Thursday, February 20, 2014

நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள்

அசுவினி    = பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி.
பரணி           = கிழவன், சோறு, பகலவன், தராசு, தாழி, தருமனாள், அடுப்பு, பூதம், தாசி, முக்கூட்டு.
கார்த்திகை  = எரிநாள், ஆரல், இறால், அறுவாய், அளக்கர், நாவிதன், அங்கி, அளகு.
உரோகிணி  = பிரமனாள், சகடு, பண்டி, சதி, வையம், மருள். விமானம், தேர், ஊற்றால், உரோணி.
மிருகசீரிடம் = திங்கணாள், மதி, பேராளன், மான்றலை, மாழ்கு, மார்கழி, மும்மீன், நரிப்புறம், பாலை.
திருவாதிரை = செங்கை, மூதிரை, யாழ், ஈசன்தினம்.
புனர்பூசம்      = அதிதிநாள், கழை, புனர்தம், கரும்பு, புனிதம், பிண்டி, ஆவணம்.
பூசம்                 = குருவினாள், கொடிறு, வண்டு, காற்குளம்.
ஆயில்யம் = அரவினாள், கௌவை, பாம்பு, ஆயில்.
மகம்             = கொடுநுகம், வேள்வி, வாய்க்கால், வேட்டுவன், மாசி, முதலில் வரும் சனி.
பூரம்     = இடையில் வரும் சனி, தூர்க்கை, எலி, பகவதி நாள், நாவிதன், கணை.
உத்தரம்    = பங்குனி, கடையில் வரும் சனி, செங்கதிர் நாள்.
அத்தம் (அஷ்தம்) = காமரம், அங்கிநாள், கௌத்துவம், கைம்மீன், களிறு, நவ்வி, ஐவிரல்.
சித்திரை  = நெய், பயறு, மீன், அறுவை, ஆடை, தூசு, நடுநாள், தச்சன், துவட்டா நாள்.
சோதி     (சுவாதி) = விளக்கு, மரக்கால், வீழ்க்கை, வெறுநுகம், காற்றினாள், காற்று, தீபம்.
விசாகம்   = முற்றில், வைகாசி, காற்றுநாள், முறம், சுளகு, சேட்டை.
அனுடம்   = புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்தரநாள்.
கேட்டை    = சேட்டை, இந்திரனாள், வேதி, தழல், எரி, வல்லாரை.
மூலம்       = தேட்கடை, குருகு, கொக்கு, சிலை, அன்றில், ஆனி, அசுரநாள்.
பூராடம்     = உடைகுளம், முற்குளம், நீர்நாள்.
உத்தராடம் = கடைக்குளம், ஆனி, விச்சுநாள், ஆடி.
திருவோணம் = மாயோனாள், உலக்கை, முக்கோல், சிரவணம், சோணை.
அவிட்டம் = காகப்புள், அசுக்கணாள். பறவை, புள், ஆவணி.
சதயம்        = செக்கு, சுண்டன், போர், குன்று, வருணனாள்.
பூரட்டாதி = முற்கொழுங்கால், நாழி, புரட்டை.
உத்தரட்டாதி = முரசு, பிற்கொழுங்கால், மன்னன்,

ரேவதி    = இரவிநாள், கலம், தோணி, தொழு, நாவாய், கடைநாள், சூலம், பெருநாள்.

இராசிகளின் தமிழ்ப் பெயர்கள்

மேடம்            = மை, வருடை, ஆடு, கொறி, மறி.
இடபம்           = குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை.
மிதுனம்       = தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்.
கர்க்கடகம் = நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி.
சிங்கம் (சிம்மம்) = அரி, யாளி, மா, கொடும்புலி.
கன்னி            = மடந்தையர் பெயர்கள் எல்லாம் சொல்லலாம்.
துலாம்           = துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்.
விருச்சிகம் = தெறுக்கால், தேள்.
தனுசு            = கொடுமரம், தூரோணம், சாபம், சிலை.
மகரம்          = மான், கலை, சுறா.
கும்பம்        = குடம், கரீரம், சாடி, குடங்கர்.

மீனம்          = மீன், மயிலை, மற்சம், சலசரம்.

