Friday, November 20, 2020

இந்து பெண்களுக்கு சொத்துரிமை

 இந்து பெண்களுக்கு சொத்துரிமை 

இந்து பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்து ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு. இந்து பெண்கள், அவர்களின் இந்து ஆண்களை நம்பி வாழ வேண்டி இருந்தது. தனியே அவர்களுக்கு சொத்தில் வாரிசு உரிமையே கிடையாது என்ற நிலையே இருந்து வந்தது. இந்து பெண்கள் சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது சீதனப் பணத்தில் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் அவற்றை விற்கும் போது, அவள் கணவனின் சம்மதம் தேவைப் பட்டது. 

இந்து ஆண்கள் கோபார்சர்கள் என்ற இந்து கூட்டுக் குடும்ப முறையில் வாழ்ந்து வந்தார்கள். ஒரு இந்து ஆணுக்கு அவரும், அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும் ஆக நான்கு தலைமுறை ஆண்களே இந்து கோபார்சனர்கள் என்று இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. இவர்கள் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தை கூட்டாக அனுபவித்து வருவர். யாருக்கு எவ்வளவு பங்கு என்று கூற முடியாது. இந்த குடும்பத்தில் ஒரு ஆண் பிறந்தால் அவருக்கும் பங்கு வரும். ஒரு ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு மற்ற ஆண்களுக்கு சேர்ந்து விடும். இவர்களுக்குள் பாகம் பிரித்துக் கொண்டால், அப்போது, உயிருடன் இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் (கோபார்சனர்கள் மட்டும்) தலைக்கு ஒரு பங்கு என்று பிரித்துக் கொள்வார்கள். தந்தை, மகன் என்ற வித்தியாசம் இருக்காது. தலைக்கு ஒரு பங்கு என்ற கணக்குத் தான் இருக்கும். 

இந்து பெண்களுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க மாட்டார்கள். அந்த பெண்களின் வாழ்நாள் வரை அவர்களை பாதுகாக்க வேண்டிய இந்து கோபார்சனரி ஆண்களை கடமை. இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக இந்து விதவை வாரிசு உரிமை சட்டத்தை 1937 ல் இந்திய பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. அதில், ஒரு இந்து கோபார்சனர் இறந்து விட்டால், அவருக்கு வரவேண்டிய பங்கை, அவரின் விதவை மனைவி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையும் அவள், தன் வாழ்நாள் வரை மட்டுமே அனுபவித்து வர முடியும். அதை விற்பனை செய்ய முடியாது. அவளின் வாழ்நாளுக்குப் பின்னர், அந்த பங்கானது மற்ற கோபார்சனர்களுக்கே திரும்ப போய் சேர்ந்து விடும் என்று நிலை இருந்தது.

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த இந்து சாஸ்திர சட்டத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து, புதிய சட்டத்தை கொண்டு வந்தனர். அதன் பெயர் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956. இதன்படி, உயிருடன் இருக்கும் கோபார்சனரி இந்து ஆண்கள் பங்கு பெறுவர் என்ற நிலையை மாற்றி, புதிதாக, இறந்த கோபார்சனரி ஆணின் பங்கை அவரின் வாரிசுகள் வாரிசு முறைப்படி பெறுவர் என்று மாற்றி அமைத்தது.

இந்து ஆண்களின் தனிச் சொத்தில் வாரிசு உரிமை (பிரிவு 8):

1956 புதிய இந்து வாரிசுரிமை சட்டத்தில், பிரிவு 8-ல் இந்து ஆண்களின் தனிச் சொத்துக்களை எப்படி பங்கு பிரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. அதாவது, ஒரு இந்து ஆண், ஒரு சொத்தை விட்டுவிட்டு (உயில் எழுதாமல்) இறந்து விட்டால், அவரின் சொத்தானது அவரின் முதல் நிலை வாரிசுகளான அவரின் தாய், மனைவி (பல மனைவிகள் இருந்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மனைவி என்ற கணக்கில் ஒரு பங்கு), மகன்கள், மகள்கள், இறந்த மகன் அல்லது மகளின் பிள்ளைகள், இறந்த மகனின் விதவை மனைவி, இறந்த மகன் வழிப் பேரனின் பிள்ளைகள் இவர்களுக்கு அந்த சொத்து போய் சேரும். இறந்தவரின் தாய்க்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, ஒவ்வொரு மகனுக்கும் தலைக்கு ஒரு பங்கு, ஒவ்வொரு மகளுக்கும் தலைக்கு ஒரு பங்கு, இறந்த மகனின் அல்லது மகளின் பிள்ளைகளுக்கு இறந்த மகனின் அல்லது மகளின் கணக்கில் ஒரு பங்கு, இப்படி பங்கு போகும்.

ஒருவேளை, இறந்தவருக்கு மேற்சொன்ன முதல் நிலை வாரிசுகள் யாருமே இல்லாமல் போய்விட்டால், இறந்தவரின் தந்தை, அந்த முழுச் சொத்தையும் அடைந்து கொள்வார்.

ஒருவேளை தந்தையும் இல்லாமல் போய் விட்டால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது உயிருடன் இருக்கும் சகோதரன், சகோதரி) அவரின் சொத்துக்களை தலைக்கு ஒரு பங்கு என்று எடுத்துக் கொள்வர். 

