கங்கை யாடிலென் காவிரி
யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை
யாடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீ
ராடிலென்
எங்கும் ஈசன்என் னாதவர்க்கு
இல்லையே.
ஆடில் என் = தீர்த்தமாடுவதால்
என்ன பிரயோசனம்?
கொங்குதண் = மணமுள்ள
குளிர்ந்த.
குமரித்துறை = கன்னியாகுமரித்துறை.
ஓங்குமா கடல் = அலைகள்
ஓங்குகின்ற பெரியகடல்.
ஓதநீர் = வெள்ளப்
பெருக்கான நீர்.
என்னாதவர்க்கு இல்லையே
= என்று சொல்லி வணங்காதவர்களுக்குப் பயன் இல்லை.
No comments:
Post a Comment