அத்திரி (சப்தரிஷிகளில் ஒருவர்):
அத்திரி என்பவர், பிரம்மாவினுடைய மானச புத்திரர்களில்
ஒருவர். இவர் மனைவி அநசூயை. இவர் தமது தவ வலிமையால் சோமதுர்வாச தத்தாத்திரேயர்களை பெற்றவர்.
இந்த அத்திரி, பிரஜாபதிகளில் ஒருவர்.
சந்திரன் இந்த அத்திரியின் கண்களிலிருந்து தோன்றியது என ரகுவம்சம் முதலிய
நூல்கள் கூறுகின்றன. இராமரை, தண்டகாரணியத்தில் இந்த ரிஷி கண்ட போது, இராமரைத் தனது
ஆசிரமத்துக்கு அழைத்து உபசரித்ததாக இராமாயணம் கூறுகிறது. இவர் சப்தரிஷிகளில் (ஏழு
ரிஷிகளில் ) ஒருவர்.
அநசூயை:
அத்திரியின் மனைவி அநசூயை. இராமர்
தண்டகாரணியத்தில் காட்டில் இருந்தபோது, அத்திரி ரிஷி இராமரை வரவேற்று உபசரித்தார்.
அத்திரியின் மனைவி அநசூயை, சீதைக்கு பெண்களுக்குறிய ஒழுக்கங்களை உபதேசித்து
ஆசீர்வதித்து வஸ்திரம் கொடுத்த பெண்.
(சகுந்தலையின் தோழிக்குக்கூட அநசூயை என்று
பெயர் உண்டு).
No comments:
Post a Comment