American Dollar அமெரிக்காவின் டாலர் பணம்:
இதை USD அல்லது US$ என்று குறிப்படுகிறார்கள். (யு.எஸ்.
டாலர்)
அமெரிக்கா,
கிழக்கு தைமூர், ஈக்குவேடர், எல் சால்வேடர், பனாமா ஆகிய நாடுகள் இதை சட்டபூர்வமாக
உபயோகின்றன. மற்ற 17 நாடுகள் இதை
சட்டபூர்வமாக இல்லாமல் சாதாரணமாகவே
உபயோகிக்கின்றன. இந்த டாலரானது மற்ற 23 நாடுகளின் கரென்சியுடன் தொடர்பில் உள்ளது.
ஒரு
டாலர் என்பது 100 சென்ட். (ஒரு
சென்ட் என்பது இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்பது போல இருக்கும்).
1/10 = Dime
1/100 = Cent
1/1000
= Mill
ஆயிரத்தில்
ஒரு பங்கு மில்.
100ல் ஒரு
பங்கு சென்ட் (இந்தியாவில் ஒரு பைசா மாதிரி)
பத்தில் ஒரு
பங்கு (10 பைசா மாதிரி) இது ஒரு டிம்.
இந்த அமெரிக்க
டாலருக்கு பல மாற்றுப் பெயர்கள் உள்ளூரில் உள்ளது. இந்தியாவில் பணம், துட்டு,
காந்திநோட்டு, ரூபாய், காசு, என்பது போல.
அமெரிக்க
டாலரின் வேறு பெயர்கள்:
Buck,
bill, bean, paper, smacker, dough, green, bread, bones, bananas, mint, etc.
காசுகளாக ஒரு
சென்ட், 5 சென்ட், 10 சென்ட், 25 சென்ட் இவைகள் உள்ளன.
(50 சென்ட்,
ஒரு டாலர் காசுகள் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை)
டாலர்
நோட்டுகளாக 1 டாலர், 5 டாலர், 10 டாலர், 50 டாலர், 100 டாலர் நோட்டுகள்
புழக்கத்தில் உள்ளன. (5000, 10,000, 100,000 டாலர் நோட்டுகள் புழக்கத்தில்
விடவில்லை).
யுஎஸ்
டாலர் பணத்தை பியட் மணி (Fiat Money) என்பார்கள்.
பணத்தில்
மொத்தம் மூன்று வகைகள்;
1) Commodity money
2) Representative money
3) Fiat Money
முதல் வகை கமோடிட்டி பணம் என்பது தானியங்களை
வைத்து பண்டமாற்று செய்வது. பழைய முறை.
2-வது வகையான
ரெப்ரசென்டேடிவ் பணம் என்பது தங்கத்துக்கு/ வெள்ளிக்கு இணையான பேப்பர்
சர்டிபிகேட்டுகள் புழக்கத்தில் விடுவது. அதைக் கொடுத்தால் அதற்குறிய
தங்கமோ/வெள்ளியோ கிடைக்கும்.
3-வது பியட்
பணம் - பேப்பரில் இப்போதுள்ள அரசுகள் அச்சடித்து கொடுத்துள்ள பண நோட்டுகள். இதற்கு
உண்மையிலேயே தங்கம்/வெள்ளிக்குறிய மதிப்பு இருக்காது. ஆனாலும் அந்ததந்த நாடுகளின்
அரசாங்கம் அந்த நோட்டுக்குறிய மதிப்பை கொடுப்பதாக அதனதன் ரிசர்வ் பாங்க் மூலம்
உத்திராவாதம் அளித்திருக்கும். சில நேரங்களில் அதன் மதிப்பு குறையும், அதிகமாகும்,
ஒரு நிலையில் நிற்காது.
