Tuesday, January 5, 2021

வக்ஃப்

 முஸ்லீம் வக்ப் சம்மந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், முதலில் வக்ப் டிரிபூனல் (Wakf Tribunal) நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். சிவில் கோர்ட்டுகளுக்கு விசாரிக்கும் அதிகாரம் இல்லை. ரிட் மனுக்கூட, நேரடியாக முதலிலேயே ஐகோர்ட்டில் ரிட் மனுப் போட முடியும் என்றாலும், முதலில் வக்ப் டிபூனல் கோர்ட்டில் போட்ட பின்னர் ஐகோர்ட்டுக்கு வரவேண்டும் என்பது The Wakf Act 1995ன் பொதுவான விதி.

முஸ்லீம் வக்ப் பிரச்சனைகள், வக்ப் சொத்துக்களின் பிரச்சனைகளை the Wakf Act 1995 ன்படி Wakf Tribunal கோர்ட்டில்தான் தாக்கல் செய்து தீர்வு காண வேண்டும். இந்த வக்ப் டிரிபூனல்களை அந்தந்த மாநில அரசுகளே நியமித்துக் கொள்ள இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சிவில் கோர்ட்டுக்கு உரிய எல்லா அதிகாரங்களும் வக்ப் டிரிபூனலுக்கும் உண்டு என்று The Wakf Act 1995 சொல்கிறது.

வக்ப் (Wakf) என்பது இஸ்லாமிய மதக் கொள்கைகளப் பின்பற்றும் ஒரு முஸ்லீம், நிரந்தரமான அர்பணிப்பாக ஒரு சொத்து (அசையும் சொத்து அல்லது அசையாச் சொத்து) மத, தர்ம காரியங்களுக்காக கொடையாக் கொடுத்து ஏற்படுத்தி வைக்கும் முறை ஆகும்.

**


No comments:

Post a Comment