ஒருவேளை சகோதரனும், சகோதரியும் இல்லாமல் போய்விட்டால், இறந்தவரின் இறந்த சகோதரர், இறந்த சகோதரி இவர்களின் பிள்ளைகள் அந்த சொத்தை, அவர்களின் தந்தை, அல்லது தாய் கணக்கில் ஒரு பங்கு என்ற கணக்கில் எடுத்துக் கொள்வர்.

இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் வாரிசு உரிமை (பிரிவு 6):

1956 க்கு முன்பு வரை பழைய இந்து சாஸ்திர சட்டமே இருந்து வந்தது. அதில் இந்து ஆண்களுக்கு (குறிப்பாக, இந்து ஆண், அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன்) இவர்களுக்கு மட்டுமே பூர்வீகச் சொத்தில் பங்கு இருந்து வந்தது. பூர்வீகச் சொத்து என்பது, ஒரு இந்து ஆணுக்கு அவரின் தந்தை, பாட்டன், கொள்ளுப் பாட்டன் மூலம் வாரிசு முறையில் கிடைத்த சொத்துக்களை பூர்வீகச் சொத்து அல்லது கோபார்சனரி சொத்து, அல்லது மூதாதையர் சொத்து என்று சொல்வர். இப்படி ஒரு இந்து ஆணுக்கு கிடைத்த பூர்வீகச் சொத்தை, அவரும் அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும், அவர்களின் பிறப்பால் உரிமை பெற்று கூட்டாக அனுபவித்து வருவர். இந்த நான்கு தலைமுறையையும் (ஒரு இந்து ஆணும், அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும்) கோபார்சனர்கள் என்று சொல்வர். அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், அந்த ஆண்களை நம்பி வாழ்வர். இந்த ஆண்களும் பெண்களும் அடங்கியதே இந்து கூட்டுக்குடும்பம். அதாவது நான்கு தலைமுறை ஆண்களை கோபார்சனர்கள் என்றும், அந்த ஆண்களும், அவர்களைச் சேர்ந்த பெண்களையும் உள்ளடக்கிய பெரிய குடும்பத்தை கூட்டுக் குடும்பம் என்பர். ஆக, ஆண்கள் மட்டும் இருந்தால் கோபார்சனரி குடும்பம் என்றும், ஆண்களும் பெண்களும் சேர்ந்து இருந்தால் கூட்டுக் குடும்பம் என்றும் இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. இந்து கூட்டுக் குடும்ப பெண்களுக்கு இந்த கூட்டுக் குடும்ப சொத்தில் அல்லது கோபார்சனரி சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் கிடையாது. அந்த பெண்களின் வாழ்நாள் வரை ஜீவனாம்ச உரிமை மட்டுமே உண்டு. 

1937-ல் இந்து விதவைகளுக்கு அவர்களின் கணவரின் பூர்வீகச் சொத்தில் பங்கு:

1937 க்கு முன்பு வரை, இந்து கோபார்சனரி ஆண்களின் விதவை மனைவிகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. 1937-ல் அதை மாற்றி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு அவரின் விதவை மனைவி அடைந்து, அவளின் வாழ்நாள் வரை அவளின் ஜீவனாம்சத்துக்காக அதை அனுபவித்து வரலாம் என்றும், அந்த சொத்தில் அவளுக்கு முழு உரிமை (கிரயம் செய்யும் உரிமை) இல்லை என்றும், அவள் வாழ்நாளுக்குப் பின்னர் அந்த பங்கு, அவள் கணவனின் மற்ற கோபார்சனர்களுக்கே திரும்ப வந்து சேர்ந்து விடும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது.

1956-ல் இந்து பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் முழு உரிமை வழங்கியது:

1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பிரிவு 14-(1)ல் இந்து பெண்களுக்கு, இவ்வாறு ஜீவனாம்ச உரிமை மூலம் இறந்த கணவரின் பங்கு கிடைத்திருந்தால், அதை அவள் ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வந்தால், 1956-க்கு பின்னர் அவள் அந்த சொத்தை தன் முழு உரிமை உடைய சொத்தாக கருதி (விற்பனை செய்யும் அதிகாரத்துடன்) அனுபவித்துக் கொள்ளலாம் என்று இந்த 1956 சட்டத்தில் புதிய உரிமையை வழங்கியது. 

1956  சட்டத்தில் இந்து பெண்களின் தனிச் சொத்துரிமை:

இந்து பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு தனியே சொத்தில் வாரிசுரிமை கொடுக்கப்படவில்லை. அவர்கள் தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். தனிச் சொத்தை வாங்கி அவர்கள் முழு உரிமையுடன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் வாழும் குடும்பத்தில், பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் இல்லை என்ற நிலையே இருந்து வந்தது. பின்னர், 1937-ல் வந்த சட்டத்தில் பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு இறந்த அவள் கணவனின் பங்கை அவள் “வாழ்நாள் உரிமை” கொண்டாடலாம் என்று சட்டம் வந்தது. பின்னர் வந்த 1956 சட்டத்தில், அத்தகைய வாழ்நாள் உரிமையானது அவளுக்கு முழு உரிமை ஆகி விடும் என்று சட்டம் மாறியது.

