அபிராமிபட்டரும் அமாவாசையும்:
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர், திருக்கடவூரிலே
பிறந்து, தமிழும், சமஸ்கிருதமும் நன்கு கற்றுணர்ந்த அந்தணர் இந்த அபிராமிபட்டர். இவர்
தினமும் தேவி பூஜையை சிரத்தையையோடு செய்து வந்தார். பின்னர் தஞ்சை நகர் சென்று
அங்குள்ள அரசனின் தயவில் வசித்து வந்தார்.
ஒருநாள், இவரை அரசன் அழைத்து இன்றைக்கு திதி (நாள்) என்னவென்று
கேட்க, அன்றைய நாள் அமாவாசையாக இருந்ததை மறந்து ‘இன்று பூசனைநாள்’ (பௌர்ணமி நாள்) என்று
தவறுதலாக கூறிவிட்டார். தான் தவறு செய்துவிட்டதை அறிந்தாலும், இன்று சூரியன்
அஸ்தமன வேலையில் வந்து அதை நிரூபிப்பேன் என்று வீராப்பாகக் கூறிவிட்டு வந்தார்.
ஆனாலும், சர்வ அண்டங்களையும் காக்கும் உலக மாதா தம்மையும்
காப்பாள் என்று கருதி, ‘என் வாக்கு என் வாக்காயின் பொய்க்கும், இது தேவி
வாக்கேயாதலின் மெய் வாக்காகும். காட்டுவேன் காண்பாயாக’ என்று கூறி கீழ்திசை நோக்கி
காட்டினான். அபிராமி அம்மையார் மீது அன்புமயமாகிய ஓர் அந்தாதி பாடத் தொடங்கி
பத்துக்கவி சொல்ல, பூரண கலையோடு கூடிய தண்ணிய சந்திரன் கீழ்திசையிலே உதித்து
மேலெழுந்து வந்தது. அவரும் அந்தாதியை நிறுத்தாமல்
நூறு பாடல்கள் பாடி முடித்தார்.
அதுகண்ட அரசன் அதிசயமும், ஆநந்தமும், பேராச்சர்யமும்
உண்டாகி அவரை வீழ்ந்து வணங்கினார். இன்றும் அவர் பரம்பரையில் வந்துள்ளோர் அரசர்
கொடுத்த மானியமும் சாசனமும் கொண்டு திருக்கடவூரிலே வசிக்கின்றனர். அபிராமி பட்டர்
முறுகிய அன்போடு பூசித்த உலகமாதாவாகிய உமாதேவியாரின் சிலம்பே சந்திரனாகி தரிசனம்
கொடுத்ததாம்.
No comments:
Post a Comment