம் வாழும் கி.பி. 1956 வரை அதுதான் இந்தியாவின் சட்டமாகவும் இருந்தது. 1956-ல் ஏற்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத்தில்தான் அது மாற்றம் செய்யப் பட்டது. பெண்ணுக்கு சொத்தில் வாரிசுரிமையும் 1929-ல் தான் ஏற்பட்டது. இந்து சட்டத்தில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான வாரிசுரிமை என்பது 2005-ல் ஏற்பட்ட சட்டத் திருத்தத்தில்தான் முழுவதுமாகக் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment