அமெரிக்க
அதிபர் தேர்தல் 2016 –(2)
டொனால்டு
டிரம்ப்: Donald Trump:
அமெரிக்காவிலேயே
இவர் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர்: பெரிய பணக்காரர்: எங்கு பார்த்தாலும் இவரின்
வியாபாரம்தான்; இப்படிப்பட்டவர் அமெரிக்க அதிபர் ஆக ஆசைப்பட்டதில்
வியப்பில்லைதான்!
அமெரிக்காவில்
இரண்டு பெரிய கட்சிகளே உள்ளன; ஒன்று, டெமாக்ரடிக் கட்சி (இதில்தான் ஒபாமா அதிபாராக
இப்போது இருக்கிறார்); மற்றொரு பெரிய கட்சி ரிபப்ளிக்கன் கட்சி; இதுவே அமெரிக்காவில் பழைய கட்சி என்றும்
சொல்வார்கள்; அதனால்தான் இந்த கட்சியை ரிபப்ளிகன் கட்சி என்றும் ஜிஓபி கட்சி
என்றும் சொல்வர்; ஜிஓபி என்றால் GOP = Grand Old Party.
(இந்தியாவில், சுதந்திரம் வாங்கும்போது காங்கிரஸ் கட்சி இருந்ததுபோல, அமெரிக்கா
சுதந்திரம் வாங்கும்போது இருந்த பழமையான கட்சி இது); இந்த ரிபப்ளிக்கன் கட்சியில்தான் இவர் அதிபர் வேட்பாளராக நிற்கிறார்;
இந்த
டொனால்டு டிரம்ப் தகப்பனாரும் பெரிய பணக்காரரே! அவர் பெயர் ப்ரெட் சி.டிரம்ப் Fred
C. Trump. இவரும் ரியல் எஸ்டேட் வியாபாரிதான்;
மகன் டிரம்ப் சொல்கிறார், “என் தகப்பனாரிடம் நான் நிறைய வியாபார நுணுக்கங்களைக்
கற்றுக் கொண்டேன்; அவரிடம் நான் ஐந்து
வருடங்கள் கூடவே இருந்து கற்றுக் கொண்டேன்” என்கிறார்; அதேபோல, தகப்பனும் மகனை
விட்டுக் கொடுக்காமல் புகழ்கிறார், “என் மகன் எனக்கு அதிகமாக உதவியாக இருந்தான்;
அவன் என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்த காலத்தில் மிகப் பெரிய லாபம் கிடைத்தது:
பெரிய வேலைகளை எல்லாம் எடுத்துச் செய்தோம்; என் மகன் தொட்டதெல்லாம் பொன்னாகும்”
என்று புகழ்கிறார்;
அமெரிக்க
நியூயார்க் நகரில் இவர்கள் பேரைச் சொன்னால் தெரியதவர்களே கிடையாது; அந்த அளவுக்கு
பிரபல்யம் ஆனவர்கள்; இவர்கள் கட்டிய எல்லாக் கட்டிங்களுக்கும் டிரம்ப் என்றே பெயர்
சூட்டி உள்ளனர்;
இவர்
1946ல் பிறந்தவர்; இப்போது 70 வயதாகிறது; ஜூன் 14ல் பிறந்தவர்; பிறந்த தேதியின் கூட்டுத்
தொகை 5; ஐந்து எண் வெற்றியைக் குறிக்கும்; எனவேதான் இவர் பணக்கார வீட்டில் பிறந்து
பணக்காரராகவே இருக்கிறார் என கருதலாம்; இவர் நியூயார்க் சிட்டில் உள்ள மேன்ஹாட்டன்
ஏரியாவில் டிரம்ப் டவர் என்று ஒரு பெரிய வீட்டை.... பங்களாவை..... அரண்மனையை கட்டி
அங்கு குடியிருக்கிறார்; இவர் செய்துவரும் வியாபார நிறுவனத்துக்குப் பெயர் தி
டிரம்ப் ஆர்கனைஷேசன்;
இவர்
முதலில் இவானா என்பவரை திருமணம் செய்தார்; 1977ல்; பின்னர் மரியா மேப்பில்ஸ்
என்பவரை 1993ல் திருமணம் செய்தார்; பின்னர் மெலனியா என்பவரை 2005ல் திருமணம்
செய்து அவருடன்தான் இப்போது வாழ்கிறார்; மூத்த மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2-வது
மனைவி மூலம் ஒரு குழந்தை; மூன்றாவது மனைவி மூலம் ஒரு குழந்தை; ஆக 5 குழந்தைகள்
உள்ளனர்; முதல் இரண்டு மனைவிகளையும் டைவர்ஸ் செய்து விட்டாராம்; 2-வது மனைவி மரியா
சினிமா நடிகையாம்;
இந்த
டிரம்பின் தாத்தா, அவரின் 16 வயதில் ஜெர்மனி நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு
பிழைப்புத்தேடி வந்தவர்; அலஸ்காவில் தங்கம் கிடைக்கிறது என்று மக்கள் குவிந்தபோது,
இவரின் தாத்தா சாப்பாட்டுக் கடை திறந்து வியாபாரம் பார்த்து, அதில் கோடி கோடியாகச்
சம்பாதித்து விட்டாராம்; இந்த பணம், சொத்துக்கள்தான், இந்த டிரம்பின்
தகப்பனாருக்கு கிடைத்திருக்கிறது;
டிரம்பின்
அம்மா மேரி ஸ்காட்லாந்துகாரர்; இவரும் தன் 17 வயதில் அமெரிக்காவுக்கு குடி
பெயர்ந்து வந்தவராம்; இங்கு அமெரிக்காவுக்கு வந்து, நியூயார்க் நகரில் ஆயா வேலை
போன்ற வீட்டு வேலை செய்தவராம்; அப்பா டிரம்பும், அம்மா மேரி டிரம்பும் 1936ல் நியூயார்க்
நகரில் சந்தித்துக் கொண்டபோது, திருமணம் செய்து கொண்டனராம்;
டொனால்டு
டிரம்ப், “தொட்டதெல்லாம் பொன்னாகும்” என்று அவரின் அப்பா சொன்னது உண்மைதானோ! இன்று
டொனால்டு டிரம்ப் Republican கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர்!
**
No comments:
Post a Comment