கனடாவின் புதிய பிரதமர்:
கனடாவின் புதிய
பிரதமராக ஜஸ்டின் ட்ருடவ் (43 வயது) JUSTIN TRUDEAU தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்; இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின்
மகனாம் (1968-84 வரை பிரதமராக
இருந்த பியரி ட்ருடவ்-ன் மகன்); இவர் பிறந்தது 25, டிசம்பர் 1973ல், ஓ கிறிஸ்துமஸ்
நாளில்; வயதில் ரொம்ப சின்னவராகத்தான் இருக்கிறார்; 2005ல் திருமணம் செய்து
கொண்டார்; மனைவியின் பெயர் சோபியா கிரிகோரி
Sophie Gregorie. இவர்களுக்கு
மூன்று குழந்தைகள்;
உலகின் மிகப்
பெரிய நாடுகளில் 2-வது நாடு கனடா; இதற்கு 201.10.2015ல் தேர்தல் நடந்தது; 338 பார்லிமெண்ட் தொகுதிகள் உள்ளன;
இதில் லிபரல் கட்சி 182 இடங்களைப் பெற்று
வெற்றி பெற்றது; இதனால்
இக்கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ருடவ், கனடா நாட்டின் புதிய பிரதமராக
பதவிக்கு வருகிறார்;
இவருடன்
எதிர்த்து போட்டியிட்ட பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான "கன்சர்வேட்டிவ்
கட்சி" பெரும் தோல்வி அடைந்ததாம்; இதற்கு மொத்தமே 99 இடங்கள் மட்டுமே
கிடைத்ததாம்; இவர், நாட்டின்
பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால்
மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளாராம்; இது இல்லாமல், அவர் பிரதமாக
இருந்தவரை, அமெரிக்காவுடன்
மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளாராம்;
ஆனால், புதிய பிரதமர்
ஜஸ்டின் ட்ருடவ், அமெரிக்காவுடன்
நேசக்கரம் நீட்டுவாராம்; பொருளாதாரத்தை மேம்படுத்துவாராம்; மக்கள்
எதிர்பார்க்கிறார்கள்;
கனடா மக்களுக்கும் அதன் புதிய பிரதமருக்கும்
வாழ்த்துக்கள்!
**
No comments:
Post a Comment