முன்காலத்தில்
தங்கத்தை இருப்பு வைத்துக் கொண்டு அதற்கேற்ப பண நோட்டுகளை அச்சடித்து மக்களிடம்
அரசுகள் கொடுக்கும். அந்தப் பணத்துக்கு ஈடான தங்கம் கொடுப்பதாக உறுதிமொழி உண்டு.
ஆனால் இப்போது எல்லா நாடுகளுமே ஒரளவு தங்கத்தை வைத்துக் கொண்டு அதிக அளவு பண
நோட்டுகளை அச்சடித்து வினியோகித்து விட்டன. தங்க இருப்புக்கு அதிகமாக அச்சடித்த
துணிந்த நாடுகளில் கடைசியாக அமெரிக்கா 1971-ல் இருந்து அதுவும் மாறிவிட்டது.
உலக
மொத்தத்தில் உள்ள தங்கத்தின் இருப்பு 0.84 டிரில்லியன் டாலர். ஆனால் உலக பண
நோட்டுகளின் மொத்த மதிப்போ 3.9 டிரில்லியன் டாலர். (அதாவது 5 மடங்கு அதிகம்.
அதாவது தங்க இருப்பைக் காட்டிலும் 5
மடங்கு பண நோட்டுக்கள் அதிகமாகவே உலகத்தில் புழக்கத்தில் உள்ளதாம்.)
பொதுவாக
தங்கத்துக்கு ஏற்ப பண நோட்டுக்களை வெளியிடுவது அந்தந்த நாடுகளின் ரிசர்வ் பாங்கு
அல்லது பெரடல் பாங்குகள். ஆனால் இப்போதெல்லாம் மற்ற பாங்குகள் வேகமாகத்
தலையெடுத்துவிட்டன. இவைகள் புழக்கத்தில் கொடுக்கும் கடன்கள் வசூலிக்கும்
டெப்பாசிட் இவைகளுக்கு அவ்வளவாக கண்டிப்பான கட்டுப்பாடுகள் இல்லையாம். இவை
இஷ்டம்போல பணப் புழக்கத்தை வைத்துள்ளன. அதனால் மக்களுக்கு சிறிது ஆபத்துத்தான்.
இவ்வாறு ரிஸ்க்கான கடன்கள் கொடுத்துள்ள வகையில் 62 டிரில்லியன் டாலர் உள்ளதாம்.
இதனால்தான் பணத்தின் உண்மையான மதிப்பை மீறி 'பண வீக்கம்' (Inflation) ஆகி விட்டது.
இது அதிகமாக அதிகமாக பணவீக்கம் அதிகமாகும். இப்போது உலகில் எவ்வளவு பணவீக்கத்தில் உள்ளது
என்றால் 290 டிரில்லியன் டாலர்
அளவுக்கு வீங்கி உள்ளது. (அதாவது ஒரு டிரில்லியனுக்கு குறைவாகவே உலகில் தங்கம்
இருப்பு உள்ளது. ஆனால் உலகில், பண நோட்டுக்கள் 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு அச்சடிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் புழக்கத்தில் வங்கிகள் 290 டிரில்லியன் அளவுக்கு பணத்தை புழங்கி
வருகிறது.)
வேடிக்கையாக
ஒரு கற்பனை செய்தால், இந்த 290
டிரில்லியன் டாலர் பணத்தை கொடுத்து அதனதன் அரசுகளிடம் தங்கத்தைக் கேட்டால் வெறும்
ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புக்குத்தான் தங்கம் கொடுப்பார்கள். மீதி 289
டிரில்லியன் டாலர் பண மதிப்புக்கு தங்கமே கொடுக்க முடியாது. அதாவது 290 ரூபாயைக்
கொடுத்தால் ஒரு ரூபாய்கான தங்கம் திரும்ப வாங்கலாம். அவ்வளவுதான் இன்றைய உலக
பணத்தின் மதிப்பு).
