1957-ல் நடந்த வழக்கு:
1906-ல் புருஷோத்தம் வெங்கட ராமானுஜ செட்டியார் என்பவர் சின்னக் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதைக் கோயிலாக மாற்றுகிறார். ஶ்ரீகார்வண்ண பெருமாள் சுவாமியை (விஷ்ணு கடவுளின் 108 அர்ச்ச அவதாரங்களில் ஒருவர்) அங்கு நிறுவுகிறார். அந்தச் சிலையானது ஏற்கனவே உலகளந்த பெருமாள் கோயிலில் தற்காலிகமாக இருந்த சிலையாகும். உலகளந்த பெருமாள் கோயில் ஏற்கனவே சிதிலமடைந்து இருக்கிறது. எனவே அந்த சிலையைக் கொண்டு வந்து இங்கு வைக்கிறார். அத்துடன் வேறு சிலைகள், ஆள்வார்கள், ஆச்சாரியர்கள், பெருமாள், தாயார் இவர்களின் சிலைகளும் வைக்கப்படுகிறது. தினசரி பூசைக்கு ஒரு பக்தரையும் நியமிக்கிறார். ஆக இதை ஒரு கோயிலாகவே ஏற்படுத்தி உள்ளார். மூலவர், மற்றும் உத்சவர் விக்கிரகங்களையும் வைக்கிறார். மடப்பள்ளியும், சமையலறையும் ஏற்படுத்துகிறார். தினமும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்கிறார். உற்சவ செலவுகளுக்கு காணிக்கையும் வசூல் செய்கிறார். 1925-ல் இந்தக் கோயிலை ஶ்ரீகார்வண்ண பெருமாள் கோயிலாக ஏற்படுத்துகிறார். 1928-ல் இந்தக் கோயிலை உருவாக்கிய செட்டியார் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு விதவை மருமகளும், செட்டியாரின் சகோதரனின் இரண்டு மகன்களும் வாரிசுகள். அவர்களுக்குள் பாகப்பிரிவினை நடக்கிறது. அதில் இந்தக் கோயில் சொத்து சகோதரனின் ஒரு மகனின் பங்காகக் கிடைக்கிறது. அவர் பொதுமக்களின் நன்கொடை பெற்று கோயிலைப் புதுப்பிக்கிறார். பொதுக்கோயிலாவே இருக்கிறது. எனவே சொத்துவரி விதிக்கவில்லை. இதற்கிடையில், The Madras Hindu Religious Endowments Board 1948-ல் ஒரு உத்தரவு போட்டு, இது பொதுக்கோயில் என்று நிர்வாகத்தைக் கேட்கிறது. ஆனால் இதை மறுத்து, இது ஏற்கனவே பொதுக்கோயிலாக இருந்தது, ஆனால் பாகப்பிரிவினைக்குப் பின்னர் இதை வீடாக மாற்றப்பட்டது, சிலைகள் ஏதும் இல்லை என்று வாதம். அங்கு கோயில் இருந்தால் மட்டுமே என்டோவ்மெண்ட் போர்டு கேட்க முடியும். சிதிலமடைந்த வீட்டை எப்படிக் கேட்க முடியும் என்று வாதம். போர்டு நோட்டீஸ் கொடுக்கும்போது அது கோயிலாக இருந்தது. சிலைகள் தற்காலிகமாக இல்லை என்றாலும், வழிபாடு இல்லை என்றாலும், அது பொதுக் கோயில்தான் என்று ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லியுள்ளது.
**
No comments:
Post a Comment