இந்து பெண்களுக்கு மூன்று வகைகளில் சொத்துக்கள் வந்து சேரும். (1) அவளே தனியே சம்பாதித்த அவளின் தனிச் சொத்து. அல்லது அவளுக்கு சீதனமாக கிடைத்த சொத்து. இது அவளின் தனிச் சொத்தாகும். (2) அவளுக்கு அவளின் கணவர் வழியில் வாரிசுரிமையில் கிடைத்து சொத்து. அதாவது அவளின் கணவனின் தந்தை சொத்தை வைத்திருப்பார். அவளின் கணவர் இறந்து விடுவார். தன் மாமனார் இறந்தவுடன் அவரின் மகன் என்ற முறையில் அவளின் கணவனுக்கு ஒரு பங்கு உண்டு. அவள் கணவர் இல்லாததால் அந்த பங்கு அவளுக்கு கிடைக்கும். இதை அவள் கணவர் வழியில் கிடைத்த சொத்து என்பர். (3) அவளுக்கு அவளின் தந்தை வழியில் பங்கு கிடைத்திருக்கும். அதாவது, அவளின் தந்தை இறந்து விடுவார். அவரின் தனிச் சொத்தில், மகள் என்ற முறையில் அவளுக்கும் ஒரு பங்கு உண்டு. இதை அவள் தந்தை வழியில் கிடைத்த பங்கு என்று சொல்வர். அவளின் தாய் வழியிலும் இவ்வாறு பங்கு கிடைத்திருக்கும். அதையும் அவள் தந்தை வழியில் கிடைத்த பங்கு என்று சட்டம் சொல்கிறது. 

ஆக ஒரு இந்து பெண்ணுக்கு மேற்சொன்ன மூன்று வழிகளில் சொத்து கிடைத்து அவள் அனுபவித்து வருவாள். அவள் இறந்து விட்டால், அவளின் சொத்துக்கள் எப்படி வாரிசு முறைப்படி சேர வேண்டும் என்று இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 15-ல் சொல்லி உள்ளது. 

அவளுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தால், அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் எந்தச் சொத்தாக இருந்தாலும் (மேற்சொன்ன மூன்று வழிகளில் கிடைத்த சொத்துக்கள் அனைத்தும்), அவளின் கணவர், மற்றும் குழந்தைகளுக்கு தலைக்கு ஒரு பங்கு என்று விகிதத்தில் போய் சேரும். 

இந்து பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால்:

ஆனால், அவளுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால், அவளின் சொத்துக்கள் யாருக்கு போகும் என்பதில் சில விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அவளின் தனிச் சொத்துகள், மற்றும் அவளின் கணவர் வழியில் கிடைத்த சொத்துக்கள், அவளின் கணவர் உயிருடன் இருந்தால் கணவருக்கும், கணவர் உயிருடன் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்கும் சேரும். (கணவரின் வாரிசுகள் என்பது, அவள் சொத்து, கணவர் சொத்தாக ஆகி விடும். கணவரின் வாரிசுகள் என்பது, அவரின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, அவர்களின் பிள்ளைகள் போன்றார்). 

அவளுக்கு அவளின் தந்தை, தாய் வழியில் கிடைத்த சொத்துக்களாக இருந்தால், அவை அவளின் கணவருக்கோ, கணவரின் வாரிசுகளுக்கோ சென்று சேராது. மாறாக, அவளின் தந்தை இருந்தால் அவருக்கும், அவளின் தந்தை காலமாகி விட்டால், அவரின் வாரிசுகளுக்கும் போய் சேரும். அதாவது, ஒரு இந்து பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், அவளுக்கு அவள் தந்தை தாய் மூலம் அந்த சொத்து கிடைத்திருந்தால், அவள் காலத்துக்குப் பின்னர், அந்த சொத்து அவளின் தந்தை வழி ஆட்களுக்கே திரும்ப போய் சேர்ந்து விடும். கணவர் வழி ஆட்களுக்குப் போகாது.

1956 சட்டத்தில் பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு:

1956 சட்டத்தில், பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு ஒரு இந்து ஆண் (கோபார்சனர்) இறந்து விட்டால், அவரின் பங்கானது, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது. (பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, அந்த பங்கு மற்ற கோபார்சனர்களுக்கே போய் விடும்). மாறாக, இறந்த இந்து ஆணின், வாரிசுகளான, அவரின் மனைவி, மகன்கள், மகள்கள், அவர்களில் யாராவது இறந்து விட்டால், அவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கே அந்த பங்கு கிடைக்கும் என்று 1956 இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.

1989 தமிழ்நாடு இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் பிரிவு 29ஏ:

தமிழ்நாடு, ஒரு திருத்தல் சட்டத்தை 1989-ல் கொண்டு வருகிறது. அதன்படி, பூர்வீகச் சொத்திலும் மகள்களுக்கும் (மகன்களைப் போலவே) சரி சம பங்கு உண்டு என்று இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ஐ திருத்துகிறது. இதே போன்று ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை ஒட்டியே தமிழ்நாட்டிலும் இதை திருத்தம் செய்யப்பட்டது. இது 1989 மார்ச் 25 தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. 