கிரகங்களின் தமிழ்ப் பெயர்கள்

சூரியனின் வேறு பெயர்கள்:
பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கள், இருள்வலி, சவிதா, சூரன், ஏல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சியன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன்.
பரிதி வட்டம் = விசயம்.
பரிதி கிரணம் = கரம், தீவிரம்.

சந்திரனின் வேறு பெயர்கள்:
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே.

செவ்வாயின் பெயர் = செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பௌமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்.

புதன் - வேறு பெயர்கள்:
சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்.

வியாழனின் வேறு பெயர்கள்:
தெய்வமந்திரி, சிகண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசான், வேந்தன், பொன்.

வெள்ளியின் வேறு பெயர்கள்:
அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்.

சனியின் வேறு பெயர்கள்:
கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், சௌரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய், முகன்.

இராகு = தமம், கறுப்பு.

கேது = செம்மை, சிகி, கதிர்ப்பகை.

Saturday, February 15, 2014

உலகில் பணம் படுத்தும்பாடு


American Dollar  அமெரிக்காவின் டாலர் பணம்:
இதை USD அல்லது US$ என்று குறிப்படுகிறார்கள். (யு.எஸ். டாலர்)
அமெரிக்கா, கிழக்கு தைமூர், ஈக்குவேடர், எல் சால்வேடர், பனாமா ஆகிய நாடுகள் இதை சட்டபூர்வமாக உபயோகின்றன. மற்ற 17 நாடுகள் இதை சட்டபூர்வமாக  இல்லாமல் சாதாரணமாகவே உபயோகிக்கின்றன. இந்த டாலரானது மற்ற 23 நாடுகளின் கரென்சியுடன்  தொடர்பில் உள்ளது.
ஒரு டாலர் என்பது 100 சென்ட்.  (ஒரு சென்ட் என்பது இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்பது போல இருக்கும்).
1/10 = Dime
1/100 = Cent
1/1000 = Mill
ஆயிரத்தில் ஒரு பங்கு மில்.
100ல் ஒரு பங்கு சென்ட் (இந்தியாவில் ஒரு பைசா மாதிரி)
பத்தில் ஒரு பங்கு (10 பைசா மாதிரி) இது ஒரு டிம்.
இந்த அமெரிக்க டாலருக்கு பல மாற்றுப் பெயர்கள் உள்ளூரில் உள்ளது. இந்தியாவில் பணம், துட்டு, காந்திநோட்டு, ரூபாய், காசு, என்பது போல.
அமெரிக்க டாலரின் வேறு பெயர்கள்:
Buck, bill, bean, paper, smacker, dough, green, bread,  bones, bananas, mint, etc.
காசுகளாக ஒரு சென்ட், 5 சென்ட், 10 சென்ட், 25 சென்ட் இவைகள் உள்ளன.
(50 சென்ட், ஒரு டாலர் காசுகள் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை)
டாலர் நோட்டுகளாக 1 டாலர், 5 டாலர், 10 டாலர், 50 டாலர், 100 டாலர் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. (5000, 10,000, 100,000 டாலர் நோட்டுகள் புழக்கத்தில் விடவில்லை).
யுஎஸ் டாலர் பணத்தை பியட் மணி (Fiat Money) என்பார்கள்.
பணத்தில் மொத்தம் மூன்று வகைகள்;
1) Commodity money
2) Representative money
3) Fiat Money
முதல் வகை கமோடிட்டி பணம் என்பது தானியங்களை வைத்து பண்டமாற்று செய்வது. பழைய முறை.
2-வது வகையான ரெப்ரசென்டேடிவ் பணம் என்பது தங்கத்துக்கு/ வெள்ளிக்கு இணையான பேப்பர் சர்டிபிகேட்டுகள் புழக்கத்தில் விடுவது. அதைக் கொடுத்தால் அதற்குறிய தங்கமோ/வெள்ளியோ கிடைக்கும்.
3-வது பியட் பணம் - பேப்பரில் இப்போதுள்ள அரசுகள் அச்சடித்து கொடுத்துள்ள பண நோட்டுகள். இதற்கு உண்மையிலேயே தங்கம்/வெள்ளிக்குறிய மதிப்பு இருக்காது. ஆனாலும் அந்ததந்த நாடுகளின் அரசாங்கம் அந்த நோட்டுக்குறிய மதிப்பை கொடுப்பதாக அதனதன் ரிசர்வ் பாங்க் மூலம் உத்திராவாதம் அளித்திருக்கும். சில நேரங்களில் அதன் மதிப்பு குறையும், அதிகமாகும், ஒரு நிலையில் நிற்காது.

