இரட்டையர்கள் (Twin Brothers)
பெல்ஜியம்
நாட்டில் இந்த இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள்; இவர்களுக்கு இப்போது 103
வயதாகி விட்டது; பெயிட்டர் என்றும் பாலஸ் என்றும் இவர்களின் பெயர்கள்; இவர்கள்
இருவருமே திருமணமே செய்து கொள்ளவில்லையாம்; ஒரே அறையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக
வாழ்ந்து வருகிறார்களாம்;
எப்போதாவது
இவர்களுக்கு வருத்தம் வருமாம்! நாமும் திருமணம் செய்து கொண்டு மனைவி மக்கள்
பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்காலாமோ என்று ஏங்கியதுண்டாம்! ஆம், தனி
வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படும் என்பது இவர்கள் மூலம் கண்ட உண்மையே!
இருவரும்
எப்போதும், ஸ்மார்ட்டாக உடை அணிந்து கொண்டு இருப்பது வழக்கமாம்! இருவருமே கோர்ட்
மாஜிஸ்டிரேட்டாக வேலை செய்து ஒய்வு பெற்றவர்களாம்!
இருவரும்
எப்போதுமே பிரென்ச் மொழியில் பேசிக் கொள்வார்களாம்! ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி,
பியரி என்றும் பால் என்றும் கூப்பிட்டுக் கொள்வார்களாம்!
இவர்கள்
இன்னும் நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்!
இவர்கள்
இன்னும் இரண்டு வருடங்கள் வாழ்ந்தால், ஏற்கனவே 105 வயது வரை வாழ்ந்து உலக சாதனை
செய்த இரட்டையர்களான அமெரிக்க ட்வின் சகோதரர்களான க்ளென், டேல் இவரின் சாதனையை
முறியடிப்பார்களாம்!
வாழட்டும்,
வாழ்த்துவோம்!
**
No comments:
Post a Comment