Monday, December 12, 2022

First woman Judge in India

 First woman Judge in India

 

Justice Leila Seth

Leila Seth (1930 – 2017) was an Indian judge who served as the first woman judge on the Delhi High Court and became the first woman to become Chief Justice of a state High Court, Himachal Pradesh High Court, on 5 August 1991. 

 

She was also the first woman to be designated as a senior counsel by the Supreme Court of India.

 

Leila Seth was born on 20 October 1930 in Lucknow, the first daughter after two sons in her family. 

 

Her father, who worked in the Imperial Railway Service and when he died when she was only 11 years old.

 

Schooling

Leila's mother managed to educate her in Loreto Convent, Darjeeling. After finishing her schooling, she began to work as a stenographer in Kolkata. 

 

In Calcutta she was introduced to her husband Prem Seth.

 

After marriage, she moved to London with her husband who was working at Bata. Her move to London gave her the opportunity to start studying law.

 

She said that she picked law for the simple reason that it did not require attending classes.

 

In 1958, Leila Seth wrote the London Bar exam and topped it at the age of 27, becoming the first woman to do so. 

 

In the same year of 1959 she also cleared the civil services examination as an IAS officer.

 

Upon topping the Bar in England, Seth was referred to as "Mother-in-Law" by a London newspaper, because the young Leila Seth with her infant son, born only a few months before the exams.

 

Leila began to practice law in Patna. She worked under a senior lawyer named Sachin Chaudhary.

 

After practicing at the Patna High Court for 10 years, Leila Seth moved to the Delhi High Court in 1972. In the same year, she launched her Supreme Court practice. On 10 January 1977, she was designated as a senior advocate by the Supreme Court.

 

First woman Judge & Chief Justice

 

In 1978, Leila Seth became a Judge of the Delhi High Court, breaking the glass ceiling by becoming the first woman to do so.

 

In 1991,she became the Chief Justice of Himachal Pradesh High Court, again the first woman to be the Chief Justice of a State High Court.

 

Leila Seth chaired various judicial and humanitarian institutions. 

 

She was a member of the 15th Law Commission of India from 1997 to 2000, and suggested to give daughters inheritance rights over ancestral property in the Hindu Succession Act (1956).

 

She also served as the Chair of the Commonwealth Human Rights Initiative (CHRI) for several years. 

 

Justice Leila Seth Commission which enquired into the custodial death of businessman Rajan Pillai, or popularly known as "Biscuit Baron".

 

Justice Seth was a part of the three member Justice Verma Commissioninstituted after the 2012 Delhi gang rape case to look into an overhaul of rape laws in India.

 

She died on 5 May 2017.

**

 

 

 

 

Sentences for several offences -Sec.31 of CrPC

 Sentences for several offences -Sec.31 of CrPC

 

Normally the imprisonment shall commence "one after the expiration of the other". It is known as 'consecutive sentences'.

 

Sec.31(1) CrPC - Court may order all the punishments shall run concurrently (all at the same time).

 

Sec.31(2) - Court may order all the punishments shall run consecutively (one after the other).

But such a total sentence shall not exceed more than 14 years.

But also shall not exceed twice the amount of punishment of single offence.

 

Sec.31(3) - For filing Appeal, all the aggregate of the consecutive sentences, shall be deemed to be a 'single sentence'.

 

SC latest decision

The Constitution Bench of the Supreme Court has recently held that the cap of 14 years Rule on aggregate punishment under Section 31(2) of Cr.P.C is not applicable to Sessions Court.

 

The Constitution Bench of SC held that while multiple sentences for imprisonment for life can be awarded for multiple murders or other offences punishable with imprisonment for life, the life sentences so awarded cannot be directed to run Consecutively. (Muthuramalingam Vs State).

 

Muthuramalingam Vs State

The State of Tamil Nadu, placed two decisions of the SC in Kamalanantha and Ors. vs. State of Tamil Nadu, (2005) 5 SCC 194 and Sanaullah Khan vs. State of Bihar, (2013) 3 SCC 52 and arguef that it was legally permissible to award more than one life sentence to a convict for different murders committed by him with a direction that the sentences so awarded shall run consecutively.

 

BUT the Appellant/accused argued that in terms of Section 31 of the Criminal Procedure Code, 1973 the sentence of life imprisonment awarded to the appellants for different murders alleged to have been committed by them could run concurrently and not consecutively (as ordered by the Trial Court and the High Court in this case).