உற்பத்திக்கு
ஏற்ப அரசுகள் பண நோட்டுகளை அச்சிடலாம். ஆனால் உற்பத்தியை மீறி பண நோட்டுகளை
அச்சிடுவது அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடத்தை மேலே மேலே கட்டுவது போல்.
அமெரிக்காவும்
தங்கத்துக்கு பதிலாக உற்பத்தியை அடையாளமாக வைத்து 1970க்கு பின்னர் பண நோட்டுகளை
அச்சிட ஆரம்பித்தது. பெட்ரோல் எண்ணையை டாலருக்கு விற்பதற்கு ஒப்பந்தம் செய்து
கொண்டது (இதனால் அமெரிக்கா பெட்ரோல் வாங்க தங்கத்தை விற்கத் தேவையில்லை). எனவே
டாலரை அதிகமாக அச்சடித்தது. இப்போதெல்லாம் எல்லா நாடுகளுமே தங்கத்துக்கு நிகரான பண
நோட்டுகளை அச்சடிப்பதில்லை, அதற்குப் பதிலாக வெறும் காகித நோட்டுகளை அச்சிடித்து
வெளியிட்டு அது கடனாளி போல அந்த பணத்தை புழக்கத்தில் வைத்திருக்கும். உற்பத்தி
குறிப்பிடும்படி இல்லாததால் பணநோட்டுகளானது பொதுமக்களின் கைகளுக்கு வரமுடியவில்லை.
அது அதிகமாக செல்வந்தர்கள் கைகளிலேயே நின்று விட்டது. பண நோட்டுகள் அதிகமாக
உள்ளது, ஆனால் அந்த நாட்டின் உற்பத்தி உண்மையில் மிகக் குறைவாகவே உள்ளது. உற்பத்தி குறைந்து உள்ளது, ஆனால் அதை
உபயோகிக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். எனவே உற்பத்தியான பொருள்களின்
பற்றாக்குறையால் விலை ஏறுவது இயல்பு. உதாரணமாக 1970ல் பெட்ரோல் விலை திடீரென
ஏறியது. இதனால் வளர்ந்து வரும் நாடுகள் பெட்ரோல் வாங்க முடியாமல் திண்டாடின. அந்த
நாட்டு பணநோட்டு அதிகமாக கொடுக்க வேண்டி வந்தது. அதாவது அந்த நாட்டின் பண நோட்டின்
மதிப்பு டாலருக்கு நேர் செய்யும் போது குறைந்துவிட்டது.
இந்த மாதிரி
நேரங்களில் பண நோட்டுகளுக்கு மரியாதை இல்லாமல் இருக்கும். அப்போது பணத்தை அதிகம்
அச்சடித்து வெளியிட வேண்டும், அந்த நேரங்களில் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட்
விலைகள் பணத்தால் அதிகமாக உயரும். (உண்மை மதிப்பில் உயராது). பின்னர் பெட்ரோல்
விலை குறையும்போது ரியல் எஸ்டேட் விலை குறையும். அப்போது பங்கு சந்தை, ரியல்
எஸ்டேட் விலை சரியும். காரணமே தெரியாது நஷ்டம் வரும்.
அமெரிக்க
டாலர் $ என்ற அடையாளத்தில்
குறிப்பிடப் பட்டிருக்கும். அதற்கு
அர்த்தம் - 18-ம் நூற்றாண்டில் இதை Ps = Peso என்று குறிப்பிட்டு வந்து பின்னர் அந்த
இரண்டு எழுத்தையும் சேர்த்து தற்போதுள்ள $ சிம்பளை உருவாக்கி உள்ளனர். அமெரிக்கா தனது டாலர்
காசுகளை 1792ல் அச்சடித்தது, அப்போது ஒரு டாலரின் மதிப்பு 24 கிராம் கொண்ட சில்வர் என்னும் வெள்ளியின்
மதிப்பு. அப்போது 15:1 என்பது சில்வருக்கும் தங்கத்துக்குமான இடைவெளி மதிப்பீடு. அதாவது 15 கிராம் வெள்ளியானது ஒருகிராம் தங்கத்துக்கு நிகரானது.