இந்த தமிழ்நாடு திருத்தல் சட்டத்தின்படி, பூர்வீகச் சொத்தில் ஆண்களுக்கு (கோபார்சனர்களுக்கு) மட்டுமே பங்கு உண்டு என்ற நிலையை மாற்றி, மகன்களைப் போலவே மகள்களுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, மகளுக்கும் சம உரிமை அல்லது பங்கு கிடைத்தது. ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. திருமணம் ஆகி வேறு வீட்டுக்குச் சென்ற மகள், இந்தக் குடும்பத்தில் கோபார்சனர் (உறுப்பினர்) என்று எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இந்த சட்டம் வந்த தேதியான 25-3-1989 தேதிக்கு முன்னர் திருமணம் ஆகி சென்ற மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு இல்லை என்றும், அப்போது திருமணம் ஆகாமல் இருக்கிற மகள்களுக்கு மட்டுமே பங்கு உண்டு என்றும், அந்த சட்டம் வந்த பின்னர் திருமணம் ஆகிச் சென்ற மகளுக்கும் பங்கு உண்டு என்றும் விளக்கம் சொல்லப்பட்டது. 

2015 இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் (மத்திய அரசு):

தென்னிந்திய மாநிலங்களில் எல்லாம் இந்த இந்து வாரிசு சட்டத்தை திருத்தி, மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று (திருமணம் ஆகாத மகளுக்கு) சொல்லி விட்டார்கள். எனவே மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த திருத்தல் சட்டத்தை கொண்டு வரலாம் என்று நினைத்து, 2015-ல் ஒரு திருத்தல் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு இந்து பெண், திருமணம் ஆகி இருந்தாலும், திருமணம் ஆகாமல் இருந்தாலும், (எப்படி இருந்தாலும், அவள் மகள் என்று முறையில்) அவளுக்கு பூர்வீக சொத்தில், ஒரு மகனைப் போலவே, பங்கு உண்டு என்று அந்த திருத்தல் சட்டம் சொல்கிறது.

அதிலும், ஒரு சில குழப்பம் வருகிறது. எப்போதிலிருந்து மகளுக்கு பங்கு கொடுக்கலாம் என்ற கேள்வி வருகிறது. 1956 இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 6-ல் ஒரு தந்தை இறந்து விட்டால், அப்போதே இந்த கூட்டுக் குடும்ப பங்கு சட்டப்படி பிரிந்து விடும். உண்மையில் பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, கற்பனையாக யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்து, அதில் இறந்த தந்தைக்கு ஒரு பங்கு ஒதுக்கி, அந்த பங்கை அவரின் வாரிசுகளுக்கு வாரிசு முறைப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. 

எனவே அப்படி கற்பனை பாகப்பிரிவினை நடந்து, அதில் தந்தையின் பங்கை பிரித்துக் கொண்டால், பூர்வீகச் சொத்து ஏற்கனவே பாகம் பிரிந்து சொத்தாகவே ஆகி விடுகிறது. இதில் எப்படி மகளுக்கு ஒரு பங்கு கொடுக்க முடியும். பாகம் நடந்த முடிந்த சொத்தில், திரும்பவும் பாகம் பிரிக்க முடியுமா? முடியாது என்ற கருதி, ஏற்கனவே இவ்வாறு பாகம் பிரிந்து கொண்டது என்றால் அதில் மகளுக்கு பங்கு இல்லை. மாறாக, தந்தை, இந்த 2005 சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதாவது, 20-12-2004 க்கு பின்னர் தந்தை இறந்த விட்டால், அந்த பூர்வீகச் சொத்தில், மகளுக்கும் மகனைப் போலவே பங்கு கொடுக்கலாம் என்று விளக்கம் சொல்லப்பட்டது. 

குழப்பம்: ஆனாலும், இந்த 2005 திருத்தல் சட்டத்தைப் பொறுத்து, இந்தியாவில் உள்ள பல ஐகோர்ட்டுகள், பலவாறு தீர்ப்புகளைச் சொல்லி விட்டது. 1956 சட்டப்படி, 1956-க்கு பிறகு பிறந்த மகள்களுக்கு பங்கு என்றும்; 2005 சட்டம் வந்த பின்னர் பிறந்த மகளுக்கு மட்டுமே பங்கு என்றும்; தந்தை உயிருடன் இருக்கும் போது (20-12-2004-ல்) மகளுக்கு பங்கு என்றும்; பல குழப்பமான தீர்ப்புகள் வந்து விட்டன. 

பொதுவாக ஒரு சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அந்த சட்டம் வந்த தேதியில் இருந்து தான் அது நடைமுறைக்கு வரும். சில நேரங்களில், அது முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாக குறிப்பிட்டு அந்த சட்டத்தில் சொல்லி இருந்தால், அப்படி முன் தேதியில் இருந்தே அமலுக்கு வரும். கிரிமினல் சட்டங்கள் அப்படியில்லை. சட்டம் வந்த தேதியில் இருந்து தான் அமலுக்கு வரவேண்டும். ஏனென்றால், நேற்று வரை, நேற்று வரை தலைப்பாகை கட்டிக் கொள்வது குற்றம் இல்லை என்று இருந்தால், இன்று தலைப்பாகை கட்டிக் கொள்வது குற்றம் என்று சட்டம் வந்தால், அந்த புது சட்டத்தைக் கொண்டு, நேற்று தலைப்பாகை கட்டி இருந்தவரை தண்டிக்க முடியாது. ஆனால் சிவில் சட்டங்களில் அப்படி முன் தேதியிட்டு அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரலாம். 

அப்படிப் பார்த்தால், 2005 இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் (மத்திய அரசு), எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதாவது, எந்த தேதியில் இருந்து மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உரிமை கேட்க முடியும்? 

