இந்திரனும் பதவி இழந்தான்!
இந்திரன் தேவர்களின் அரசன். கசியப்பிரஜாபதிக்கு அதிதி மூலம்
பிறந்த புத்திரன். இவனின் ராஜதானி (தலைநகரம்) அமராவதி. இவன் கிழக்கு திக்கு
பாலகன். இவனின் ஆயுதம் வச்சிரம். இவனின் பாரி சசிதேவி. வாகனம் ஐராவதம் (யானை). இவனின்
மகன் ஐயந்தன்.
கொலை செய்தால் அது பிரமகத்தி தோஷம்: இந்திரன், தான் இந்திர பதவியில் இருக்கும்போது,
துவட்டப்பிரமாவினது புத்திரன் விசுபரூபனையும் விருத்திராசுரனையும் கொன்ற தோஷமாகிய
பிரமகத்தி காரணமாக தனது தேவேந்திர பதவியை இழந்தான்.
அப்போது நகுஷன் தனது தபோபலத்தால் இந்திர பதவியே பெற்றான்.
இதுகண்டு இந்திரன் அசுவமேத யாகம் செய்து மீண்டும் அதே இந்திர பதவியைப் பெற்றான்.
இந்த இந்திரபதம் என்னும் இந்திரபதவி நூறு அசுவமேதம்
செய்தவனுக்கு மட்டுமே கிடைக்கும் மிக உயர்ந்த பதவியாகும் இந்த இந்திரபதம். பல
இந்திரர்கள் இதுவரை இருந்துள்ளார்கள்.
இந்திரனின் பெண்ணாசை: ஒருமுறை இந்திரன், கௌதம முனிவரின் பத்தினி அகலிகை மீது
இச்சை கொண்டு அவளை அடைய நினைத்தபோது முனிவரால் சபிக்கப்பட்டு உடலெல்லாம் ஓட்டையாகி
திரிந்தான்.
இந்திரன் மழைக்கடவுள்: இதற்கு முன் இருந்த இந்திரர்கள் பூர்வத்தில் சிறகுகள்
உடையவாராய் இருந்தனர். இவர்கள் பறந்து பறந்து வந்து, நகரங்களை அழித்து வந்து
மலைகளை தடுத்து வந்தனர். இந்திரன் மேகங்களை வாகனமாக உடையவன். இந்திரனே மலையை
காலந்தோறும் பெய்விப்பவன்.
யோகிப் பொங்கல் இவனுக்குத் தான்: இதனால் இந்திரனை மகிழ்விக்க வருடந்தோறும் பொங்கலிடுவதும்
விழா எடுப்பதும் பண்டைய வழக்கம். மகரசங்கராந்திக்கு முதல்நாளில் ‘போதிப் பொங்கல்’
வழிபடப்படுகிறது. இதை போகிப் பொங்கல் என்றும் வழங்குகின்றது. போகி=இந்திரன்.
இந்திரனின் ஜம்பம் கிருஷ்ணனிடம் செல்லவில்லை: கிருஷ்ணன் யாதவர்களிடம் இருக்கும்போது இப்பொங்கல் வந்தது. யாதவர்கள் எல்லாம்
திரண்டு இந்திரனுக்கு வேள்வி வழிபாடு செய்தார்கள். இது இந்திரனுக்கு சேரவிடாதபடி
தடுத்து அதை கிருஷ்ணனே ஏற்றுக் கொண்டான். இதனால் கோபமடைந்த இந்திரன் மேகங்களை
திரட்டி கல்மழை பொழிந்து யாதவர்களின் பசுநிரையை கொல்லும் பொருட்டு ஏவினான். ஆனால்
கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்து பசுநிரையையும் யாதவர்களையும்
காத்தான்.
இந்திரனை குமரக்கடவுள் காத்தான்: மற்றொரு முறை, சூரபர்மன் என்பவன் தேவர்களை எல்லாம் சிறை
செய்தபோது, இந்திரனை மீன் சுமக்க வைத்தபோது, இந்திரன் இந்த சித்திரவதையிலிருந்து தப்பிக்க
சீர்காழிக்கு ஒடி மறைந்தான். குமரக் கடவுள் (முருகன்) இந்த சூரனை கொன்று அழித்த
பின்னர், இந்திரன் தனது நிம்மதியாக அமராவதியை அடைந்தான். இவன் மகள் தான்
தெய்வயானை.
No comments:
Post a Comment