அமெரிக்காவில்
1862ல் சிவில் வார் என்னும் மக்கள்
சண்டை வந்தது. அப்போது பணப்
புழக்கத்துக்காக பேப்பரில் பணம் அச்சிடப்பட்டது. அதன்பின் சில்வர், தங்கம்
தொடர்பு கைவிடப்பட்டது. வெறும்
பேப்பர் பணம் அச்சிடப்பட்டது. செர்சா
சூரி என்ற மன்னர் காலத்தில் 1540 ல் சில்வர் காயின் அறிமுகப்படுத்தினார். மொகலாயர்
காலத்திலும், பிரிட்டீஸ் காலத்திலும் தொடர்ந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலமான
1770-1832-ல் பேங்குகள் உருவானது. Bank of Hindostan,
General Bank of Bengal and Bihar, Bengal Bank.
19
நூற்றாண்டிங் இந்தியப் பணம் வெள்ளிப்பணமாவே இருந்தது. பிரிட்டீஸ் ஆட்சியில் ரூபாயை
16 அணாவாக மாற்றினர்.
ஒரு அணா = பழைய 4 பைசா.
ஒரு
ரூபாய்க்கு= பழைய 64 பைசா அல்லது 192 பைஸ்.
1957ல் தான்
100 புதிய நயா பைசா கொண்டது ஒரு ரூபாய் என மாற்றிவிட்டது இந்திய அரசு (1.4.1957
முதல்). பின்னர் 1.6.1964 முதல் வெறும் பைசா என்ற வார்த்தையை மட்டுமே உபயோகிக்கச்
சொன்னது. பழைய நயா பைசா வேண்டாம் என்றது.
முதல்
உலகப்போரின்போது சில்வர் பணத்துக்கு தட்டுப்பாடு., எனவே பேப்பர் பணத்தை
கொண்டுவந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒருரூபாய், இரண்டரை ரூபாய் பேப்பர்
நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
1991-ல்
இந்திய பொருளாதரத்தில் பின்னடைவு ஏற்பட்டது, 1999ல் வேறு வழியில்லாமல் பணத்தின்
மதிப்பை குறைத்துக் கொண்டது.
2000-2007 வரை
நிலையாக இருந்த்து = ஒரு அமெரிக்க டாலர் = 44.48 இந்திய ரூபாய். இந்தியாவிற்குள்
வெளிநாடுகளில் முதலீடு குறைந்தவுடன் ஒரு டாலர் = 68.80 என்ற இந்தியரூபாய் ஆனது.
ரூபா
என்பது ரூபம் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாம், உருவமாக செய்த வெள்ளி காசு (Wrought Silver) இதுதான் பணம் என்ற பெயரில்
புழங்கியது.
தங்கக்காசு
= சொர்ணரூப, copper coin = தாமர ரூப, lead coin = சிசரூப, ரூப என்றால் = shape, வடிவம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் rupyarupa ருப்பியரூப என்று உள்ளது. ருப்பிய = wrought
Silver வடிவமைக்கப்பட்ட வெள்ளி, ரூப = உருவம் form.
Money value in 1956
UK Pound = Rs.13.36
US Dollar = Rs.4.81
Australian Pound = Rs.10.71
Burma Kyat = Rs.1.00
Canada Dollar = Rs.4.91
France Franc = Rs.0.0137
Germany Mark = Rs.1.14
HongKong Dollar = Rs.0.84
Italy Lira = Rs.0.008
Malaya Dollar = Rs.1.57
NewZeland Pound = Rs.13.36
Pakistan Rupiya = Rs.1.00
SouthAfrica Pound = Rs.13.36
Sweden Croner = Rs.0.93
Switzerland Franc = Rs.1.11
No comments:
Post a Comment