இந்த 2005 சட்டம் வந்ததே மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். எனவே அதில் சட்ட சிக்கல்களை உண்டாக்குவது நியாமில்லை. 20-12-2004 க்கு பின்னர் தந்தை இறந்த பூர்வீகச் சொத்துக்களில்தான் மகளுக்கு பங்கு உண்டு என்பது நியாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்புச் சொல்லி உள்ளது. அதன்படி தந்தை உயிருடன் இருந்தாலும், இறந்து விட்டாலும், கற்பனை பாகப்பிரிவினை நடந்து விட்டது என்றாலும், எப்படி இருந்த போதிலும், பூர்வீகச் சொத்து இருந்தால், அதில் மகளுக்கு ஒரு பங்கு உண்டு என்று தீர்ப்பு  கூறியது. இது ஒரு வரலாற்றுத் தீர்ப்பு என்றும் சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தீர்ப்பு:

Vineeta Sharma v. Rakesh Sharma and ors. Civil Appeal No.32601 of 2018.

இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட், 11-08-2020-ல் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பைக் கொடுத்தது. 

“Irrespective of a coparcener father being alive or not on or before the Hindu Succession (Amendment) Act 2005, a daughter would be entitled to a share in coparcenary property in the same manner as a son simply by virtue of - (i) her birth, and (ii) her being alive as on the date of coming into force of the 2005 Amendment Act.

இந்த 2005 திருத்தல் சட்டம் 9-9-2005 முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும், இந்த திருத்தல் சட்டத்தில் சொல்லியுள்ள “மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு” என்பது முன்நோக்கி (Retroactive) உரிமை வழங்குகிறது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது.

அதாவது, இந்த சட்டத்தின் புதிய திருத்தல் சட்டப் பிரிவு 6-ன் படி, 20-12-2004 முன்னர் பாகம் நடந்து முடிந்த பூர்வீகச் சொத்துக்கள் தவிர, மற்ற பூர்வீகச் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்பது அந்த தீர்ப்பின் முடிவு. முன்னர் நடந்த பாகப்பிரிவினை என்பது பாகப் பத்திரம் எழுதி அதை பதிவு செய்து இருக்க வேண்டும். கற்பனை பாகப்பிரிவினை நடந்தால் போதாது. 

எனவே ஏற்கனவே (20-12-2014-க்கு முன்னர்) நடந்த பாகப்பிரிவினை சொத்துக்களைத் தவிர, இப்போது இருக்கும் பூர்வீகச் சொத்தில் மகளுக்கும் சம பங்கு என்று முடிவானது. 2005 சட்டம் வந்த பின்னர்தான் மகளுக்கு பங்கு என்று இல்லை. இந்த 2005 சட்டம் வந்ததால், சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பாகப்பிரிவினை ஆகாமல் இருக்கும் பூர்வீகச் சொத்துக்களில், மகளுக்கும் பங்கு உண்டு என்றுதான் இந்த தீர்ப்பு சொல்கிறது. எனவே பழைய பூர்வீகச் சொத்துக்கள், இதுவரை பாகம் ஆகாமல் இருந்தால், அதில் மகள் பங்கு கேட்கலாம் என்பதே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு.

**





Wednesday, November 18, 2020

உயிலை புரபேட் செய்வது

 உயிலை புரபேட் செய்வது

உயிலை புரபேட் செய்ய வேண்டுமானால், அந்த உயில் சென்னையில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். அல்லது அது சென்னையில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று இந்தியன் சக்சசன் சட்டம் 1925-ல் பிரிவு 57-ல் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் சென்னை சொத்துக்களைத் தவிர வேறு இடத்தில் இருக்கும் சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதினால், அதை புரபேட் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையா? 

இந்தியன் சக்சஷன் சட்டம் 1925ன் பிரிவு 265ன்படி உயிலைப் புரபேட் செய்வதற்கு, ஐகோர்ட், அதன் மாவட்ட கோர்ட் நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம், அந்த அதிகாரத்தை அதன் கீ்ழ் இயங்கும் சப்கோர்ட்டுக்கு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே சென்னை ஐகோர்ட், 1939-ல் இந்த அதிகாரத்தை ஒரு நோட்டிபிகேஷன் மூலம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்திய சக்சஷன் சட்டம் 1925ன் பிரிவு 265(1)ன்படி இப்படியான ஒரு நோட்டிபிகேஷனை, அதாவது மாவட்ட கோர்ட்டுக்கு கொடுத்த அதிகாரத்தை  சப்கோர்ட்டுக்கு மாற்றிக் கொடுக்க முடியாது என்று தெரிகிறது. 

எனவே சப்கோர்ட், உயிலை புரபேட் செய்தது, அந்த கோர்ட் தன் அதிகாரத்தை மீறிய தீர்ப்பு என்று பிரான்சிஸ் வழக்கில் சொல்லப்பட்டுள்ளது. PJ Francis v. PJ Verghese and ors, 1956-2 MLJ 288.

ஆனால் மற்றொரு வழக்கான கருத்திரும கவுண்டன் வழக்கில் (P.O.Karthiruma Goundan v. Rangammal and anr, 1932-62 MLJ 622) ஒரு சப் கோர்ட்டில் இந்தியன் சக்சஷன் சட்டம் 1925ன் பிரிவு 192-ல் ஒரு புரபேட் மனு வருகிறது. அதை அவர் தனக்கு அதை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று தள்ளி விட்டார். ஆனால், சென்னை சிவில் கோர்ட் சட்டத்தின் பிரிவு 29-ன்படி சென்னை ஐகோர்ட்டின் நோட்டிபிகேஷன் இத்தகைய அதிகாரத்தை அளித்துள்ளது என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் ஐகோர்ட் தனது தீர்ப்பில் சப் கோர்ட்டுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வருகிறது.

மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளுமே முரண்பாடாக உள்ளதால், சென்னை ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் விசாரனைக்கு ஒரு வழக்கு வருகிறது. அது R.Rama Subbarayalu Reddiar v. Rengammal, 1962-2 MLJ 318. அதில் ஐகோர்ட் நீதிபதி எஸ்.ராமசந்திர ஐயர் தனது தீர்ப்பாக கீழ்கண்டவாறு சொல்லியுள்ளார். 

“சுப்பராய ரெட்டியார் என்பவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு 1957ல் இறக்கிறார். அதில் எக்சிகியூட்டராக நியமிக்கப்பட்ட (இந்த வழக்கில் மேல்முறையீட்டாளர்) சுப்பராயலு ரெட்டியார், திருநெல்வேலி சப் கோர்ட்டில் இந்த உயிலை புரபேட் செய்யும்படி மனுப் போடுகிறார். உயில் எழுதி வைத்தவரின் மகள் இதை ஆட்சேபம் செய்கிறாள். இந்த கோர்ட்டுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என்பது அவளது வாதம். 

இரண்டு நோட்டிபிகேஷன் உள்ளது. அதை சென்னை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது. இந்தியன் சக்சஷன் சட்டம் 1925ன் பிரிவு 265ன்படி எல்லா சப் கோர்ட்டுகளுமே இந்த அதிகாரத்தைக் கொண்டவை என்று சொல்லப் பட்டுள்ளது. (1) All Subordinate Judges in the Madras Province have been appointed as ex officio District Delegates under that enactment within the local limits of their respective jurisdiction. (2) By virtue of another notification of the High Court made under Sec.29(1) of the Madras Civil Court Act, 1873, all Subordinate Judges in the Madras Province have been authorised to take cognizance of any proceedings under the Indian Succession Act 1925, which cannot be disposed of by the District Delegates. (Vide Civil Rules of Practice, Vol 1 page 275 where the two notifications are set out).

District Delegate under the provisions of the Indian Succession Act, will have jurisdiction to grant probate of a Will or letter of administration only (1) if the deceased had at the time of his death a fixed place of residence within his jurisdiction; and (2) in non-contentious cases. 

The second of the two notifications referred to above issued under Sec.29(1) of the Madras Civil Courts Act, will, however, authorise a Subordinate Judge to deal with other cases as well, eg. non-contentious matters. 

In Francis case (referred above), Govinda Menon and Basheer Ahmed Sayed JJ, held that as under SEc.265 of the Indian Succession Act, a District Delegate can take cognizance of only non-contentious proceedings, the latter of the two notifications which invested a Subordinate Judge within a jurisdiction over contentious proceedings as well, would be invalid and that a Subordinate Judge would, therefore, have no power but to return the application for probate or letters of administration which turned out to be contentious for presentation to the District Judge. 

Reilly and Anatakrishnan Iyer JJ observed that Sec.29 of the Madras Civil Court Act would extend the powers of the Subordinate Judge over the whole field of the former Act. 

The normal rule as to the precedents is, that subordinate Courts are bound in the absence of any decision of the Supreme Court, to follow the decisions of the High Court which they are subordinate.

However, where there is a conflict between two decisions of the High Court, the rule to be adopted is as follows:

Where the conflict is between the judgment of a single Judge and a Bench or between a Bench and a larger Bench, the decision of the Bench or the larger Bench as the case may be, will have to be followed.

But where the conflict is between two decisions both pronounced by a Bench consisting of the same number of Judges, and the subordinate Court after a careful examination of the decision came to the conclusion that both of them directly apply to the case before it, it will then be at liberty to follow that decision which seems to it more correct, whether such decision be the later or the earlier one. To enable the subordinate Court to do so, the two apparently conflicting decisions must directly relate to and expressly decide the question that arises before the Court; otherwise a subordinate Court should follow that ruling which specifically deals with the point. It will not be open to it for example to follow the other decision which only impliedly or indirectly or by way of mer observation gave expression to a contrary view. 

பிரான்சிஸ் வழக்கின் தீர்ப்பு சரிதானா? இந்திய சக்சஷன் சட்டம் 1925 என்பது அதற்கு முன்னர் இருந்த பல சட்டங்களை ரத்து செய்து புதிதாக இணைத்து கொண்டு வரப்பட்ட சட்டமாகும் இது இறந்தவர்களின் சொத்துக்களில் வாரிசுரிமை கோருவதைப் பற்றி கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதில் சில பாகங்கள், ஒரு குறிப்பிட்டவர்களின் சொத்துக்களை அதாவது சென்னை மாகாணத்தின் சென்னை மாநகரத்தில் உள்ள சொத்துக்களைப் பற்றி சொல்லி உள்ளது. பாகம் 9, அத்தியாயம் 6-ல் புரபேட் பற்றிச் சொல்லி உள்ளது. பிரிவு 264ல் மாவட்ட நீதிபதிக்கு இத்தகைய அதிகாரத்தைப் பற்றி சொல்லி உள்ளது. பிரிவு 265ல், சென்னை ஐகோர்ட், இந்த அதிகாரத்தை மாவட்ட டெலிகேட் நீதிபதிகளுக்கு வழங்கி உள்ளது. அதுவும் எதிராளி இல்லாத புரபேட் வழக்குகளுக்கு இது செல்லும். The distinction between the powers of a District Judge and District Delegate is that while the former can grant a probate or letters of administration where the deceased at the time of his death had a fixed abode or where any property, movable or immovable, is alone situate within his jurisdiction; the District Delegate can grant them only in the former class of cases. The District Delegate can only dispose of non-contentious cases. Once a contest arises he will have to transfer the case to the District Judge. An application for revocation of a grant originally made in a non-contentious proceedings cannot even be decided by him. 