முன்காலத்தில் தங்கத்தை இருப்பு வைத்துக் கொண்டு அதற்கேற்ப பண நோட்டுகளை அச்சடித்து மக்களிடம் அரசுகள் கொடுக்கும். அந்தப் பணத்துக்கு ஈடான தங்கம் கொடுப்பதாக உறுதிமொழி உண்டு. ஆனால் இப்போது எல்லா நாடுகளுமே ஒரளவு தங்கத்தை வைத்துக் கொண்டு அதிக அளவு பண நோட்டுகளை அச்சடித்து வினியோகித்து விட்டன. தங்க இருப்புக்கு அதிகமாக அச்சடித்த துணிந்த நாடுகளில் கடைசியாக அமெரிக்கா 1971-ல் இருந்து அதுவும் மாறிவிட்டது.

உலக மொத்தத்தில் உள்ள தங்கத்தின் இருப்பு 0.84 டிரில்லியன் டாலர். ஆனால் உலக பண நோட்டுகளின் மொத்த மதிப்போ 3.9 டிரில்லியன் டாலர். (அதாவது 5 மடங்கு அதிகம். அதாவது  தங்க இருப்பைக் காட்டிலும் 5 மடங்கு பண நோட்டுக்கள் அதிகமாகவே உலகத்தில் புழக்கத்தில் உள்ளதாம்.)

பொதுவாக தங்கத்துக்கு ஏற்ப பண நோட்டுக்களை வெளியிடுவது அந்தந்த நாடுகளின் ரிசர்வ் பாங்கு அல்லது பெரடல் பாங்குகள். ஆனால் இப்போதெல்லாம் மற்ற பாங்குகள் வேகமாகத் தலையெடுத்துவிட்டன. இவைகள் புழக்கத்தில் கொடுக்கும் கடன்கள் வசூலிக்கும் டெப்பாசிட் இவைகளுக்கு அவ்வளவாக கண்டிப்பான கட்டுப்பாடுகள் இல்லையாம். இவை இஷ்டம்போல பணப் புழக்கத்தை வைத்துள்ளன. அதனால் மக்களுக்கு சிறிது ஆபத்துத்தான். இவ்வாறு ரிஸ்க்கான கடன்கள் கொடுத்துள்ள வகையில் 62 டிரில்லியன் டாலர் உள்ளதாம். இதனால்தான் பணத்தின் உண்மையான மதிப்பை மீறி 'பண வீக்கம்' (Inflation) ஆகி விட்டது. இது அதிகமாக அதிகமாக பணவீக்கம் அதிகமாகும். இப்போது உலகில் எவ்வளவு பணவீக்கத்தில் உள்ளது என்றால் 290 டிரில்லியன் டாலர் அளவுக்கு வீங்கி உள்ளது. (அதாவது ஒரு டிரில்லியனுக்கு குறைவாகவே உலகில் தங்கம் இருப்பு உள்ளது. ஆனால் உலகில், பண நோட்டுக்கள் 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு அச்சடிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் புழக்கத்தில் வங்கிகள் 290 டிரில்லியன் அளவுக்கு பணத்தை புழங்கி வருகிறது.)

வேடிக்கையாக ஒரு கற்பனை செய்தால், இந்த  290 டிரில்லியன் டாலர் பணத்தை கொடுத்து அதனதன் அரசுகளிடம் தங்கத்தைக் கேட்டால் வெறும் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புக்குத்தான் தங்கம் கொடுப்பார்கள். மீதி 289 டிரில்லியன் டாலர் பண மதிப்புக்கு தங்கமே கொடுக்க முடியாது. அதாவது 290 ரூபாயைக் கொடுத்தால் ஒரு ரூபாய்கான தங்கம் திரும்ப வாங்கலாம். அவ்வளவுதான் இன்றைய உலக பணத்தின் மதிப்பு).

