வக்கீல்
பீஸ்
1886-ல்
நடந்த ஒரு வழக்கில் 1-வது பிரதிவாதிக்காக வக்கீல் நியமிக்கப்படுகிறார். அதற்காக ரூ.25
வக்கீல் பேசி ஒப்புக் கொள்கிறார். அதற்காக ஒரு புரோ நோட்டை வக்கீலுக்கு எழுதிக் கொடுக்கிறார்.
ஆனால்,
அந்த வழக்கைப் போட்டவர் பின்னர் வாபஸ் வாங்கி விடுகிறார். எனவே வக்கீலுக்கு அதில் அதிகம்
வேலை இருக்கவில்லை. இருந்தாலும் மொத்த பீஸ் கேட்கிறார். அதற்கான புரோ நோட்படி தனக்கு
ரூ.25 வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்.
புரோ
நோட்டை எழுதிக் கொடுத்த பார்ட்டி, அந்த புரோ நோட்டை தானே எழுதிக் கொடுத்ததாக ஒப்புக்
கொள்கிறார். ஆனால், அந்த வழக்கு இடையேலேயே வாபஸ் ஆகி விட்டதால், இப்போது அதற்கு அவ்வளவு
பீஸ் கொடுக்க முடியாது என்கிறார்.
செக்சன்
29 வக்கீல் சட்டம் (Sec.29 of the Legal Practitioners’ Act) என்ன சொல்கிறது என்றால்: வக்கீல் தனக்குச் சேரவேண்டிய பீஸ் தொகைக்கு பத்திரங்கள்
எழுதி வாங்கினால், அந்தப் பத்திரத்தை எழுதிய தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட
கோர்ட்டில் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால்
இந்த வழக்கில் வக்கீல் அவ்வாறு தாக்கல் செய்யவில்லை. அதை தன் கைவசமே வைத்திருந்தார்.
எனவே அந்த புரோ நோட் செல்லாது என்று கோர்ட் சொல்லி விட்டது.
மேலும்
ரூ.25/- வக்கீல் பீஸ் அதிகமா அல்லது சரியா என்ற கேள்வி வந்தது. அந்த வழக்கில் வாதி
தன் வழக்கை பாதியில் வாபஸ் வாங்கி விட்டார். எனவே இந்த வக்கீலுக்கு அதில் அதிக வேலை
இல்லை. இருந்தாலும், அவரின் உழைப்புக்கு ரூ.7 போதும் என்று முடிவு செய்கிறது சென்னை
ஐகோர்ட். (இந்த வழக்கு 1890-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்).
**
No comments:
Post a Comment