A District Delegate can also refer a non-contentious matter for disposal by the District Judge. There is no difference in regard to the conclusiveness of a grant made by the District Delegate and the District Judge. The limited jurisdiction granted to District Delegate is not a peculiar feature of the Indian Succession Act 1925. It existed in the earlier Succession Act 1865 and the Probate and Administration Act 1881. Under those enactments ((as well as under the present Act) all contentious proceedings, and all those proceedings in which the deceased at the time of his death did not have permanent abode within the jurisdiction of the District Delegate whether contentious or not had to be disposed of by the District Judge. 

Act XIV of 1926 was thereupon passed by the Central Legislature by introducing Sec.29 in the existing Madras Civil Courts ACat 1873. 

Sec.29(1): The High Court may be general or special order authorise any Subordinate Judge to take cognizance of, or any District Judge to transfer to any Subordinate Judge under his control any proceeding under the Indian Succession Act 1925, which cannot be disposed of by the District Delegates.

Therefore the jurisdiction of a Sub-Judge invested with a power under Sec.29(1) of Madras Civil Courts Act is that of a District Judge and not that of District Delegate under Succession Act. This view is also borne out - under Sec.29(3) which provides a right of appeal from the decision of a Sub Judge as if he is a District Judge. 

Thus a notification under the above section confers a new jurisdiction on a Sub Judge to decide all matters, under the Succession Act, which cannot be disposed of by a District Delegate.

Veerasami J in 1959 (SA No.179 of 1959) observed: “in view of the provisions of Sec.265 and 286 of the Indian Succession Act, there can be no doubt that a District Delegate is not competent to deal with a contentious testamentary matter. But the power of the Sub Judge of Tuticorin to deal with such a matter is not rested upon the provision in Part IX of the Indian Succession Act, but on the power delegated to him by the notification of the High Court under Sec.29(1) of the Madras Civil Courts Act.

முடிவில், இந்த அப்பீல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சப் கோர்ட் இந்த புரபேட் வழக்கை விசாரிக்க முடியாது. அதை மாவட்ட நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு.

**


Tuesday, November 17, 2020

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (தமிழ்நாட்டில்)

 பவர் ஆப் அட்டார்னி பத்திரம்


பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. 

அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4).


ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது.


பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம் எழுதி அவரின் ஏஜெண்டை நியமித்தால், அந்த பவர் பத்திரத்தை, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து இருக்க வேண்டும். 


பிரிவு 33(1)(பி):  (இந்த சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

இந்த பதிவுச் சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர், பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு கோர்ட் மாஜிஸ்டிரேட் முன்பு எழுதி கையெழுத்து செய்து, அதை அந்த மாஜிஸ்டிரேட் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். 


பிரிவு 33(1)(சி): (இந்தியாவுக்கு வெளியே வசித்து வருபவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

பவர் எழுதிக் கொடுப்பவர் இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் வசித்து வந்தால், அவர் பவர் எழுதிக் கொடுப்பதாக இருந்தால், அவர் அந்த பவர் பத்திரத்தை அங்கேயே அவர் வசிக்கும் பகுதியில் எழுதி, அதை, அந்த நாட்டில் உள்ள நோட்டரி வக்கீல் அல்லது கோர்ட் நீதிபதி, அல்லது இந்திய தூதரக அதிகாரியான கான்சல் (Consul), அல்லது துணை தூதரக அதிகாரியான வைஸ்-கான்சல் (Vice-Consul) அதிகாரியிடம் ஒப்புதல் கையெழுத்தை பெற வேண்டும். அதை இந்தியாவுக்கு அனுப்பினால், அவர் நியமித்த பவர் பத்திரத்தை இந்தியாவில் உள்ள பவர் ஏஜென்ட் அதற்குரிய முத்திரை தீர்வை செலுத்தி பதிவு செய்து கொள்வார். அதை உபயோகித்துக் கொள்ளலாம்.


இப்படி வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரங்களை இரண்டு வகையாக சொல்லாம். ஒன்று - காமன்வெல்த் நாடுகளில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரம். மற்றொன்று - காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி போன்ற ஆட்சிகள் நடக்கும் நாடுகள். காமன்வெல்த் என்பது பழைய பிரிட்டிஷ் அரசாட்சி செய்த நாடுகளை இவ்வாறு சொல்லலாம். அங்கு, இந்தியாவில் இருப்பதை போன்றே வக்கீல்கள் கோர்ட் முறை இருக்கும். எனவே அந்த நாடுகளில் பவர் பத்திரம் எழுதினால், அதை அங்குள்ள நோட்டரி வக்கீல் முன்னர் அத்தாட்சி செய்து கொண்டால் போதுமானது. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள். இங்கு காமன் லா என்னும் சட்ட முறை உள்ளது.