உற்பத்திக்கு ஏற்ப அரசுகள் பண நோட்டுகளை அச்சிடலாம். ஆனால் உற்பத்தியை மீறி பண நோட்டுகளை அச்சிடுவது அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடத்தை மேலே மேலே கட்டுவது போல்.

அமெரிக்காவும் தங்கத்துக்கு பதிலாக உற்பத்தியை அடையாளமாக வைத்து 1970க்கு பின்னர் பண நோட்டுகளை அச்சிட ஆரம்பித்தது. பெட்ரோல் எண்ணையை டாலருக்கு விற்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது (இதனால் அமெரிக்கா பெட்ரோல் வாங்க தங்கத்தை விற்கத் தேவையில்லை). எனவே டாலரை அதிகமாக அச்சடித்தது. இப்போதெல்லாம் எல்லா நாடுகளுமே தங்கத்துக்கு நிகரான பண நோட்டுகளை அச்சடிப்பதில்லை, அதற்குப் பதிலாக வெறும் காகித நோட்டுகளை அச்சிடித்து வெளியிட்டு அது கடனாளி போல அந்த பணத்தை புழக்கத்தில் வைத்திருக்கும். உற்பத்தி குறிப்பிடும்படி இல்லாததால் பணநோட்டுகளானது பொதுமக்களின் கைகளுக்கு வரமுடியவில்லை. அது அதிகமாக செல்வந்தர்கள் கைகளிலேயே நின்று விட்டது. பண நோட்டுகள் அதிகமாக உள்ளது, ஆனால் அந்த நாட்டின் உற்பத்தி உண்மையில் மிகக் குறைவாகவே உள்ளது.  உற்பத்தி குறைந்து உள்ளது, ஆனால் அதை உபயோகிக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். எனவே உற்பத்தியான பொருள்களின் பற்றாக்குறையால் விலை ஏறுவது இயல்பு. உதாரணமாக 1970ல் பெட்ரோல் விலை திடீரென ஏறியது. இதனால் வளர்ந்து வரும் நாடுகள் பெட்ரோல் வாங்க முடியாமல் திண்டாடின. அந்த நாட்டு பணநோட்டு அதிகமாக கொடுக்க வேண்டி வந்தது. அதாவது அந்த நாட்டின் பண நோட்டின் மதிப்பு டாலருக்கு நேர் செய்யும் போது குறைந்துவிட்டது.

இந்த மாதிரி நேரங்களில் பண நோட்டுகளுக்கு மரியாதை இல்லாமல் இருக்கும். அப்போது பணத்தை அதிகம் அச்சடித்து வெளியிட வேண்டும், அந்த நேரங்களில் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் விலைகள் பணத்தால் அதிகமாக உயரும். (உண்மை மதிப்பில் உயராது). பின்னர் பெட்ரோல் விலை குறையும்போது ரியல் எஸ்டேட் விலை குறையும். அப்போது பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் விலை சரியும். காரணமே தெரியாது நஷ்டம் வரும்.

அமெரிக்க டாலர் $ என்ற அடையாளத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். அதற்கு அர்த்தம் - 18-ம் நூற்றாண்டில் இதை Ps = Peso என்று குறிப்பிட்டு வந்து பின்னர் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்து தற்போதுள்ள $ சிம்பளை உருவாக்கி உள்ளனர்அமெரிக்கா தனது டாலர் காசுகளை 1792ல் அச்சடித்தது, அப்போது ஒரு டாலரின் மதிப்பு 24 கிராம் கொண்ட சில்வர் என்னும் வெள்ளியின் மதிப்பு. அப்போது 15:1 என்பது சில்வருக்கும் தங்கத்துக்குமான இடைவெளி மதிப்பீடு. அதாவது 15 கிராம் வெள்ளியானது ஒருகிராம் தங்கத்துக்கு நிகரானது.