 

Referred to Larger Bench

Since there was conflict in the views taken by the SC, on the question 'whether consecutive life sentences were legally permissible', directed the matter to be placed before a larger bench comprising Five Judges to resolve the conflict by an authoritative pronouncement.

 

Larger Bench of 5 Justices: 

CJI T.S. Thakur, Justices Fakkir Mohamed Kalifulla, A.K. Sikri, S.A. Bobde, R. Banumathi.

 

Result:

"We hold that while multiple sentences for imprisonment for life can be awarded for multiple murders or other offences punishable with imprisonment for life, the life sentences so awarded cannot be directed to run consecutively. 

 

Such sentences would, however, be superimposed over each other so that any remission or commutation granted by the competent authority in one does not ipso facto result in remission of the sentence awarded to the prisoner for the other."

 

https://indiankanoon.org/doc/194670202/

 

 

 

 

Shariat law vs Customary law

 Shariat law vs Customary law

 

The "Muslim Personal Law (Sheriath) Application Act 1937. (Act 26 of 1937)

 

The book titled "Muslim Law of Marriages and Succession in India" by Justice S.A.Khader.

 

The Author has stated various custom and usage prevalent in certain sections of the Muslims living in different parts of this country.

 

The Indian legislature untouched the personal or family laws relating to succession intestate and testamentary, marriage, dissolution of marriage and the like of the Mohammadden.

 

Various customary practice

So far as the Muslims were concerned, various customary practices followed by some sects of the Muslim.

 

They are:

(i) Mappillas of North Malabar, 

(ii) Cutchi Memons, 

(iii) Khojas, 

(iv) Sunni Boharas of Gujarat, 

(v) Molesalam Giarasias of Breach, and 

(vi) Halai Memon of Probandar (Gujarat).

 

Mappillas of North Malabar:

 

Mappillas of North Malabar were governed in the matters of inheritance by the Marumakkathayam system of matriarchal succession unknown to Muslim Law.

 

The Mapilla Succession Act, 1918 (Act 1 of 1980) passed by the Legislature of the then Madras Presidency which prescribed that notwithstanding any custom to the contrary, the separate property of such a Mappilla shall devolve upon his heirs in the order and according to the rules of Muslim Law.

 

The Malabar Wills Act, 1898 found that those Mappillas were entitled to dispose of their separate property in entirety by will, while under the Shariat, a Muslim can dispose of by will only one-third of his estate.

 

The Mappilla Wills Act 1928 extended to the Mappilla Muslims.

 

The Shariat Law has come into effect from 1.1.1929.

 

Neither the Mappilla Succession Act, 1918 nor Mappilla Wills Act, 1928 affects the Tarward property, unless the Mappilla concerned was exclusively entitled to it.

 

The Muslim Personal Law (Shariat) Application Act, 1937 (Act 26 of 1937) also does not touch or affect the rights and incidents of the Mappilla Marumakkathayam tarward, where property devolved by survivorship, a concept quite foreign to the Shariat.

 

Based on rulings reported in Abdul Rahim v. Avooma, AIR 1956 Mad. 1441, in Mohammed Sandhu Khan v. Rathnam, AIR 1956 Mad. 144 apart from Full Bench judgment of Kerala High Court reported in Laxman v. Kamal, that the Mappilla Marumakkathayam Act (Madras Act 17 of 1939) only dealt with the management of the Tarward, the duties of the Karnavan and the rights of the junior members and does not abolish the system which still continues.

 

Cutchi Memons, Khojas, Sunni Bohras etc

The Act concerning certain other sects such as Cutchi Memons, Khojas, Sunni Bohras of Gujarat, Molesalam Giarasias of Broach, and Halai Memon of Probandar (Gujarat), is the Shariat Act 26 of 1937.

 

Customary law should in no case take the place of Muslim Personal Law.

 

Customary Law is a misnomer inasmuch as it has not any sound basis to stand upon and is very much liable to frequent changes.

Customary law cannot be expected to attain at any time in the future that certainty and definiteness which must be the characteristic of all laws.

 

Tamilnadu Act on Shariat law:

So far as the State of Tamil Nadu was concerned, by Tamil Nadu Act, Section 2 of the Parent Act (Shariat law 1937) was substituted and the substituted Section 2 reads as under:

 

"Notwithstanding any custom or usage to the contrary in all questions regarding intestate succession, special property of females, including personal property inherited or obtained under contract or gift or any other provision of Personal law, marriage, dissolution of marriage, including talaq, ila, zihar, lian, khula and mubarrat, maintenance dower, guardianship, gifts, trusts and trust properties, and wakfs, the rule of decision in cases where the parties are Muslims shall be the Muslim Personal Law (Shariat)"

 

Purpose of Shariat law

The whole purpose of the enactment of parent Shariat law and Tamilnadu Amendment, was to rule out any possibility of customary law taking the place of Muslim Personal Law.

