ஒன்றாய்ப் பலவாய்ச் சுடரிரண் டாயொளிர் மூன்றுருவா
யன்றா யவையிற்றி னாருயி ராய்ய னாதியும்பர்
சென்றா சொழித்திடச் சங்காழி யேந்தித் திருவினோடுங்
குன்றாது நின்ற குணன்சர ணாம்புயங் கூறுவனே.
(ஏகமாயும், அனேகமாயும்,
சூரியசந்திரராகிய இரு சுடராயும், விளங்குகின்ற சங்கருடணன், பிரத்தியுமினன்,
அநிருத்தன், என்னும் திரிமூர்த்திகளாயும், அவர்கள் அல்லாத சீவசகங்களாயும்,
அவற்றிற்கு உள்ளுயிராயும், பிரமா முதலிய தேவர்கள் குறையிரந்து சென்று வணங்கித்
தங்குற்றத்தைத் தீர்த்தற்பொருட்டுச் சங்கு சக்கரந் தரித்து இலக்குமியோடும் குறைவின்றி
நிலைபெற்றவருமாகிய நாராயண மூர்த்தியினுடைய பாததாமரைகளைப் புகழ்ந்து கூறுவன்).
No comments:
Post a Comment