அமெரிக்காவில் 1862ல் சிவில் வார் என்னும் மக்கள் சண்டை வந்தது. அப்போது பணப் புழக்கத்துக்காக பேப்பரில் பணம் அச்சிடப்பட்டது. அதன்பின் சில்வர், தங்கம் தொடர்பு கைவிடப்பட்டது. வெறும் பேப்பர் பணம் அச்சிடப்பட்டது. செர்சா சூரி என்ற மன்னர் காலத்தில் 1540 ல் சில்வர் காயின் அறிமுகப்படுத்தினார். மொகலாயர் காலத்திலும், பிரிட்டீஸ் காலத்திலும் தொடர்ந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலமான 1770-1832-ல் பேங்குகள் உருவானது. Bank of Hindostan, General Bank of Bengal and Bihar, Bengal Bank.
19 நூற்றாண்டிங் இந்தியப் பணம் வெள்ளிப்பணமாவே இருந்தது. பிரிட்டீஸ் ஆட்சியில் ரூபாயை 16 அணாவாக மாற்றினர்.
 ஒரு அணா = பழைய 4 பைசா.
ஒரு ரூபாய்க்கு= பழைய 64 பைசா அல்லது 192 பைஸ்.
1957ல் தான் 100 புதிய நயா பைசா கொண்டது ஒரு ரூபாய் என மாற்றிவிட்டது இந்திய அரசு (1.4.1957 முதல்). பின்னர் 1.6.1964 முதல் வெறும் பைசா என்ற வார்த்தையை மட்டுமே உபயோகிக்கச் சொன்னது. பழைய நயா பைசா வேண்டாம் என்றது.

முதல் உலகப்போரின்போது சில்வர் பணத்துக்கு தட்டுப்பாடு., எனவே பேப்பர் பணத்தை கொண்டுவந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒருரூபாய், இரண்டரை ரூபாய் பேப்பர் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
1991-ல் இந்திய பொருளாதரத்தில் பின்னடைவு ஏற்பட்டது, 1999ல் வேறு வழியில்லாமல் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டது.
2000-2007 வரை நிலையாக இருந்த்து = ஒரு அமெரிக்க டாலர் = 44.48 இந்திய ரூபாய். இந்தியாவிற்குள் வெளிநாடுகளில் முதலீடு குறைந்தவுடன் ஒரு டாலர் = 68.80 என்ற இந்தியரூபாய் ஆனது.

ரூபா என்பது ரூபம் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாம், உருவமாக செய்த வெள்ளி காசு (Wrought Silver) இதுதான் பணம் என்ற பெயரில் புழங்கியது.

தங்கக்காசு = சொர்ணரூப, copper coin = தாமர ரூப, lead coin = சிசரூப, ரூப என்றால் = shape, வடிவம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் rupyarupa ருப்பியரூப என்று உள்ளது. ருப்பிய = wrought Silver வடிவமைக்கப்பட்ட வெள்ளி, ரூப = உருவம் form.

Money value in 1956
UK Pound                = Rs.13.36
US Dollar                 = Rs.4.81
Australian Pound   = Rs.10.71
Burma Kyat           = Rs.1.00
Canada Dollar      = Rs.4.91
France Franc       = Rs.0.0137
Germany Mark     = Rs.1.14
HongKong Dollar = Rs.0.84
Italy Lira              = Rs.0.008
Malaya Dollar      = Rs.1.57
NewZeland Pound = Rs.13.36
Pakistan Rupiya     = Rs.1.00
SouthAfrica Pound  = Rs.13.36
Sweden Croner       = Rs.0.93
Switzerland Franc   = Rs.1.11

Holocaust

பெரும் இன அழிப்பு   (Holocaust)

United Nations இந்த நினைவு தினத்தை ஜனவரி 27ல் நினைவு கூர்கிறது. இது நடந்தது இரண்டாம் உலகப்போர் நிகழ்வு காலமான 1940ல். அப்போது 1940 மே,10ல் நெதர்லாந்தை ஜெர்மனி படையெடுத்து வந்து கைப்பற்றியது. ஜெர்மனிப் படைகள் நெதர்லாந்து மக்களை விரட்டி விட்டனர். மற்ற ஜரோப்பிய நாடுகளைக் காட்டிலும் நெதர்லாந்தில்தான் பாதிப்பு  அதிகமாக இருந்தது. 20% டச்சு யூத (Dutch Jews)மக்களே பிழைத்தார்கள். 105,000 டச்சுயூதர்கள் கொல்லப் பட்டனர். 20,000 பேர்  ஓடி காடுகளில் ஒளிந்து கொண்டனர். கனடா படைகள் வந்துதான் நெதர்லாந்தை மீட்டனர். அதில் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் ஏராளம். இவர்களை நினைவுகூறவே holocaust தினம் நினைவு கூறப்படுகிறது.