 

The purport of the enactment is that the application of Muslim Personal Law was the rule and anybody's attempt to go by any custom or usage was considered as an exception.

 

Only under certain stated circumstances where the enforcement of any customary usage or practice was attempted to be tinkered with in certain sects such as in the case of Mappillas, Kozas, etc.

 

Unless a declaration (for a custom or usage) is made under section 3, of Shariat law, there is no scope for application of the Muslim Personal Law. 

**

 

 

Police investigation and their Coercing Witnesses

 Police investigation and their Coercing Witnesses

 

Darrell Lee Clark (Clark) and his friend Cain Joshua Storey (Storey) were 17 years old when they were arrested for their alleged involvement in the death of their friend a 15-year-old Braian Bowling (Bowling).

 

Bowling died from a gunshot wound to the head in his home in 1996. Moments before the gun was fired, Bowling was on the phone with his girlfriend and told her he was playing a game with a gun, which was brought to his home by his friend Storey, who was in the room at the time of the shooting.

 

Storey was charged with involuntary manslaughter. But a months later, police began investigating the death as homicide, on the statements of two witnesses and the urging of the deceased Bowling’s family members.

 

The two teenagers were sentenced to life in prison after being convicted of murder and conspiracy to commit murder, following the weeklong trial in 1998.

 

Actually, what happened was - Bowling accidentally shot himself in the head. 

 

But the first witness, a woman who live near Bowling’s home, was interviewed by police, who claimed the teens confessed they had ‘planned the murder of Bowling because he knew too much about a prior theft Storey and Clark had committed.

 

Based on this witness statement, Storey was charged with murder and Clark was arrested as a co-conspirator, despite having a corroborated alibi of Clark, stating he was his home on the night of the shooting, which was supported by his two witnesses.

 

After 25 years – now that woman witness revealed in the podcast that police coerced her into giving false statements and threatened to take her children away from her if she failed to comply.

 

The other witness, a man who was in a different room of the (deceased) Bowling’s home at the time of the shooting, identified Clark from a photo lineup as the person he saw running through the yard on that night.

 

Later on – now the man-witness revealed in the podcast that his testimony was based on an ‘unrelated, factually similar shooting’ which he witnessed in 1976 and he stated that he never identified Clark as the individual in the yard, nor did he ever witness anyone in the yard on that night.

 

New Trial

 

NOW based on the two witnesses’ re-statements, New-Trial was ordered on the fresh pleadings challenge a wrongful conviction.

 

Clark now 43 was released from the Floyd County Jail after the Floyd County Superior Court Judge John Neidrach agreed the conviction should be overturned and all underlying charges against him dismissed, after evidence in the case was reexamined.

 

Story admitted to bringing the gun to Bowling’s home, was also released after accepting a plea deal for involuntary manslaughter. A 10-year sentence with time served, after spending 25 years in prison. He was also exonerated of murder charges.

 

Feeling of Storey

Storey told “He was afraid to go to sleep the first night after he was released and in case he would up and “realize it was all a dream”.

 

Feeling of Clark

Clark told “Never would I have thought I would spend more than half my life in prison, especially for something I didn’t do”.

 

Feeling of Clark’s dad

Clark’s father told “I watched my son go into prison as a kid, I watched him go through prison, I watched him come out as a man.”

 

Judge apologized

The New Trial Judge, Floyd County Superior Court Judge John Neidrach apologized on behalf of the State of Georgia and Floyd County during the court hearing. Clark said it was an important step towards healing.

 

After 25 years of wrongful imprisonment, 2 Georgia men set free after newly uncovered evidence exonerates them of murder charges.

 

https://www.cnn.com/2022/12/10/us/georgia-men-exonerated-wrongful-imprisonment/index.html

 

**

 

Thursday, January 27, 2022

Pari delicto principle பேரி டெலிக்டோ கொள்கை

 Pari delicto principle

1961-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு.

ஒருவர், தனக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போடுகிறார். 

அதை எதிர்பார்த்த கணவர், சிவில் கோர்ட்டில், அவருக்கும், 2-வது மனைவி என்று சொல்லப்படுவருக்கும் எந்த சட்டபூர்வ திருமணமும் நடக்கவில்லை என்று தீர்ப்புக் கேட்டு சிவில் வழக்குப் போடுகிறார்.

கீழ்கோர்ட், அவர் கேட்டபடி வழக்கை அவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்து விடுகிறது.

ஆனால், முதல் அப்பீல் கோர்ட்டில், அவரின் வழக்கை தள்ளுபடி ஆகி விட்டது. காரணம் - சட்ட முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்றாலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவன், இந்த திருமணத்தை சட்டப்படி நடத்திக் கொள்ளவில்லை. அவரும் தவறி விட்டார். தன் தவறையே தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதே சட்டவிதி. அதையே Pari delicto principle (பேரி டெலிக்டோ கொள்கை) என்று சட்டம் சொல்கிறது.

பேரி டெலிக்டோ (Pari delicto) என்ற வார்த்தை ஒரு லத்தீன் வார்த்தை. இதன்படி, இருவருமே தவறி இழைத்த நிலையில் இருக்கும் போது, அதில் ஒருவர் மட்டும் அந்த தவறை, தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பதே அதன் சாரம்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லும் காலத்தில், இருதார மணத் தடை சட்டம் 1949 நடைமுறையில் இருந்த காலம். அந்த சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, மறு திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் 1949-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

பின்னர், 1955-ல் இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் வந்த பின்னர் 1949 சட்டம் ரத்து ஆகி விட்டது. 1955 சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, 2-வது மனைவியை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்கிறது 1955 இந்து திருமணச் சட்டம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வருகிறார்.

இங்கு, பேரி டெலிக்டோ கொள்கைப்படி, ஒருவர் தனது தவறை, தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், அந்தக் காரணத்துக்காகவே, அவர் இந்த 2-வது திருமணம் சட்டப்படி செல்லாது என்று கேட்பதை மறுத்து விடவும் முடியாது என்றும், 1955 இந்து திருமணச் சட்டம் பிரிவு 11-ல் அவ்வாறு நடந்த திருமணம் செல்லாது எனக் கேட்கும் உரிமை உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட் சொல்லி உள்ளது.

எனவே கணவர், தனது 2-வது திருமணத்தை செல்லாது எனக் கேட்கும் வழக்கை அனுமதித்து தீர்ப்பு கூறி விட்டது.

Refer: The Madras High Court in DKR Chinnaswamy Sah vs Rajamba Bai, AIR 1961 Mad 325 : (1961) 1 MLJ 381.

**


Wednesday, January 26, 2022

இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856

 இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856 

(The HIndu Widows’ Remarriage Act XV of 1856).

கோவிந்த படையாச்சி என்பவர் சொத்தை விட்டு விட்டு இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உண்டு. இந்து கணவரின் சொத்தில் மனைவிக்கு ஆயுட்கால உரிமை உண்டு என்பதாலும், மகனும் இல்லை என்பதாலும், மனைவிக்கு அந்த சொத்துக் கிடைக்கிறது. ஆனால், அவள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கிரயத்துக்கு விற்று விடுகிறாள். பின்னர் சில காலம் கழித்து, வேறு ஒரு ஆடவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 

இப்போது, படையாச்சியின் மகள், “தந்தையின் சொத்தில், தாய்க்குப் பின்னர் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை உள்ளது. ஆனால் அதை அவளின் தாய் விற்று விடுவதால், அந்த கிரயம் செல்லாது என்றும், தனக்கு உரிமை உள்ளது என்றும், தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால், அவளுக்கு கணவர் சொத்தி்ல் கிடைக்கும் உரிமையை இழந்து விடுகிறார் என்றும் சொல்லி, 1955-ல் சிவில் வழக்குப் போடுகிறார். 

அதை ஏற்றுக் கொண்ட முன்சீப் கோர்ட், மகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது. சொத்தை கிரயம் வாங்கியவர் அந்த தீ்ர்ப்பை எதிர்த்து 1957-ல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதுவும் கீழ்கோர்ட், தாய் கிரயம் செல்லாது என தீர்ப்பு கொடுத்தது சரியே என்றும், ஆனால், அவரின் தாய், மறு திருமணம் செய்தது Madras Act VI of 1949 படி செல்லாத திருமணம் என்றும் எனவே, மகள், அந்த சொத்தை திரும்ப கேட்க முடியாது என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டது.

அதை எதிர்த்து, மகள், சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். Madras Act VI of 1949 நடைமுறைக்கு வந்த தேதி 23-3-1949. 1949 சட்டம் என்பது இருதார தடை சட்டம். அப்போது புதுக் கணவருக்கு ஏற்கனவே மனைவி உயிருடன் இருக்கிறாள். ஆனால், தாயும், அவளின் புதுக் கணவரும் மறு திருமணம் செய்து கொண்டது ஏப்ரல் 1949-ல். அதாவது 1949 சட்டம் வந்த பின்னர். ஆனாலும், சாட்சிகள் யாரும் சரியான தேதியைச் சொல்லவில்லை. இருந்தாலும், 1949 சட்டம் வந்தபின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றே கீழ்கோர்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன. 

எனவே, இறந்தவரின் மனைவி மறுதிருமணம் செய்து கொண்டால், கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. அதிலும், மனைவிக்கு கணவரின் சொத்தில் ஆயுட்கால உரிமை மட்டுமே இருக்கிறது. அதை அவள் கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அவளின் ஆயுட்காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். மனைவிக்கு கணவரின் சொத்தில் முழு உரிமை கிடையாது. எனவே மனைவியின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்த சொத்து கணவரின் வாரிசுகளுக்குத் திரும்ப வந்து விடும். 

ஆனால் இந்த வழக்கில், தாய், மறுதிருமணம் செய்த போது, அவளின் புதுக் கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கிறாள். எனவே 1949 சட்டப்படி, இந்த மறுதிருமணம் செல்லாது. 1856 சட்டமான விதவைகள் மறு திருமணச் சட்டம் என்பது சட்டபூர்வமாக நடந்த விதவைகள் திருமணம் மட்டுமே. இங்கு அவ்வாறு நடக்கவில்லை. 

எனவே, மகள் அவளின் சொத்துரிமையை கேட்க முடியாது என்று சென்னை ஐகோரட் தீர்ப்பு சொல்லி விட்டது.

Refer: Madanavalli alias Sowbagyammal vs. Thangavelu Padayachi and others, AIR 1961 Mad 298 : (1961) 1 MLJ 140. 

**


Sunday, January 2, 2022

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சி மேமன் என்பவர்கள் கட்ச் பகுதியில் வசித்த இந்துக்கள். இவர்கள் பல காலங்களுக்கு முன்னரே முகமதிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இருந்தாலும், பழைய இந்து பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இதில் சொத்தில் உரிமை கோருவது இந்து வழக்கப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் இந்து கூட்டு குடும்ப முறைப்படி சொத்தை அடைய முடியுமா என்ற சட்டக் கேள்வி 1920-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்படுகிறது. கச்சு பகுதியில் இருந்த மேமன் வகை மக்கள், படிப்படியாக, பிரிந்து மேற்கு கடற்கரை வரை பரவி வாழ்ந்து வந்தனர். மலபார் பகுதியிலும், பெங்கால் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் முந்தைய வரலாற்றின் படி, அவர்கள் லோனாஸ் Loannas என்னும் இந்து வியாபார சாதியான வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவைகளை எல்லாம் உறுதி செய்யப் போதுமான ஆவணங்களோ, பதிவுகளோ இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோலவே, கோசாஸ் Khojahs என்ற முகமதியர்களும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தனர் என்றும், அவர்களும் அதே இந்து பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கச்சு மேமன்ஸ் மற்றும் கோசாஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான முறைகளே இருந்தன. ஆனால், இந்து சாஸ்திர சட்டமானது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வரும் என்று தெரியவில்லை. 

ஆனால், இதைப் பற்றி முதன் முதலில் 1847-ல் ஒரு வழக்கு வந்துள்ளது. அது Hirbae vs Sonabae; Rahimatbae vs Haji Jussap; and the case of Khojas and Memons (1847) Perry’s O.C. 110 at pp 115, 128 : 4 Ind. Dec. (O.S.) 100 at p.105. இந்த வழக்கின் முடிவு 1847ல் சொல்லப்பட்டது. அதில் கோசாஸ், மற்றும் கச்சி மேமன் முகமதியர்களின் சொத்தின் வாரிசு உரிமைகளில், முகமதிய சட்டத்திலும் மாறுபட்டு உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. Sir Erskine Perry C.J. என்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், கச்சி மேனன் மக்களில், இந்துக்களைப் போலவே, பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கவில்லை என்ற நிலை இருந்ததாகக் கூறுகிறார். ஆனாலும், குரானுக்கு எதிராக ஒரு வழக்கம் (custom) இருக்குமானால், அது செல்லாது என்பது குரானில் சொல்லி உள்ளது. ஆனாலும், அவர் ஒரு முடிவுக்க வருகிறார். “ஒரு வழக்கத்தை, கிழக்கத்திய நாட்டினர் (பிரிட்டீஸ் அல்லாதவர்) தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வந்தால், பிரிட்டீஸ் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் அதை ஏற்றுக் கொள்கிறது” என்கிறார். ஆனால் அது சட்டத்தை மீறியதாக இருக்க கூடாது என்கிறார். எனவே அந்த வழக்கில் ஒரு முகமதியப் பெண், சொத்துரிமை கேட்பதை மறுத்து விடுகிறார். அவ்வாறு பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல், கச்சு மேமன், கோசாஸ் மக்களிடம் இருக்கும் வழக்கமானது பல காலமாக பின்பற்றி வரும் வழக்கம் என்பதால், அதை மறுக்கிறார். 

மற்றொரு வழக்கான Gangbai vs Tavar Mulla, 1 BHCR 71 என்ற வழக்கில், ஒரு கோஸா முகமதியப் பெண் தனது சொத்துக்களை சாரிட்டியாக (தர்மமாக) தனது உயிலில் எழுதி வைத்ததை சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பு கூறி உள்ளது. தலைமை நீதிபதி Sausse CJ தனது தீர்ப்பில், “கோஜா சாதியினர், முகமதிய மதத்தை பின்பற்றி வந்தாலும், சொத்துரிமையைப் பொருத்து அவர்கள் இந்து மதச் சொத்து வாரிசுரிமையையே பின்பற்றி வந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். 

மற்றொரு வழக்கான, Mulbai BHCR 276 page 284 என்ற வழக்கில், 1866-ல் கூறியுள்ள தீர்ப்பில், ஒரு கோஷா பெண்மணி வாரிசு இல்லாமல் இறந்து விடுகிறார். அவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவளின் சகோதரன், கோர்ட்டில் Letters of Administration கேட்கிறார். அதில், அந்த இறந்த பெண்மணி, அந்த சொத்தை, அவளின் இறந்த கணவரிடமிருந்து வாரிசாகப் பெற்று இருப்பதால், அவளின் இறப்புக்குப் பின்னர் அந்தச் சொத்து அவளின் கணவரின் வாரிசுகளையே சேரும் என்றும், அவளின் உறவுகளான அவளின் சகோதரனுக்குப் போகாது என்றும் தீர்ப்பு உள்ளது. இது குரானுக்கு எதிரானதாக இருந்த போதும், தொடர் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இருப்பதால், அதுவும் சட்டத்துக்கு புறம்பாக இல்லாததால் கோர்ட் அதை ஏற்கிறது என்று சொல்லி உள்ளது. 

எனவே, கோசாஸ் இனத்தவர், இந்து சட்ட திட்டங்களின்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏற்க முடியாது. ஆனால், அவர்கள் தானாகவே ஒரு பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி அதன்படி நடந்து வருகின்றனர். எனவே அவர்களை இந்துக்கள் என்றோ, இந்து சட்டப்படி நடக்கின்றனர் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கோசாஸ் இன மக்கள், இந்துக்கள் கடைப்பிடிக்கும் நடை முறைகளை, அவர்களும் கடைப்பிடிக்கிறார்கள் அவ்வளவே. மற்ற விஷயங்களில் அவர்கள் முகமதியர்களாகவே இருந்து வருகின்றனர். 

மற்றொரு வழக்கான Shivaji Hasam vs Datu Mavji Kohja 12 BHCR 281 pp.202 என்ற வழக்கானது 1847-ல் நடந்த வழக்கு. இதில், பழக்க வழக்கத்தை நிரூபிக்க போதிய சாட்சியம் இல்லை என்றாலும், அவர்கள்/ கோஸா முகமதியர்கள், இந்துக்களின் பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சொத்துரிமை வைத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளனர். கோஸா முகமதிய குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்க, அதில் மூத்தவர் மற்றவர்களுக்கு கார்டியனாக இருந்தது செல்லும் என்று சொல்லி உள்ளது. இது இந்து முறைப்படியான கூட்டுக் குடும்பத்தில் அவ்வாறு மூத்தவர் குடும்பத் தலைவராக இருப்பார் என்பதை ஒத்து இருக்கிறது. 

எனவே மதராஸ் பிரசிடென்சியில் அதுவரை கோர்ட்டுகள், கோஸா முகதியர்கள், இந்து வாரிசு உரிமை முறையை பின்பற்றி அதே போன்ற பழக்க வழக்கத்தை கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

மற்றொரு வழக்கான Rahimbhai Allubhai Hirabhai vs Gorbai, 12 BHCR 294 at page 304, என்ற வழக்கு 1875-ல் நடந்த வழக்கு. இதில், ஒரு கோஸா வியாபாரி சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு மனைவி, தாய், மற்றும் திருமணம் ஆன ஒரு சகோதரி இருந்தனர். தீர்ப்பில், கோஸா பழக்க வழக்கப்படி, தாய் இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெறுவார் என்றும், அவர், இறந்தவரின் மனைவி, சகோதரி, இவர்களை விடவும் முன்னுரிமை பெற்றவர் என்றும் தீர்ப்பு உள்ளது. 

மற்றொரு வழக்கான Rahmatbai vs Hirbai, 3 B.34 : Ind. Dec.(N.S.) 23 என்ற வழக்கில் தீர்ப்பு 1877-ல் வந்தது. அதில், குழந்தை இல்லாமல் இறந்த கோஸா முகமதியருக்கு, அவரின் விதவை மனைவி, மற்றும் சகோதரி வாரிசாக வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதில், பழக்க வழக்கம் ஏதும் இல்லாதபோது, இந்து வாரிசு உரிமையை இங்கு கொண்டு வரலாமா என்ற கேள்வி எழுந்தது. 
**

Saturday, January 1, 2022

புரோநோட்டின் காலக் கெடு


புரோநோட்டின் காலக் கெடு 

புராமிசரி நோட்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

ஒரு புராமிசரி நோட், அது எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மூன்று வருடம் முடிந்து விட்டால், அந்த புரோநோட் செல்லாது என்பதால், அதைக் கொண்டு அந்தப் பணத்தை வசூல் செய்ய வழக்குப் போட முடியாது என்று இந்திய லிமிடேஷன் சட்டம் 1963 சொல்கிறது.

அப்படி மூன்று வருடம் முடியப் போகும் புராமிசரி நோட்டை உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளதாக இந்திய லிமிடேசன் சட்டம் 1963 சொல்கிறது.

முதல் முறை:

ஆனாலும், அந்த மூன்று வருடங்களுக்குள், அந்த புரோமிசரி நோட்டை எழுதிக் கொடுத்தவர் (கடன் வாங்கியவர்) அந்த புரோநோட் கடனுக்காக ஏதாவது ஒரு அசல் தொகை அல்லது ஏதாவது ஒரு வட்டித் தொகை செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்டது என்று அந்த புராமிசரி நோட்டில், அல்லது அதன் பின்பக்கத்தில் எழுதி தேதியுடன் கையெழுத்துப் போட்டால், அந்தத் தேதியிலிருந்து மேலும் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். இப்படியாக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடரலாம்.

இரண்டாவது முறை:

மற்றொரு முறையாக, அந்த புரோநோட்டுக்கு பகுதி அசல் தொகையோ, அல்லது பகுதி வட்டித் தொகையோ செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அதற்கும் ஒரு மாற்று வழியாக, ஒரு ஒப்பு உறுதிச் சீட்டு என்னும் Acknowledgment of Liability என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுக்கலாம். அந்த உறுதிமொழியானது, அந்த புரோமிசரி நோட்டுக்கு, இதுநாள் வரை இவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று அன்றைய தேதியிட்டு கையெழுத்துச் செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த புரோ நோட்டில் அதை எழுதத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தனியாக ஒரு கடிதம் கொடுத்தால் போதும். அப்படிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மேலும் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதில் முதல் வகையை லிமிடேசன் ஆக்ட் 1963-ல் பிரிவு 19 சொல்கிறது. (இதில் கடனில் ஒரு சிறு தொகையை, அசலுக்காகவோ அல்லது வட்டிக்காகவே கொடுத்து, (Payement towards either part of principal money or part of interest due) காலத்தை நீட்டித்துக் கொள்வது). வெறும் 10 ரூபாய் கொடுத்தால்கூடப் போதுமானது.

இரண்டாம் வகையை அதே சட்டத்தின் பிரிவு 18 சொல்கிறது. (இதில் பணம் ஏதும் கொடுக்காமல், கடன் பாக்கியாகவே உள்ளது ஒப்புக் கொண்டு ஒப்புகை உறுதிமொழி (Acknowedgement of debt) எழுதிக் கொடுத்து, காலத்தை நீட்டித்துக் கொள்வது).

ஒரு குழப்பமான வழக்கு:

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. இதில் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு புராமிசரி நோட் எழுதிக் கொடுத்திருக்கிறார். பின்னர் அசல் தொகை முழுவதும் கொடுத்து விட்டார். அதுவரை கொடுக்க வேண்டிய வட்டித் தொகை ரூ.200 வருகிறது. அதை அவரால் அன்று கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வட்டித் தொகைக்கு தனியே ஒரு புராமிசரி நோட் எழுதிக் கொடுக்கிறார்.  ஆனாலும் அந்த வட்டித் தொகையை கொடுக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர் வழக்குப் போடுகிறார். கடன் வாங்கியவரின் வாதம் என்னவென்றால், இந்த வட்டிப் புரோநோட்டில் நான் பணம் ஏதும் வாங்கவில்லை. வட்டிக்காக எழுதிக் கொடுத்தது. ஆனால் அசல் வாங்கிய புரோநோட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த புரோநோட் காலாவதி ஆகிவிட்டது. எனவே வட்டிப் புரோநோட், லிமிடேசன் சட்டம் 1963-ன் பிரிவு 18-ன்படி Acknowldgement of liability என்னும் கடன் ஒப்புகை உறுதிமொழி ஆகாது என்று வாதம் செய்கிறார்.

ஏனென்றால், அந்த வட்டிப் புரோ நோட்டில், பழைய புரோ நோட் கடன் பாக்கி உள்ளது என்று ஒப்புகை செய்திருந்தால்தான், அது லிமிடேசன் சட்டம் பிரிவு 18-ன்படி ஒப்புகை ஆகும். ஆனால் இங்கு வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட்டு, ரூ.200 பணம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பழைய பாக்கி கடனாக இருக்கிறது என்று சொல்லி ஒப்புதல் உறுதிமொழி  (Acknowledgment of liability) ஏதும் அதில் எழுதிக் கொடுக்கவில்லை. எனவே இந்த வட்டிப் புரோ நோட் பிரிவு 18-ன் படி கடனின் காலத்தை நீட்டிக் கொடுக்காது. (அதாவது வட்டிப் புரோ நோட் மூன்று வருடங்களுக்கு உள் இருந்தாலும், அது பழைய புரோ நோட்டுக்கு எழுதிக் கொடுத்திருப்பதால், அதற்கு கால நீட்டிப்பு இல்லை என்று வாதம் செய்கிறார்.

இந்த 1963 லிமிடேசன் சட்டம் வருவதற்கு முன்னர் பழைய லிமிடேசன் சட்டம் நடைமுறையில் இருந்தது.  

முதன் முதலில் வந்த லிமிடேசன் சட்டம் Act XIV of 1859.

பின்னர் வந்த சட்டம் Act XIX of 1871.

இதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1877.

அதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1908

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் 1963

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. எனவே 1908 வருட லிமிடேசன் சட்டம் அப்போது நடைமுறையில் இருந்தது.

இதே பிரச்சனை போன்று மதராஸ் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. Muthiah Chettiar v. Kuttayan Chetty, (1917) 6 LW 790. இதில், புரோ நோட்டின் பாக்கிப் பணத்துகாக உண்டி சீட்டு எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பாக, உண்டி எழுதிக் கொடுத்தது, லிமிடேசன் சட்டம் பிரிவு 20-ன்படி பணம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கருத முடியாது என்று சொல்லி விட்டது.

மதராஸ் ஐகோர்ட்டின் மற்றொரு வழக்கான Mackenzi v. Thiruvengadathan, (1886) ILR 9 Mad 271 என்ற வழக்கில் Justice Muthusamy Aiyar and Justice Brandt இருவரும், to the effect that the writing must show that the payment was made towards the debt in question… என்று சொல்லி உள்ளார்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட், அது பழைய புரோநோட் கடனில் பாக்கி உள்ளது என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு சொல்லப் படவில்லை.

ஆனாலும், கடன் கொடுத்தவரின் வாதம் என்னவென்றால், பழைய புரோ நோட் கடனை தீர்த்து விட்டார். அதில் வட்டிப் பாக்கியை வட்டிப் புரோ நோட் எழுதிக் கொடுத்து தீர்த்து விட்டார் என்று தான் கருத வேண்டும். எனவே வட்டிப் புரோ நோட் தனியே இயங்கும் என்று வாதம் செய்கிறார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இந்த வட்டிப் புரோ நோட் காலதாமதம் ஆகவில்லை என்றும், அந்தப் பணம் கொடுக்க வேண்டிய பணம் தான் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.


**