சத்தியவதி என்னும் அச்சோதை (மகாபாரதம் முகிழ்ந்த கதை):
இது ஒரு புண்ணிய நதி.
முன்ஜென்மத்திலே, அச்சோதை, மரீசபுத்திரராகிய பிதிர்கணங்களுக்கு மானச கன்னிகையாகப்
பிறந்து, ஆயிரம் தேவ வருஷம் தவம் செய்து அவர்களை மகிழ்விக்க, அந்த பிதிர்கணங்கள்
திவ்யஅலங்கார பூஷிதர்களாக தோன்றினார்கள். அவர்களில், இவளுக்கு தந்தை முறையுடைய
மாவசன் என்பவரைத் தனக்குக் கணவனாகும்படி வேண்டினாள். அதுகேட்ட பிதிர்கள் சினந்து,
உன் தபம் கெடுக என சபித்தனர்.
அவள் யோகப் பிரஷ்டையாகி சொர்க்கத்திலிருந்து
கீழ்நோக்கி விழுந்து, பூமியில் விழுகாது, அந்தரத்திலேயே நின்றாள். அங்கே
நின்றபடியே பிதிர்களை நோக்கி தவம் செய்தாள்.
அதில் மகிழ்ந்த பிதிர்கள், ‘நீ
தேவர்கள் செய்யும் கரும பலன்களை எல்லாம் அனுபவித்து, இருபத்தியெட்டாவது துவாபர
யுகத்திலே மீன் வயிற்றில் பிறந்து சத்தியவதி என்னும் பெயர்பூண்டு பராசரரால்
வியாசரைப் பெற்று, அப்பால் சந்தனுவுக்கு பாரியாகி (மனைவியாகி), விசித்திரவீரியன்,
சித்திராங்கதன் என்போரைப் பெற்று, கடைசியாக அச்சோதை என்னும் புண்ணிய நதியாகக்
கடவது என்று வரமளித்தார்கள்.
No comments:
Post a Comment