நாடித் துடிப்பு

நாடி
முன்னோர்கள் பயன்படுத்திய முறை

முன்கையில் மணிக்கட்டுக்கு கீழே இரத்தக் குழாயை நமது 3 விரல்களைக் கொண்டு ரத்த துடிப்பை வைத்து நாடியை அறிவது. 

அல்லோபதியில் 'இருதய நாடி' மட்டுமே பார்க்கப் படுகிறது. சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இவற்றில் 'வாத, பித்த, கப நாடிகள்' ஆகிய மூன்று பார்க்கப்படுகிறது.

உடலின் உயிர் சக்தி எவ்வளவு என்று நாடியைக் கொண்டு கணிக்கலாம். சித்த வைத்தியத்தில் வாதம், பித்தம், கபம், என்பர். சீனர்கள் இதை சுன், குவான், சி என்பர். மணிக்கட்டை ஒட்டி ஆட்காட்டி விரலும், அதையடுத்த நடுவிரலும், அதையடுத்து மோதிர விரலும் வைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரல் (சுன்) = வாத நாடி
நடுவிரல் (குவான்) = பித்த நாடி
மோதிரவிரல் (சி) = சிலேத்தும் அல்லது கப நாடி.

கையினால் மெதுவாக நாடியைத் தொடும்போது நாடித்தன்மை வேகமாகத் துடித்தால் அது கபம் சம்மந்தப்பட்ட நோய் (சி-நோய்) என்பர்.

வயதுக்கு ஏற்ற நாடித்துடிப்பு 

கருவில் உள்ள குழந்தைக்கு  = 150-140
பிறந்த குழந்தைக்கு                    = 140-130
வருடத்துக்கு பத்து துடிப்பு குறையும்.
3 வருடக் குழந்தைக்கு             = 108-90
14 முதல் 21 வயதுவரை            = 88 -80
21 முதல் 60 வயதுவரை            = 85-80
60 வயதுக்கு மேல்                        = 80-67
(உடலில் ஒரு டிகிரி வெப்பம் கூடினால் 10 துடிப்பு கூடும்).

அருணகிரிநாதர் திருப்புகழ்

அருணகிரிநாதர் திருப்புகழ்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனை கதிர்காமப் பெருமானே.


லக்ஷ்மி மந்திரம்


லக்ஷ்மி மந்திரம்

அஸ்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்.
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர்ஜூஷதாம்.
காம் சோஸ்மீதாம் ஹிரண்ய ப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந் தீம். பத்மேஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹொ பஹ்வயேஸ்ரியம். ------ ஸ்ரீசூக்தம்.

(முன்னால் குதிரைகளும் நடுவில் தேர்களும் புடைசூழ வருபவளும் யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகத் கொண்டவளுமான ஸ்ரீதேவியை (இலக்குமி) அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய். புன்முறுவல் தவழ்பவளும் பொற்கோட்டையில் உறைபவளும் கருணை நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும் மகிழ்ச்சி நிறைந்தவளும் மகிழ்ச்சியைத் தருபவளும் தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்தத் திருமகளை இங்கே எழுந்தருமாறு பிராத்திக்கிறேன்.)

கணபதி மந்த்ரம்



கணபதி மந்த்ரம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவீம் கவீனா முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத ஆ ந: ஸ்ரூண்வன்னூதிபீஸ்ஸீத ஸாதனம். -----யஜூர் வேதம்.

(தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ்படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிராத்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.)

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்:

ஓம் பூர்புவஸ்ஸூவஹ.
தத்ஸவீதுர்வரேண்யம்.
பர்கோ தேவஸ்ய தீமஹி.
தியோ யோ ந ப்ரசோதயாத்.-------ரிக் வேதம்.

(பிரணவ மந்திர வடிவாகவும் மூவுலகங்களையும் குறிக்கும் மூன்று வியாகிருதிகளாகவும் விளங்குகின்ற எவர் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் ஒளி வடிவைத் தியானிப்போம்.)