அம்மி தரையில், அருந்ததி வானத்தில்
அருந்ததி என்பவள் கர்த்தமன் மகள். வசிஷ்ட்டனின் மனைவி. இவளுக்கு
அரஞ்ஜோதி என்றும் பெயர் உண்டு. இவள் மகாபதிவிரதை. நட்சத்திர ரூபமாய் இருக்கிறதால்,
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மணமகனாய் வந்தவன் இவளை சுட்டிக்காட்டி ‘அருந்ததி
போல இருப்பாயாக’ என்று கூறுவான். எப்போதும் வானமண்டலத்தில் தெரியும் நட்சத்திரம் என்பதால் அவளை உதாரணமாக காட்டுவார்களோ?
அருந்ததி நட்சத்திரம்: துருவ நட்சத்திரங்களுக்கு சமீபத்திலே சப்தரிஷி நட்சத்திர
கணம் இருக்கிறது. 2700 வருடங்களில் இது ஒரு வட்டம் சுற்றி வரும். இந்த சப்தரிஷி
நட்சத்திர கணங்களுக்கு நடுவே தான் வசிஷ்ட நட்சத்திரம் உள்ளது. அதை அடுத்துள்ளது
அருந்ததி நட்சத்திரம். கணவனான வசிஷ்டனும் மனைவியான அருந்ததியும் அருகருகில்
வானமண்டலத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment