Tuesday, January 5, 2021

லிஸ் பென்டன்ஸ் கிரயம்

 சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 52 என்பது ஒரு சொத்தைப் பொறுத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த சொத்தை வேறு ஒருவர் கிரயம் வாங்கி இருந்தால், அப்படிக் கிரயம் வாங்கியவர், இந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதை Lis pendence purchase என்பர். 

ஒரு பாகப் பிரிவின் வழக்கில், முதல் தீர்ப்பு வந்தவுடன், ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை விற்று விடுகிறார். அப்படி விற்கும்போது சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 52ன்படி கோர்ட்டின் முன் அனுமதி பெறவேண்டும். இந்த பிரிவின் நோக்கம் என்னவென்றால், ஒரு சொத்து வழக்கில் இருக்கும்போது, மற்ற பார்ட்டிகளின் உரிமைகள் பாதிக்கும்படி, ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை விற்பனை செய்யக் கூடாது என்பதற்காக கொண்டு வந்த பிரிவாகும். 

எனவே அப்படிக் கிரயம் வாங்கிவிட்டு, அந்த வழக்கில் தன்னையும் பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்க முடியாது. தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி அந்த பாகத்தை வாங்கிவிட்டு, அதில் கட்டிடமும் கட்டிவிட்டு, தனக்கே அந்த பாகத்தை Equity நியாயப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் உரிமையும் கிடையாது. 

சாவித்திரி தேவி என்ற வழக்கில் சும்ரீம் கோர்ட், வழக்கு நிலுவையில் இருந்தபோது, வாங்கியவர், அந்த வழக்கில் அவசியமான பார்ட்டி என்பதால், அவரும் பார்ட்டியாகச் சேரலாம் என்று சொல்லி உள்ளது. ஆனால் அந்த வழக்கில் தடையாணை இருந்தபோது வாங்கி இருந்ததால், அவரையும் பார்ட்டியாகச் சேர்க்க வேண்டும் என்று கோர்ட் சொல்லி இருந்தது. 

ஆனால் கிரயம் வாங்கியவர், தனது உரிமை பாதிக்கப்படுகிறது என்று சொல்லி வழக்கில் ஒரு பார்ட்டியாகச் சேர முடியாது. 

**


No comments:

Post a Comment