சலம் (கோபம்) காணும் வேந்தர் தமக்கு அஞ்சார்;
யமன் சண்டைக்கும் அஞ்சார்;
துலங்கா (அசையாத) நரகக் குழி அணுகார்;
கலங்கார் புலிக்கும், கரடிக்கும், யானைக்கும்;
கந்தன் நன்நூல் அலங்காரம் நூற்றில் ஒரு கவி தான்
கற்று அறிந்தவரே.
(கந்தரலங்காரம்-100)
கந்தரலங்காரத்தின் 100
பாடல்களில் ஒரு பாடலை அறிந்திருத்தால், மேற்சொன்ன எவற்றுக்கும் அஞ்சமாட்டார்.
“சலம்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்நூ
லலங்கார னூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே.)
No comments:
Post a Comment