ஆனால், காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர் இந்த பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தான் சென்று அத்தாட்சி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிய அலைச்சலும் இருக்கும். ஏனென்றால், அவர் வசிக்கும் பகுதியில் இந்திய தூதரகம் இல்லாமலும் இருக்கும். எனவே அவர் அங்குள்ள பெரிய நகரத்துக்கு சென்று அங்கு இருக்கும் இந்திய தூதரகத்தில் அதைச் செய்ய வேண்டி வரும். துபாய், யூ.ஏ.ஈ. (எமிரேட்), ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்டான், போன்ற நாடுகளில் காமன் லா சட்ட முறை இல்லை. 


விதிவிலக்கு:

இந்தியாவுக்குள் வசிப்பவர் ஒரு பவர் பத்திரத்தை எழுத நினைத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் நேரில் சென்று எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி) ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், மற்றும் அரசு அதிகாரிகள் இவர்கள் ஒரு பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர்கள் நேரில் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பதிவு செய்யாமலேயே அவர்களின் பவர் பத்திரம் செல்லும். 


பிரிவு 33(2): மேற்சொன்னபடி எழுதிய பவர் பத்திரங்கள், (பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி)-ல் சொல்லியுள்ளபடி, அவர்கள் தான் எழுதிக் கொடுத்து, பதிவாளர் முன்பு சென்று பதிவு செய்து கொடுத்துள்ளார்கள் என்று அதை பார்க்கும் வேறு பதிவாளர் கருதினால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரை நேரில் அழைக்காமல், அந்த பவர் பத்திரமே போதும் என்று ஏற்றுக் கொள்ள அடுத்த நடவடிக்கையை பதிவாளர் செய்ய வேண்டும். 


பிரிவு 33(3): பிரிவு 33 (1)(சி) ன்படி எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள், (அதாவது, உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், அரசு அதிகாரிகள் இவர்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள்) அவர்கள் தான் எழுதிக் கொடுத்துள்ளார்கள் என்று பதிவாளர் கருதினால், (நம்பினால்) அதை ஏற்றுக் கொண்ட அடுத்த நடவடிக்கையை தொடரலாம். சந்தேகமாக இருப்பதாக கருதினால், அந்த பதிவாளரே நேரி்ல், உடல்நிலை சரியில்லாதவரின் வீட்டுக்கோ, அல்லது சிறையில் இருப்பவராக இருந்தால் சிறைக்கோ, அல்லது அரசு அதிகாரியை நேரில் சந்தித்தோ, அது அவர் எழுதிக் கொடுத்தது தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவாளரால் நேரில் செல்ல முடியவில்லை என்றால், அதற்கு ஒரு கமிஷன் அதிகாரியை நியமித்து அவரைக் கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம்.  


பிரிவு 33(4): இவ்வாறு ஒரு பவர் பத்திரம் மேலே சொல்லியுள்ளபடி எழுதி பதிவாகி (அதாவது அத்தாட்சி செய்யப்பட்டு) இருந்தால், அதன் அசல் பத்திரத்தை ஒரு பதிவாளரிடம் கொடுக்கும்போது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு வேறு சாட்சியம் வேண்டும் என்று கேட்க கூடாது என்று இந்த உட்பிரிவு சொல்கிறது.

**

தமிழ்நாட்டில் திருத்தல் சட்டம்;

தமிழ்நாட்டில் இந்த பவர் பத்திரங்களை வியாபார நோக்கங்களுக்கு வாங்குவதால், அதிகமான தில்லு முல்லுகள் ஏற்பட்டன. எனவே அதை சரி செய்யும் பொருட்டு, 2012-ல் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, சொத்துக்களை விற்கும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை பதிவு அலுவலகத்தில் உள்ள புத்தகம் 1-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த பவர் பத்திரத்தின் பதிவு விவரம் அந்த சொத்தின் வில்லங்கத்தின் அட்டவணையில் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. குடும்ப உறுப்பினரை ஏஜென்டாக நியமித்தால் அதற்கு ரூ.1000 பதிவுக் கட்டணம் என்றும், வெளி நபராக இருந்தால் அதற்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் என்றும் திருத்தம் செய்துள்ளது. மேலும், 2012 முதல் எழுதிப் பெறப்படும் சொத்தின் விற்பனை செய்யும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை, அதை பதிவு செய்த ஒரு மாதத்துக்குள் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்துக்கு மேல் கடந்து விட்டால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக ஒரு அரசு மருத்துவரிடம் LIfe Certificate என்னும் சான்றிதழ் பெற்று அந்த பவர் பத்திரத்தை உபயோகப்படுத்தலாம் என்று விளக்கம் சொல்லி உள்ளது.  


சொத்தின் விற்பனை சம்பந்தப்பட்ட பவர் பத்திரங்களை வேறு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது, சில நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. அது புத்தகம்-1ல் பதிவு செய்ய வேண்டிய பவர் ஆகி இருப்பதால், அந்த சொத்து இருக்கும் பதிவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி, அனுமதி பெற்றே பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே கிரயப் பத்திரத்தை நேரில் சென்று எழுதிக் கொடுப்பதே நல்லது என்றும், இப்படி வேறு பதிவு அலுவலகத்தில் இந்த பவர் பத்திரம் பதிவு செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. இதை சுலபமாக செய்ய அரசு முன்வர வேண்டும்.

**